ஆவிக்குள்ளாகுதல் Chicago, Illinois, USA 61-0428 1கடந்த இரவு என்று நான் விசுவாசிக்கிறேன். நான் இங்கு நின்றுகொண்டு சகோதரன் டேவிட்டைக் குறித்துப்பேசிக் கொண்டிருந்தது வினோதமாக இருக்கிறது. அவர் இங்கே இன்றிரவு மேடையின் மேலாக காணப்படுகிறார். நல்லது, அது மிக அருமையாக இருக்கிறது. சகோதரன் டேவிட் நீங்கள் இங்கு சிக்காகோவில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இன்றிரவு இங்கே என் பின்னால் சகோதரர்கள் இருப்பது அருமையானது; ஜெபத்தை அறிய வரும்போது... ஆதரவு மிகச் சிறந்ததாக இருக்கிறது. (தெளிவில்லாத வார்த்தைகள்) எனக்காக ஜெபத்தில் இருங்கள். இன்றிரவு நம்மிடையே பரிசுத்த ஆவியானவர் வந்து கிரியைகளை நடப்பிப்பதைப் பார்க்கும்படி எதிர்பார்ப்போடு மக்களுடன் உட்காரும்படி இன்றிரவு அரங்கத்திற்குள் மீண்டும் வருவது அவ்வளவு அருமையானது; மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஞாயிறு மாலை அல்லது ஒருவேளை பிற்பகல் முதல் இங்கே இருந்துகொண்டு ஆராதனையில் ஒவ்வொரு மணி நேரத்தையும் நாங்கள் நிச்சயமாகவே அனுபவித்தோம். நாங்கள் அப்பேற்பட்ட, அருமையான அற்புதமான நேரத்தைக் கொண்டிருந்தோம்; பரிசுத்த ஆவியானவர் மிகச் சிறந்த காரியங்களை நம்மிடையே செய்தார். அவர் வியாதியஸ்தர்களை சுகமாக்கினதை நாம் பார்த்தோம். அற்புதங்களைச் செய்ததை; மக்களை இரட்சித்ததை; அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பினதை; அதுபோன்ற மகத்தான காரியங்களைச் செய்ததை நாம் பார்த்தோம். அவர் செய்த காரியங்களைப் பார்த்த பிறகு அதைக்காட்டிலும் வேறு என்ன அவரிடம் நாம் அதிகமான காரியத்தைக் கேட்கமுடியும்? 2நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியும்போது, நாம் சந்தோஷப்படுகிறோம். கடைசி நாட்களிலே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு பேசுவதற்காக சுவிசேஷசத்தின் ஊழியக்காரர்களாக நாம் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். ஊழியக்காரர்களாகிய நமக்கு இது ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. கடைசி சபைக்கு, கடைசிகாலச் சபைக்கு; இந்த பூமியிலே இந்த நாளிலே உட்கார்ந்து பேசுவதற்கு சிலாக்கியமாக இருக்கிறது. நாம் இப்பொழுது இந்தக்கடைசி கால சபைக்குப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நான் அதை உண்மையிலேயே என் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறேன்; அது கடைசியாக லவோதிக்கேயா சபை காலத்தில் முடிவடையப் போகிறது; இயேசு வருவார் எல்லாம் முடிவடைந்துவிடும். அது நடக்கும்போது நான் மகிழ்ச்சி அடைவேன். நான் பழைய யோவானைப்போல உணர்கிறேன், 'கர்த்தராகிய இயேசுவே வாரும்“ என்று அவன் சொன்னான். 'அவ்விதமாகவே”‚ அதை நான் போதுமான அளவிற்குப் பார்த்துவிட்டேன். நான் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தேன், பார்ப்பதற்கு அது சிறப்பாக ஆவதற்குப் பதிலாக இந்த உலகம் எல்லா நேரத்திலும் மோசமாகவே போய்க் கொண்டிருக்கிறது. அதனால் யோவான் சொன்னதைப் போல, 'கர்த்தராகிய இயேசுவே வாரும்“ என்பதே‚ அதன் பிறகு எல்லாம் முடிவடைந்துவிடும் என்று நான் நினைத்தேன். 3அவர்கள் இன்னுமாய் அச்சிடப்பட்ட தரிசனமாகிய பிறகு காணும்... அந்த சிறிய புத்தகம் இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் அதைப்பற்றி என் இருதயத்தில் நினைக்கும்போது இன்னும் அதிகமான கூட்டங்களில் சரியானதைச் செய்ய வேண்டும் என்றும், நாம் எதையும் செய்வதற்கு அதிகமான நேரம் இருக்கப் போவதில்லை என்றும் இருதயத்தில், (உணர்வுகள்) பற்றி எரிகிறது. இப்பொழுது நாளை காலை சரியாக இங்கே மைதானத்தில் வணிகர்களுடைய காலை உணவு கூட்டம் இருக்கிறது என்று விசுவாசிக்கிறேன். அது ஏற்கனவே அங்கே ஒரு வணிகர்களுடைய காலை உணவுக் கூட்டம், நாளைய தினத்தில் இருக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். பொதுமக்கள் இதற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏன், நீங்கள் வர எவ்வளவு நாட்களானாலும், நாங்கள் சந்தோஷமாக இருப்போம். காலை வேளையிலே, நான் பேசுவது தேவனுக்குப் பிரியமாக இருக்கும் என்றால், இது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. காலை உணவுக் கூட்டவேளையில், பேசுகிறவர்களில் குறைந்தபட்சம் நானும் ஒருவனாக இருப்பது என்பதும், மேலும் தேவன் நம் அனைவரையும் சந்திப்பார் என்றும் நான் நம்புகிறேன். இங்கே பட்டணத்தில் உள்ள வணிகர்களாகிய உங்களில் சிலர், இந்த காலை உணவு கூட்டங்களில் ஒன்றிற்கு நீங்கள் ஒருபோதும் சென்றிருக்கவில்லை என்றால், நீங்கள் வந்து தேவன் மற்ற வணிகர்களாகிய மனிதர்களுக்கு செய்ததைக் கேட்டால், அது நிச்சயமாக உங்களுக்கு நலமானதாக இருக்கும். 4இப்பொழுது உங்கள் வணிகத்தைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு செழிப்பான மனிதராக இருக்கலாம். ஆனால்... உங்களை சிறந்தவர்களாக ஆக்குவதற்காக ஏதோவொன்றை நாங்கள் அறிமுகம் செய்யமுயற்சி செய்யவில்லை... அல்லது உங்களுடைய வணிகத்தைச் சிறப்பாக்க முயலவில்லை. உங்களை சிறந்தவர்களாக ஆக்குவதற்காக ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்த முயற்சிக்கிறோம். அது கிறிஸ்துவாக இருக்கிறது. பாருங்கள், கிறிஸ்துவே. நான் ஒரு இரவு சொன்னதைப் போல சபையானது உலகத்துடனும், கல்வியுடனும், கேளிக்கைகளுடனும், பொழுது போக்குகளுடனும், மேலும் அதைப் போன்றவற்றோடு ஒப்பிட முயற்சி செய்து நீண்ட காலத்திற்கு முன்பே அதன் திட்டத்தை இழந்து போனது. அவைகளுடன் நம்மை ஒருபோதும் ஒப்பிடக் கூடாது. இருளின் பிள்ளைகள், வெளிச்சத்தின் பிள்ளைகளைக் காட்டிலும் அதிக புத்திக் கூர்மை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதிக அறிவு உள்ளவர்கள் என்று இயேசு சொன்னார். நாம் அவர்களுக்கு ஒருபோதும் பொழுது போக்கைக் கொடுக்கமுடியாது, எல்லாவற்றிற்கும் மேலாக, சுவிசேஷம் பளபளப்பாக இல்லை; அது ஜுவாலிக்கிறதாக இருக்கிறது. அது ஜொலிக்கிறது. அவர்கள் நம்மில் ஒருவராக மாறாவிட்டால் நாம் பெற்றிருக்கிற, இந்த உலகம் பெற்றிராத, பெற முடியாத இயேசுவை நாம் உடையவர்களாக இருக்கிறோம். அதுதான் காரியம், நாம் இயேசுவைப் பெற்றிருக்கிறோம். 5நாம் அவர்களைப் போல புத்திக்கூர்மை உடையவர்களாக இல்லை. நாம் அறிவியலில் முன்னேறியவர்கள் அல்ல. நமக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. நாம் அவர்களைப் போல் இருக்க முயற்சிக்கவில்லை, சிறந்த கல்வி அல்லது சிறந்த பள்ளிகள் அல்லது பலவற்றை கொண்டிருக்கவில்லை, நம்முடைய சபை இந்தப் பள்ளியைக் கொண்டிருக்கிறது. மற்றும் அதைப் போன்று உடையதாயிருக்கிறது என்று சொல்ல முயற்சிக்கவில்லை. அது எல்லாம் அந்த வகையில் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் நாம் இயேசுவை பெற்றிருக்கிறோம். அதைத்தான் இந்த உலகத்திற்கு கொண்டுவர முயற்சி செய்கிறோம். இயேசு கிறிஸ்துவை, அவர் தேவனுடைய குமாரனாக இருக்கிறார், அவர் நம்முடைய இரட்சகராக இருக்கிறார், அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையில் அவரை நாம் அறிந்திருக்கிறோம். அது தான் உண்மையான காரியமாய் இருக்கிறது. இப்பொழுது நம்மில் சிலர், (நான் நானே,) அவருடைய புத்தகத்தை (வேதாகமம்) நன்றாக அறிந்திருக்கிறோமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அவரை நன்றாக அறிந்திருக்கிறேன். இப்பொழுது எனக்கு தெரிந்ததெல்லாம் அவரை அறிந்திருப்பதுதான். அவருடைய புத்தகத்தை அறிந்து இருப்பது உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்காது. ஆனால் அவரை அறிந்திருப்பதே நித்தியஜீவன். அந்த புத்தகத்தினுடைய நபரை, அவரை அறிந்திருப்பதுதான் ஜீவனாக இருக்கிறது. 6இப்பொழுது மீண்டுமாய் நாளை இரவு, அதன்பிறகு, கர்த்தருக்குச் சித்தமானால் மற்றுமொரு சுகமலித்தலின் ஆராதனையை நாம் எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு நாளையோ... அல்லது ஞாயிறு மதியம் இந்தக் கூட்டம் முடிகிறது. அதன்பிறகு வடக்கு பிரிட்டிஸ், கொலம்பியா, டாவ்சன் கிரீக் (Dawson Creek) மேலும் கிராண்டி பிரைய்ரி (Grande Prairie), போர்ட் பரிசுத்த யோவான் (Fort St.John); அந்த நாட்டிலுள்ள பகுதிகளுக்கு, ஒருவேளை மீதமுள்ள கோடைகாலம் முழுவதும் நான் போகிறேன். அதனால் இப்பொழுது எங்களுக்காக ஜெபத்தில் இருங்கள்; காலை வேளை சிற்றுண்டி கூட்டத்தில் உங்களைக் காணவும் மற்றும் கூட்டத்தின் ஊடாகவும் தொடர்ந்து உங்களைக் காண்போம் என்றும் நம்புகிறோம். இப்பொழுது புதியவர்களாகிய நீங்கள் மறந்துவிட வேண்டாம், இந்த இரவின்பொழுதிலே சகோதரர்களாகிய இவர்கள் இந்த கூட்டத்தில் உட்கார்ந்து இருப்பதற்கான காரணம், அவர்கள் எல்லாரும் இந்த அதே சுவிசேஷத்தினுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய சபைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று கண்டுபிடித்து ஞாயிறு காலையிலே நிரப்பத்தக்கதாக ஒரு பெரிய பேரணியாகச் செல்ல இருக்கிறார்கள். இயேசு வரும்வரை இது ஒரு உண்மையான, உண்மையான, நல்ல எழுப்புதல்களை நகரத்தின் ஊடாகக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம். 7இப்பொழுது இங்குள்ள சிறிய சகோதரன் ஜோசப், போஸ்சே (Boze) நாங்கள் ஒரு நாள் லேக்ஷோர்டிரைவ் என்ற இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது அவர் எப்பொழுதும் பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய உடைப்பட்ட ஆங்கிலத்தில்'பிரட்டர் பிரான்ஹாம் (Brudder Branham) என்னுடைய இருதயத்தில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்கிறது. அது என்னவென்றால் நான் சிக்காக்கோ அசைக்கப்படுவதைக் காண விரும்புகிறேன் என்று சொன்னார். சிக்காக்கோ அசைக்கப்படுவதை நான் காண விரும்புகிறேன் “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் நியூயார்க்கிலிருந்து இங்கு வந்ததே, 'சிக்காக்கோ அசைவதைக்காண வேண்டும்”, என்பதே என்றார். மற்றுமொரு காலையிலே என்னுடைய நேர்காணல்களுக்கு முன்பாக நான் யோசேப்புடன் காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டேன். (நான் எப்பொழுதும் அவரை அதிகமாக நேசிக்கிறேன்)... அதன்பிறகு நான் சொன்னேன், 'சகோதரன் யோசேப்பே உங்களுடைய மகத்தான வாஞ்சை பூர்த்தி செய்யப்பட்டது, நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா என்பதை நான் நம்பவில்லை, பாருங்கள்‚ நீங்கள் ஒரு பட்டணத்தை அசைப்பது, ஒரு நாட்டை அசைப்பது… என்பதைக்குறித்துச் சொன்னபோது, அது இங்கே சுற்றித்திரிகிற அணுகுண்டு நெருப்புக்கு இரையாகும் செத்தைக்கு இல்லை. அது சபையை அர்த்தம் கொள்கிறது. சபைதான் ஒரு அசைவைப் பெறுகிறது. உலக சபைகளின் குழுகிடையாது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சரீரம் அந்த ஒன்றுதான் அதை அசையச் செய்து மீண்டுமாக அந்த வரிசைக்கு கொண்டு வருகிறது. சிக்காக்கோவில் உள்ள மக்கள் கடந்த சில வருடங்கள் ஆறு அல்லது ஏழு வருடங்களாக ஒரு உண்மையான ஒரு அசைவைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டார்கள். மகத்தான தேவ மனிதர்கள் இந்த பட்டணத்திற்கு வந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு பிரசங்கித்தார்கள். அப்பட்டமாக இதுவரைக்கும் எந்த ஒரு சாக்குப்போக்குக்கும் இடமில்லாமல் அதிசயங்களும், அற்புதங்களும், அடையாளங்களும் நடைபெற்றது. அதில் எந்த ஒரு சாக்குப் போக்கும் கிடையாது. அது ஒன்று மனந்திரும்புதல் அல்லது அழிவாக இருக்கிறது. அதுதான் காரியம். 8இப்பொழுது நீங்கள் கணக்கில் கொள்வீர்களானால் பாடங்களை எடுத்துக்கொள்வது என்று நாம் அதை அழைக்கும் வண்ணமாக நான் ஒருசில வேத வாக்கியங்களையும், குறிப்புகளையும் எழுதி வைத்து; ஒரு சிறிய பொருளின் மேலாக நான் பதினோரு மணிவரைக்கும் போக வேண்டும் என்று இருக்கிறேன். சிறிது நேரம் தாமதிக்கும். அதனால் கடந்த இரவு நான் (எல்லோரும் சிரிக்கிறார்கள்) உங்களுக்கு நன்றி. நீங்கள் அருமையானவர்கள்‚ ஒவ்வொரு இரவும்... பில்லி என்னிடம், 'நீங்கள் சிக்காகோவிற்கு போகும் போது, நீங்கள் ஒரு இரவு ஒன்பது முப்பது மணிவரை செல்ல முடிந்தால் நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் அதைச் செய்யமுடிந்தால் நான் அதைப் பார்க்கவிரும்புகிறேன்'', என்று சொல்வான். 'ஓ' அது சுலபமாக இருக்கும் எந்த இரவிலும் நான் இருபது நிமிடங்களுக்கு மட்டும் தான் பிரசங்கிக்கப்போகிறேன்'', என்று நான் சொன்னேன். ஒவ்வொரு இரவும் அவன் வெளியே செல்லும்போது, 'இந்த இரவிலே எவ்வளவு நேரமானது‚ அதைத் தவறவிட்டீர்களே‚'' என்று கேட்பான். நான் இரண்டுமணி நேரம் கூட இல்லையே‚ என்று அதுபோல் சொல்வேன். ஆனால் நான் எதை அறிந்துள்ளேனோ அதைச் சொல்ல அப்படியாக விரும்புகிறேன். அது என்னை அப்படியே அமிழ்த்திவிடுகிறவரை செல்கிறது. 9ஒருமுறை ஒரு வயதான பிரசங்கியார் ஒரு சபைக்குச் சென்றார். இது நகைச்சுவை செய்வதற்கான இடம் இல்லை என்று நான் அறிவேன். அதை நான் நகைச்சுவையாக அர்த்தம் கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது நான் அதைவேறுவழியாக சிந்திப்பதற்காக ஒரு நொடிபொழுதுக்காக மாற்றுகிறேன். அவர் ஒரு சபைக்குச் சென்றார். முதல் இரவு அவர், 'மனந்திரும்புதல்“ மேலாகப் பிரசங்கித்தார். இரண்டாவது இரவும் அவர், ''மனந்திரும்புதல்'' மேலாகப் பிரசங்கித்தார். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இரவும் அவர், ''மனந்திரும்புங்கள்'' என்றே பிரசங்கித்தார். நல்லது, அது சரியாகவே இருந்தது. ஆனால் சபையின் மூப்பர்கள் அவரை வெளியே அழைத்து 'டாக்டர், நாங்கள் உங்களுடைய மனந்திரும்புதலின் செய்தியை மெச்சுகிறோம். ஆனால் ஆறு இரவுகளாக நீங்கள் மனந்திரும்புதல் என்று அதே செய்தியின் மேலாகவே சரியாகப் பிரசங்கித்தீர்கள்“, என்று சொன்னார்கள். 'ஓ, நல்லது'' அதுதான் சரியாக இருக்கிறது'', என்று அவர் சொன்னார். 'உங்களிடத்தில் வேறொரு செய்தி இல்லையா?'' என்று கேட்டார்கள். 'ஓ, ஆமாம். ஆனால் இப்பொழுது முதலில் அவர்கள் எல்லோரும் மனம் திரும்பட்டும். அதன்பிறகு ஏதாவது ஒரு காரியத்தைக்குறித்து நான் பிரசங்கிக்கிறேன்“, என்று சொன்னார். நீங்கள் பாருங்கள், அவர்கள் எல்லோரும் மனம்திரும்பின பிறகு, அதன் பிறகுஅவர் அவர்களுக்கு வேறு பொருளின் மேலாகப் பிரசங்கம் செய்வார். அதுதான் மிகச் சிறந்த அழகான தத்துவமாக உள்ளது, பாருங்கள். நாம் அனைவரும் மனம்திரும்பும் வரை, மனந்திரும்புவோம். அது நலமானதாக இருக்கும். நான் இங்கே நீண்ட நேரமாக இருப்போம் என்பதை நிச்சயத்திருக்கிறேன். 10இரண்டு இராஜாக்கள் புத்தகத்திலே, மூன்றாவது அதிகாரம் பதினைந்தாவது வசனத்தை நான் படிக்க விரும்புகிறேன். இப்பொழுது ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன் மேல் இறங்கினது. நான் இதிலிருந்து ஒரு பாடத்தை எடுக்க விரும்புவேன் என்றால் நான் ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டியதாயிருக்கிறது. இந்த ஒரு பொருளை நான் இங்கே எடுத்துக் கொள்ளலாம், ''ஆவிக்குள்ளாகுதல்“. இந்த நாட்களிலே பாலஸ்தீனாவிலே மிகவும் ஒரு மாற்றம் உண்டானது. ஒரு மகத்தான காரியம் நிகழ்ந்தது. குறிப்பிட்ட மிகச் சிறந்த தீர்க்கதரிசி காணாமல் போய்விட்டார். மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார். அதைப்போல ஒரு சிறந்த மனிதர் எடுக்கப்பட்டது என்பது சபைக்கும் ஒருமிக பெரிய இழப்பாகும். 11ஆனால் இந்த மனிதன் தேவனுடைய பிரதிநிதியாய் அவர்களுக்கு அனுப்பப்பட்டார் என்று அறிந்து மரிக்காமல் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதாவது மேலாக (பரலோகத்துக்கு) எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது தேசத்திற்கு எவ்வளவு ஒரு ஆறுதலைக் கொடுத்திருக்க வேண்டும். (அதன் பிறகு அப்போதிருந்த சபைக்கும்) இந்த நாளுக்கு, மெய்யாகவே அழகான ஒரு மாதிரியாய் எலியா இருந்தான். ஒருவேளை என்னைக் காட்டிலும் வேதாகமத்தை நன்றாக அறிந்த மனிதர்களிடத்திலிருந்து, வரிசையில் விடுபட்ட, ஆனால் கடைசி நாட்களிலே எலியாவை போன்றும் எலியாவுடைய சபையைப் போலவும் ஒருசெய்தியை கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். மரிக்காமல், ஆனால் மறுரூபமாக்கப்பட்டு மேலே எடுத்துக்கொள்ளப்படவிருக்கும்; அக்கினியானது அதை மகிமையில் எடுத்துக்கொள்ளும். பெந்தெகொஸ்தே அக்கினி அதை மேலே எடுத்துக்கொள்ளும். 12இருப்பினும், தேவன் எப்பொழுதும் ஒருவழியை அவருடைய சபைக்கு உண்டுபண்ணுகிறார். அவர் எப்பொழுதும் ஒரு மனிதனுடன் முடித்துக்கொள்ளும்பொழுது, அவர் இன்னொரு ஒருவரைகாத்திருப்பில் வைக்கிறார். மேலும் தேவன் அவருடைய மனிதனை எடுத்துக்கொள்கிறார், ஆனால் அவருடைய ஆவியை ஒருபோதும் எடுக்கமாட்டார். அவர் எப்பொழுதும் தன்னுடைய ஆவியைக் கொண்டிருக்கிற யாராவது ஒருவரை உடையவராக இருக்கிறார். அது புரிந்துகொள்ளமுடியாத காரியமாக இருக்கிறது. ஆனால் வேதாகமத்தின் மூலமாக அவர் ஒருபோதும் ஒரே நேரத்தில் செயல்பாட்டில் இரண்டு தீர்க்கதரிசிகளை - பெரிய தீர்க்கதரிசிகளைக் கொண்டிருக்கவில்லை, எப்பொழுதும் ஒரே தீர்க்கதரிசியையே கொண்டிருந்தார். அதன்பிறகு அவரை உபயோகப்படுத்தின பிறகு அவரை வெளியே எடுத்துவிட்டு, இன்னொரு நபரை அவருடைய ஸ்தானத்தில் வைக்கிறார். 13அதைத்தான் அவர் செய்தார். அவர் செய்தியாளனை மாற்றிவிட்டார், ஆனால் அதே ஆவியை- எலியா, எலிசா மீது கொண்டிருந்தார். இன்றிரவு எனக்கு நேரம் இருக்கும் என்றால் அதற்குள்ளாக சென்று தேவன் விடாய்த்துப்போன வயதான தீர்க்கதரிசியை, அந்த வேலையிலிருந்து அழைத்துக் கொண்டார் என்பதை குறிப்பிட விருப்பம்கொள்வேன். அவன் யெசேபெலுக்கும் அவளுடைய உலகப் பிரகாரமான கூட்டத்திற்கும் எதிராகப் பிரசங்கித்தான். ஆகாபையும், தலைவர்களையும், ஊழியக்காரர்கள் கூட்டத்தார்களையும், மேலும் எல்லா காரியங்களையும்குறித்து அவன் விடாய்த்துப் போகும்வரைக்கும்; தேவன் அவனை வீட்டிற்கு எடுத்துக்கொள்ளும் வரைக்கும் கத்தி கூச்சலிட்டான். அதனால் அவர் அவனை நதியண்டைக்குக் கொண்டுவந்தார். மேலும்... அதைச் செய்வதற்கு முன்பாக அதே செய்தியை எடுத்துப் பிரசங்கிக்க ஒருவரை அவர் அபிஷேகம்பண்ண விரும்பினார். பாருங்கள்‚ அதே செய்தி தொடர்ந்து இருக்கவேண்டும். அதனால் எலியா எலிசாவுக்கு எதிராக அவனுடைய அங்கியை தூக்கி எறிந்தான். மேலும் எலிசா, எலியாவுடைய அங்கியை அவன் மேலாகப் பெற்றுக்கொண்ட பிறகு அவன் அதை திரும்ப எடுக்க வேண்டியிருந்தது. (எலியா) அதை அவனிடம் வீசினான். அவன் அதைத் திரும்ப எடுத்தாக வேண்டும், ஏனென்றால் அவன் மேலே போகும்போது அது அவனுடைய தோளிலிருந்து விழுந்தது. 14எலியா, எலிசாவை தளர்வடையச் செய்ய முயற்சித்தான் என்று நாம் பார்க்கிறோம். நீ இங்கே காத்திரு, ஏனென்றால் தேவன் என்னை எங்கோ ஒரு இடத்திற்கு மேலே கூப்பிடுகிறார் என்று சொன்னான். அதன்பிறகு அவன் மூன்று நிலைகளுக்கு செல்கிறான் என்று பார்த்தோம். கில்காலிலும், எரிகோவிலுள்ள தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கும், அதன்பிறகு யோர்தானைக் குறுக்கே கடந்து நதியண்டையிலும் அவனுடன் இருந்தான் என்பதை நாம் காண்கிறோம். நாம் கவனிப்போமானால், நாம் கடந்த ஞாயிறன்று ஆபிரகாமையும் அவனுடைய சந்ததியையும் குறித்து பிரசங்கித்ததைப் போன்று சபைக்கு அவர் செய்ததைப் போலவே அவனுக்கு அவர் மூன்று காலத்தின் சந்திப்புகளை கொடுத்தார் என்று நாம் பார்த்தோம். பணிரெண்டாம் அதிகாரத்தில் நீதிமானாக்கப்படுதலின் மூலமாக அவனை அழைத்தார், பதினைந்தாம் அதிகாரத்தில் இரத்த பலியாகிய பரிசுத்தமாக்கப்படுதலின் மூலமாகவும், பதினேழாம் அதிகாரத்தில் அவருடைய சரீரத்தின் மூலமாக அவனுக்கு பலத்தை ஊட்டும்படியாக... ஆபிரகாம் சரீரத்தில் பரிசுத்த ஆவியைக் கொண்டு வரப்போகிற மகனுக்காக அவனை பலப்படுத்தினார். ஆகவே, லூத்தரின் மூலமாக நீதிமானாக்கப்படுதல், வெஸ்லியின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுதல், பெந்தெகொஸ்தே அசைவின் மூலமாக பரிசுத்தஆவியின் அபிஷேகத்தையும் ஆபிரகாமின் சந்ததிக்கு அவர் செய்தார். அதன்பிறகு சபைக்கு வரங்களைக் கொடுத்து, புத்திர சுவிகாரத்தில் பொருத்தி, அவர் மாமிசத்தில் தேவனாக இருந்து அவராகத் தன்னை வெளிப்படுத்தித் தோன்றினார். சாராள் கூடாரத்தில் அவருக்குப் பின்னால் என்ன செய்து கொண்டிருந்தாள் என்றும் இருதயத்தின் இரகசியங்களை அறிந்து கொண்டும் இருந்தார். 15அந்த செய்திக்குப் பிறகு, அவர் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரனைப் பெறுவதற்காக ஆபிரகாமுடைய சரீரத்தையும் சாராளுடைய சரீரத்தையும் மாற்றினார். அவ்விதமே அந்த சந்திப்புகள்... அந்த சபைகள் சரியாக அந்த இடத்திற்கு வருவதைக் காண்கிறோம். அதைத்தான் இந்த சபைக்கும் அவர் செய்தார். அதே காரியத்தின் மூலமாக அதைக் கொண்டு வந்தார். இப்பொழுது ஒரு கணப்பொழுதில், கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றமாகிப் போவதே அடுத்த காரியமாக இருக்கிறது. நாம் ஒரு மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தைப் பெற்றுக்கொள்வோம். இப்பொழுது ஆபிரகாமும் சாராளும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை அந்த வகையான ஒரு சரீரத்தில் பெற்று எடுக்க முடியாது. அவர்கள் நூறு வயது சென்றவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய சரீரத்தை அவர் மாற்ற வேண்டியதாக இருந்தது. இளம் வாலிபர்களைப் போல் (அவர் செய்தது) அவர்களைத் திருப்பவில்லை. ஆனால் அவர்களை மாற்றினார். ஏனென்றால் அவர்கள் முதலில் இருந்ததைப்போலவே அவர்கள் இருக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் குமாரனைப் பெறுவதற்கு ஏற்றவாறு அவர்கள் சரீரத்தை அவர் மாற்றினார். இப்பொழுது சபைக்கு அடுத்த காரியமாக சரீரம் ஒழுங்கில் இருக்க வேண்டும் என்பதை நாம் காண்கிறோம். வயதான மக்களாக திரும்பச்சென்று வாலிபமாக இருக்கப் போவதில்லை (ஆனால் நாம் அங்கே நிச்சயமாகவே வாலிபமாக இருப்போம்) நாம் குமாரனை சந்திப்பதற்காக நாம் ஒரு மறுரூபமாக்கப்பட்ட சரீரத்தைப்பெற வேண்டியதாயிருக்கிறது. ஏனென்றால் நாம் அவரை மத்திய ஆகாயத்தில் சந்திக்கப் போகிறோம். எடுத்துக்கொள்ளப்படுதல் வருகிறது. ஒரு கணப்பொழுதில், கண்ணிமைக்கும் நேரத்தில் மறுரூபமாகுவோம். 16இப்பொழுது, வெவ்வேறான மூன்று நிலைகளில் தேவன் எலிசாவை அதே செயல் முறையின்மூலமாகக் கொண்டு வந்தார் என்பதை நாம் பார்க்கிறோம். அவன் தீர்க்கதரிசிகளின் பள்ளியில் இருந்து கடந்து, அதன்பிறகு யோர்தானுக்குச் சென்று, யோர்தானைக் கடந்தான். அதன்பிறகு அவன் எலியாவுடைய இரட்டத்தனையான ஆவியை அவன் மேலாகப் பெற்றுக்கொண்டான். இப்பொழுது இயேசு, 'நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளைச் செய்வான் என்றார். அது கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள மாதிரியாக இருக்கிறது. கிறிஸ்துவானவர் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு கிறிஸ்துவிலிருந்த அதே ஆவியானது அவருடைய சபையின் மேலாக வந்தது. இப்பொழுது கிறிஸ்துவானவர் அங்கே ஒரு இடத்தில் மாத்திரம் தான் ஊழியம் செய்யமுடிந்தது, இப்பொழுது உலகம் முழுவதும் அவருடைய சபைக்கு முழு பிரபஞ்சத்திற்கும் ஊழியம் செய்து கொண்டிருக்க முடியும். இப்பொழுது நினைத்துப் பாருங்கள், இன்றிரவு நாம் சிக்காக்கோவில் இருந்துகொண்டு கிறிஸ்துவுடைய ஊழியத்தைச் செய்து கொண்டு இருக்கிறோம். பிலடெல்பியாவிலும் (கிறிஸ்துவின்) ஊழியம் செய்யப்படுகிறது. ஆப்பிரிக்காவிலும், ஜப்பானிலும், ஆசியாவிலும், ஐரோப்பாவிலும், மற்றும் எல்லா இடங்களிலும். இந்த ஒவ்வொரு நிமிடத்திலும் உலகமெங்கிலும் உள்ள மக்கள் தேவனுடைய வல்லமையினால் சுகத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். சரியாக, இந்த நிமிடத்தில் பாருங்கள், உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் அவருடைய ஆவி இந்தக் கடைசி நாட்களிலே இரட்டத்தனையாக ஊற்றப்படுகிறது. 17எரிகோவிலிருந்த மலையின் மேலுள்ள வேதபாட சாலையிலிருந்து எலிசா திரும்பி வந்து கடந்து சென்ற எலியா செய்ததைப் போன்று அவன் சரியாக செய்த அதே அற்புதத்ததைக் கண்டார்கள். 'எலியாவின் ஆவி எலிசாவின் மேல் தங்கியிருந்தது'' என்று அவர்கள் சொன்னார்கள். அதன்பிறகு அந்த தேவனுடைய ஆவி இந்த தீர்க்கதரிசியின் மேல் இருக்கிறது என்று அந்த மக்கள் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு சில அற்புதங்களை அவன் செய்ய முடியுமா என்றும் சில நன்மையான காரியங்களைச் செய்ய முடியுமா என்றும் அவனிடத்தில் அவர்கள் ஆலோசனை செய்தார்கள். நாம் எலியா கட்டினது போன்று ஒரு அழகான பட்டணத்தைக் கொண்டிருக்கிறோம். பார்ப்பதற்கு அழகான காட்சிகளாய் இருக்கிறது. ஒரு மலையின் மேலாக பள்ளியைக் கொண்டிருக்க நல்ல இடமாக உள்ளது. ஆனால் இங்கே உள்ள தண்ணீர் கசப்பாக இருக்கிறது என்று கூறினான், மேலும் அவர்களுக்கு புதிய ஒரு ஊற்று தேவைப்பட்டது. 18ஆம் உண்மையில், அது அவர்களுக்கு மாற்றப்பட்டது, அவர்களுக்கு திறக்கப்பட்ட ஒரு புதிய நீரூற்று வேண்டியதாக இருந்தது. உங்களால் புதிய திராட்சை இரசத்தை பழைய துருத்திகளில் வைக்க முடியாது, அது அவைகளை வெடிக்கச் செய்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியும். நமக்கும் கூட இந்த நாளில் ஒரு மாற்றப்பட்ட தண்ணீர் தேவை என்று நான் நினைக்கிறேன். நமக்கு ஒரு உப்பு நிறைந்த தோண்டி (மண்பாத்திரம்) வேண்டும். இதற்கு முன்பு எதுவும் இல்லாத ஒரு உப்புத் தோண்டி வேண்டும். தேவன் அதை வழக்கமாகச் செய்கிறார். ஒன்றும் அறியாத ஒரு சிறிய மனிதனை எங்கிருந்தோ எழுப்பி சடங்காச்சாரமான சிலபழைய உபதேசத் தண்ணீரில் தோண்டி உப்பைப் போடும்படி செய்கிறார். முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அவையெல்லாம் மீண்டும் இனிமையாக மாறுகிறது, வேறொரு எழுப்புதல், பரிசுத்தஆவி ஒவ்வொருவர் மேலும் விழுகிறது. எல்லா இடங்களிலும் செல்கிறது. அந்த காரியம்தான் நமக்கு இந்த இரவில் தேவையாய் இருக்கிறது. மீண்டுமாய் மற்றொரு தூக்கி எறிகிற உப்பினால் தண்ணீரை இனிப்பாக்குவது தான் நமக்கு தேவையாயிருக்கிறது. (நீங்கள் அப்படியாக நினைக்கவில்லையா?) ஞாபகம் கொள்ளுங்கள், அதற்குள் ஒன்றும் இல்லாத ஒரு புது தோண்டியை எடுத்து அதற்குள்ளாக உப்பைப் போட்டான். இப்பொழுது உப்பு தொடர்பு கொண்டால் அது ஒரு சுவையாக இருக்கும், ஆனால் அது முதலில் சேர்க்கப்படவேண்டும். அதனுடைய சேர்க்கப்படுதலை அது உண்டாக்க வேண்டும். 19இப்பொழுது அரசியல் உலகத்தில் கூட ஒரு பெரிய மாற்றம் இருந்தது. அங்கே ஆகாப் என்ற பெயரை உடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் மரித்த பிறகு அவனுடைய குமாரன் யோராம் அவனுடைய ஸ்தானத்தில் ஆட்சி செய்தான். ஓ, நான் யூகிக்கிறேன் அவன் தன்னுடைய தகப்பனைப்போலவே, ஆகாபைப் போலவே, அவன் ஒரு சில காரியங்களை நேராக்கினான். ஆனால் மற்ற பல காரியங்களில் மோசமாக இருந்தான். அதனால் அந்த வழியில், நாம் ஒரு புதிய ஒழுங்குமுறையைச் செய்யும்போது, ஏன் பழைய முறைமைகளில் தேவை இல்லாத சில விஷயங்களை வெளியே எடுத்துவிட்டு, மோசமான ஏதோ காரியத்தை வைக்கிறோம். நாம் வெறுமனே அப்படியே சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த நேரத்தில்அந்த வழியாகத்தான் அது நடக்க வேண்டியுள்ளது. ஆகவே... ஒரு சில இரவுகளுக்கு முன்னால் யோசபாத் ஆகாபை சந்திக்கும்படியாக வந்து, அவனுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தினான் என்பதைக் குறித்து நான் பேசினேன். மேலும் அவன் தவறான கூட்டணியில் சேர்ந்துவிட்டான். 20இப்பொழுது இது வினோதமாக உள்ளது. அதாவது... யோராம் ஆகாபுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டபோது யோசபாத் அவனுடைய பதினெட்டாம் வருட ஆட்சியில் இன்னுமாய் இராஜாவாகவே இருந்தான். யோசபாத் அவனிடத்தில் வந்தான்; அல்லது யோராம் தொல்லையில் அகப்பட்டதினால் யோசபாத்திடம் அனுப்பப்பட்டான். மேலும் யோசபாத் சரியாக திரும்பவும் அவனிடத்தில் வந்து மீண்டுமாக தவறான கூட்டணியில் சேர்ந்துவிட்டான். அவ்விதமாக காரியங்களை நாம் செய்வது என்பது வினோதமாய் இருக்கிறது அல்லவா? அவர்கள் பொரிக்கும் கடாயிலிருந்து அக்கினிக்குள்ளாக குதித்துவிடுகிறார்கள். மக்கள் சரியாக வெளியேறி தேவனுக்கு சேவை செய்ய வருவார்கள்; அதன்பிறகு முதலில் அவர்கள் நேராக உலகத்தின் பின்னால் திரும்பிப் போய்விடுவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா‚ 'நாய் தான் கக்கினதை தின்னவும், பன்றி சேற்றில் புரளவும் திரும்பினது...'' என்று வேதாகமம் சொல்கிறது. முதல் முறையாக வெளியே எடுக்கும் வாந்தியானது போதுமான சுகவீனத்தை உண்டாக்கும் என்றால் இரண்டாம் முறையும் அதே காரியத்தையே செய்யும் என்று ஒரு நாய் அறிந்து இருக்கவேண்டும். மேலும் உலகத்தின் பாவம் ஒருமுறை தவறான ஒன்று என்று ஒரு மனிதனுக்கு உணர்த்தி அவனை மனம் மாறச்செய்யும் என்றால்; இரண்டாம் முறையும் அது அப்படியே செய்யும். அதனால் எப்படியாவது அந்த காரியத்தைச் செய்யாதபடிக்குத் தூரமாக ஏன் இருக்கக்கூடாது? அது உங்களை சுகவீனமாக்கும்படியாகவும், அதைவிட்டு விலகாதபடிக்கு செய்யும் என்றல், அதிலிருந்து விலகி இருங்கள். பொல்லாப்பாக தோன்றுகிற காரியத்திலிருந்து தூரமாக இருங்கள். 21அதுதான் வழி என்றும் அந்த வழியாகத்தான் அது போகிறது என்றும் நாம் காண்கிறோம். அது நம்மிடத்தில் உள்ளது. நாம் அதை எப்பொழுதும் பெற்றிருக்கிறோம். எனவே நாம் அதைத் தொடர்ந்து வைத்திருப்போம் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் யோசபாத், 'நல்லது, நான் போய்ப் பார்ப்பேன்; இந்த புதிய மேய்ப்பன் (Pastor) யோராம், அந்த பழைய மேய்ப்பனைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவனாய் இருப்பான்'', என்று நினைத்தான் என்று நான் கற்பனை செய்தேன். ஆனால் அவன் ஒருபுதிய மேய்ப்பனாகத்தான் இருந்தான். ஆனால், அவன் அதே பழைய முறைமைகளையே கொண்டிருந்தான். அவன் வெறுமனே சில புதிய காரியங்களை அதனுடன் சேர்த்தான். ஒருவேளை அந்த பழைய முறைமை கொண்டிராத சில புதிய திட்டங்களை அவன் சேர்த்தான். அதைத்தான் நாம் இன்று அதிகமாய் செய்துள்ளோம் என்று நான் நினைக்கிறேன். நண்பர்களே‚ நாம் செய்கிறோம். பெந்தெகொஸ்தே மக்களாகிய நாம்‚ நாம் செய்பவற்றில் இது ஒரு மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. நாம் பழைய முறைமையைக் கொண்டிருந்து ஒரு புதிய எழுப்புதலைத் தொடங்க முயற்சி செய்கிறோம். ஆனால் முதல் காரியம் என்னவென்று தெரியுமா, நாம் வெறுமனே புதிய எழுப்புதலுடன் திரும்பவும் அந்த பழைய முறைமையையே புகுத்துகிறோம். அதுதான் காரியத்தை கிழித்தெறிகிறது. 22இப்பொழுது இங்கே சில நாட்களுக்கு முன்பாக அவர்கள் பெந்தெகொஸ்தே களத்தில்' பின்மாரிக்காலம்'' என்ற எழுப்புதலை தொடங்கினபோது அவர்கள் பல இடங்களுக்குச் சென்று 'நாங்கள் ஒரு ஸ்தாபனம் அல்ல'' என்று சொன்னார்கள், பிறகு அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிக இறுக்கமாகத் தங்களை ஸ்தாபித்துக் கொண்டார்கள், பாருங்கள்‚ நீங்கள் புதிய மேய்ப்பருடன் பழைய முறைமையைப் பெற்றுக்கொண்டீர்கள். இப்பொழுது அது வேலை செய்யாது. அது முழு காரியத்தையும், ஒரு குழப்பத்திற்குள்ளாக நீங்கள் எல்லோரும் கிழித்தெறியப்பட்டீர்கள். அதுதான் இங்கே நடந்தது. யோசபாத், புதிய மேய்ப்பனான யோராமை காணும்படி சென்று, அவனுடைய புதியமுறைமையைப் பார்த்து ஒருவேளை அவன் தீர்க்கமான எண்ணத்தைப் பெற்றிருக்கிறான் என்று நினைத்தான். ஆனால் அது வெறும் ஒரு தூண்டில்முள்ளாக இருந்து, மீண்டும் அவன் தொல்லைக்குள்ளாக மாட்டிக்கொள்ளும்படியாகச் செய்தது. அதன்பிறகு எல்லா வசீகரிக்கும் அழகுடனும் மற்ற எல்லா காரியங்களையும் அவனுக்கு அவன் வழங்க வேண்டியதாயிருந்தது. அவன் சென்று... தேவனிடத்தில் ஆலோசனை செய்யாமல், அவர்கள் ஏழு நாட்கள் சென்றார்கள் என்று நாம் பார்க்கிறோம். தேவன் அவர்கள் மத்தியில் இருக்கிறாரா என்று நிச்சயித்துக்கொள்ளாமல் சென்றார்கள். 23இப்பொழுது அதுதான் தொல்லையாக இருக்கிறது. நாம் இந்த காரியங்களை எல்லாம் தொடங்குகிறோம். ஆனால் உண்மையிலேயே தேவன் நம் மத்தியில் இருக்கிறாரா அல்லது இல்லையா, அல்லது ஒரு வகையான ஒரு உணர்ச்சி வசப்படுதலாக இருக்கிறதா, அல்லது ஒருவித வேலையா, அல்லது முட்டாள்தனமான அமைப்பாக இருக்கிறதா அல்லது ஏதோவொன்றா என்று கண்டுபிடிப்பதற்கு நாம் ஒருபோதும் நிறுத்தமாட்டோம். நாம் காரியத்தை தீர்த்துவைப்பதற்கு அது தேவனுடையதா அல்லது இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். அங்கே தான் நாம் நம்முடைய தவறுகளைச் செய்கிறோம் என்று நான் நினைக்கிறேன். சபையானது ஏழு நாட்கள் பயணம் செய்தது. மேலும் நாம் காண்கிறோம் இந்த ஏழு நாட்களின் காலங்களில், தேவன் உடன் இருந்து அங்கீகரித்தார் என்று அதை எடுத்துக்கொண்டு... அதைத்தான் நாம் செய்தோம். அது அங்கீகரிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்வது. 'ஓ, நல்லது. நாம் சென்று சபையில் சேர்ந்துக்கொள்ளலாம். தேவன் அதற்குள் இருக்கிறார் என்கிறோம். அங்கே எந்த ஒரு சந்தேகமும் இல்லை''. 24தேவன் அதற்குள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை தேடிக் கண்டுபிடியுங்கள்! 'விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன...'' என்று இயேசு சொன்னார். அடையாளங்கள், அதிசயங்கள், அற்புதங்கள். நம்முடைய சபைகளைக் காணும்போது குளிர்ந்து போய் அந்தக் காரியங்கள் நடக்காமல், நகரத்தில் ஒரு விசேஷித்த சுவிசேஷகர் அல்லது யாரோ ஒருவர் வரும் வரைக்கும் காத்திருந்து, அதன்பின் சில தம்புருக்களை அடித்து, சிறிது உணர்ச்சி வசப்படுதலைச் செய்கிறோம். தேவன் அதற்குள்ளாக இல்லை! இல்லை இன்றைக்கு என்ன தேவை என்னவென்பதை நான் சொல்லுகிறேன்; மீண்டுமாக பழைய வேதாகமத்துக்கு திரும்புவது தான்; பழைய பாணியிலான பெந்தெகொஸ்தே வேதாகம உபதேசத்திற்கு திரும்பவேண்டும்; பரிசுத்த ஆவிக்குள்ளாகத் திரும்பவேண்டும், தேவனுடைய வல்லமைக்குத் திரும்பவேண்டும், அங்கே இருக்கிற அவர்கள் தேவனுக்கு அடுத்த பசிதாகத்தோடு முழு இரவு ஜெபஆராதனைக்குத் திரும்பவேண்டும். அதுதான் இன்றிரவு நம்முடைய சபைகளுக்குத் தேவையான காரியமாக இருக்கிறது. நம்முடைய அமைப்புக்குள்ளாக அதைக் கொண்டுவர வேண்டும். 25அதன்பிறகு, அந்த ஏழு நாட்களின் பயணம், முடிவிலே அவர்களை ஒரு பாலைவனத்தில் கொண்டு வந்தது என்று கண்டுகொண்டார்கள். மேலும் நாமும் அதே காரியத்தைத்தான் பார்த்தோம். நாம், ஏழுசபை காலங்களைப் பெற்றிருந்தோம். நாம் இப்பொழுது ஏழுசபை காலங்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு எழுப்புதலைப் பெறும்போது நாம் என்ன செய்தோம்? நாம் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு நமக்கென்று இங்கே ஒரு சிறிய குழுவை உண்டாக்கிக்கொண்டு, 'நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், என்கிறோம். இந்த குழுவோடு எங்களுக்குச் சேருவதற்கு வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை''. இந்த குழுவானது அவர்களுக்கென்று ஒரு சிறிய குழுவை ஏற்படுத்திக்கொண்டது. அவர்கள் இங்கே இந்தக் குழுவோடு செய்வதற்கு எந்த ஒரு காரியமும் இல்லை. அவர்கள் முன்னும் பின்னுமாக பரபரப்பாகவும், குழம்பிக்கொள்ளவும் தொடங்குவார்கள். நாம் ஏழு நாட்கள் சென்றும் இவை எல்லாவற்றின் மத்தியிலும் தேவனை நம் மத்தியில் பெற்றிருக்கவில்லை என்று நாம் பார்த்தோம். அது சரியே. 26இப்பொழுது, அங்கே ஒரு நாள் உண்டு அது பகலுமல்ல, இரவுமல்ல என்று தீர்க்கதரிசி சொன்னார். அது ஒரு மந்தாரமான, இருள் சூழ்ந்த நாளாக இருக்கும். நாம் அந்த வகையான ஒருநாளைப் பெற்றிருக்கிறோம். நமக்கு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு நாள் இருந்தது. நாம் கூட்டங்களை கொண்டிருந்து, இயேசுவை தேவனுடைய குமாரனாக, இரட்சகராக ஏற்றுக்கொண்டு மேலும் நம்மிடம் தேவன் மகத்தான காரியங்களைச் செய்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்னும் பெந்தெகொஸ்தே வெளிச்சத்திலிருந்து அது ஒரு நீண்ட காலமாகிவிட்டது. இரண்டாயிரம் வருடங்களாக நாம் ஸ்தாபனங்களை உண்டாக்கிக்கொண்டோம், பெரிய பள்ளிக்கூடங்களைக் கட்டினோம், அமைப்புகளை உண்டாக்கினோம். நாம் பார்க்கிறோம்... இங்கே ஏழாவது சபைக்காலத்தில் எதையோ தவறவிட்டோம் என்று நாம் காண்கிறோம். அங்கே ஏதோ காரியம் தவறாக இருக்கிறது. நாம் ஒரு பாலைவனத்தில் இருக்கிறோம் என்றும் மேலும் எல்லா கனிகளும் வறண்டு போனதையும் நாம் பார்த்தோம். நாம் ஒருவருக்கொருவர் எதிராக இருக்கும்படி மிக இறுக்கமாகி தன்னுள் ஸ்தாபித்துக் கொண்டு இருக்கும்படியும், கனிகள் உலர்ந்துபோனது என்று நாம் கண்டுகொள்ளும்படியும் இன்று பெந்தெகொஸ்தே சபை செய்துள்ளது. அன்பு, சமாதானம், சந்தோஷம், நீடிய பொறுமை, ஐக்கியம் என்பவை நாம் கொண்டிருக்க வேண்டிய விதத்தில்; அவர்கள் தொடக்கத்தில் பெற்றிருந்த விதத்தில் நம்மிடம் ஒருபோதும் இல்லை. பாலைவனத்தில் கனிகள் யாவும் உலர்ந்து போயின. 27உண்மையான ஜீவிக்கிற தேவனை கண்டுபிடிக்காமல் ஏழு நாட்கள் சென்றுவிட்டோம். நாம் சிறிய கொள்கைகளின் பின்னால் சென்றோம். தேவன் லூத்தருக்கு நீதிமானாக்குதலைக் கொடுத்தார், அவர் அதனுடன் சென்றுவிட்டார். அவர் வெஸ்லிக்குப் பரிசுத்தமாகுதலைக் கொடுத்தார், அவர் அதனுடன் சென்றுவிட்டார். பெந்தெகொஸ்தே மக்களை அந்நிய பாஷைகள் பேசும்படி அவர் அனுமதித்தார், மேலும் அவர்களும் அதனுடன் சென்றுவிட்டார்கள். தேவன் மீண்டுமாக சபைக்குள்ளாக முழுமையான பரிசுத்த ஆவியை வல்லமையாக கொண்டுவந்து நாம் ஒரு ஒற்றுமையில் இருக்கும்படி நம்மை அழைக்க விரும்புகிறார். ஒவ்வொரு உள்ளுர் சபைகளிலும் எல்லா ஆவிக்குரிய வரங்களும் கிரியை செய்யும்படி விரும்புகிறார். ஆம் தேவன் இல்லாத ஏழு நாட்கள் அவர்களை வனாந்திரத்துக்கு நடத்தியது. இப்பொழுதும் அதே காரியம் தான். அவருடைய கனிகள் காய்ந்து போயிற்று. அவர்கள் மலை மேலிருந்தும், பசுமையான பள்ளத்தாக்கிலிருந்தும் அதைப் போன்றவற்றிலிருந்தும் கடந்து சென்றுகாய்ந்து போன இடங்களைக் காணத்தொடங்கினார்கள் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். 28உங்களுக்குத் தெரியுமா, ஒவ்வொருவரும் ஒரு மலை உச்சி அனுபவத்தையே விரும்புகிறார்கள், ஒருபோதும் பள்ளத்தாக்கை எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை. ஒவ்வொருவரும், பெந்தெகொஸ்தே சபையும் கூட; ஒவ்வொரு இரவும் நீங்கள் கூச்சல் இடவில்லை என்றால்; நடனம் பண்ணவில்லையென்றால்; மேலும் கீழும் குதிக்கவில்லையென்றால்; அந்நிய பாஷைகள் பேசவில்லை என்றால்; தரையில் எங்கும் ஓடவில்லையென்றால் அதைப் போன்று அல்லது வேறு ஏதாவது செய்யவில்லை என்றால்; உங்களிடத்தில் அது கூட்டம் நடந்ததாக இருக்காது. நல்லது, மலை உச்சியில் இருக்கும்பொழுது அது பரவாயில்லை என்று உங்களுக்குத் தெரியும். அது நல்லது. ஆனால் உங்களுடைய கனிகள் அங்கே இரவில் உறைந்துவிடுகிறது. குளிர்ச்சியான சூழ்நிலை வரும்போது உங்களுடைய எல்லா கனிகளையும் இழந்துவிடுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுது நடப்பது அதுவே. ஏதாவது ஒன்று நடக்கும்படி நமது ஜீவனை ஊற்றி அங்கே தேவனை சந்திக்கும்படி வருவதற்காக முடிவெடுக்கும் பள்ளத்தாக்காகிய முழு இரவு ஜெபக்கூட்டத்திற்குப் பதிலாக நாம் விட்டுவிட்ட... நாம் வளரவிட்ட கனிகளை உறைபனி கொன்றுவிடும்படி செய்தோம். அது சரியே‚ ஒவ்வொரு முறையும் உங்களால் எதையும் வைக்க இயலாத குளிர்ந்த சூழ்நிலை வரும்படி செய்து உணர்ச்சிகள் மரிக்கும்படியும்; கூச்சல்கள் போடும்படியும், சத்தங்கள் அடங்கும்படியும் செய்கிற சோதனை வரும்போது நீங்கள் அதை தாங்கிக் கொள்ளவில்லை என்றால், எங்கேயிருப்பீர்கள். 29நமக்கு தேவையானது என்னவென்றால் அங்கே பள்ளத்தாக்கிலே கீழே இறங்கி சுரண்டி எடுக்கவேண்டும். தோண்டி எடுக்க வேண்டும். அதுதான் மிகச் சரியானதாக இருக்கிறது. இந்த இரவின் பொழுதிலே சபையானது அந்த இடத்திற்கு வரவேண்டிய தேவையாக இருக்கிறது. ஓ, அவர்கள் பசுமையான ஜீவியத்தை துவங்குவதற்கு அக்கறை கொண்டார்கள் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். பசுமை என்றா நீங்கள் சொல்கிறீர்கள்? ஆமாம். நாம் பசுமையாக இருக்கலாம், எப்படியும் நாம் ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நல்லது, 'அது பெந்தெகொஸ்தே பிரசங்கியாளர்களின் கூட்டம்'' என்று அவர்களில் சிலர் சொல்கிறார்கள்... சில நாட்களுக்கு முன்பாக நான் ஒரு பள்ளியில் இருந்தேன், 'நல்லது நான் தென்மேற்குப் பகுதியைச் சார்ந்த வேதாகம பள்ளியிலிருந்து வருகிறேன்'' என்று ஒரு சில மாணவர்கள் சொன்னதாக என் மகன் சொன்னான். நீங்கள் படித்து வாசிக்க முடியும் என்றால், நீங்கள் அங்கே இருக்கும் கூட்டத்தாரைக் காட்டிலும் நன்றாக இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். ஓ, என்னே‚ 'நல்லது நான் பார்த்ததிலேயே அவர்கள் தான் மிகப் பசுமையான கூட்டத்தார்'' என்றும் சொன்னார்கள். ஓ, சகோதரனே‚ நாம் பசுமையாக இருக்கலாம், ஆனால் நாம் வளைந்து கொடுக்கிறவர்களாக இருக்கிறோம். இல்லாத எதையும்;... சிறிது இழுத்து வளைத்தால் அது உடைந்துவிடும். 30அநேகருக்கு அதுதான் அனுபவங்களாக இருக்கிறது என்பது தான் இன்றைக்கு உள்ள காரியம். அதிகமாக காய்ந்துபோய் விறைப்பாக உள்ளனர். வளைந்து கொடுக்கிற ஏதாவது நமக்குத் தேவை, அதனால் காற்று அதைச் சுற்றி வீசும்போது, அதைச்சுற்றி அசைக்கும்போது அதற்குள் ஜீவன் இருக்குமானால் அதை வளரச் செய்யும். நான் சிறிது பசுமையாக இருப்பதற்கு மாறாகவும் மேலும் பரிசுத்த ஆவிக்குவளைந்து கொடுத்து அதனால் அதை விட்டுக்கொடுத்து நிற்பதற்கு பதிலாகவும், ஒரு அடக்க ஆராதனையில் ஒரு முனகுகிற சத்தத்தை எழுப்புகிறவனாக இருந்து, அது என்னைக் கடந்து செல்லும்போது,' அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்றுவிட்டது; தெய்வீக சுகமளித்தல் என்ற ஒரு காரியம் என்பது இல்லை'' என்று சொல்வேன் என்றால், அது ஒரு அடக்க ஆராதனையாகவே இருக்கும். ஓ, அவர்கள் இளம் மரங்களாக இருந்தபோது, பரிசுத்த ஆவிக்கு வளைந்து கொடுத்ததால், ஆவிக்கு தங்களை விட்டுக் கொடுத்ததால், ஆவியானது அவர்களுக்குள்ளாக அசைவாடத் துவங்கி, பலத்த காற்று அடிப்பதுபோல முழுவதும் தேவனுடைய நன்மைகளால் அவர்களை நிரப்பினது. ஓ, அதுதான் ஜீவனின் தன்மையாக இருக்கிறது. அது பசுமையான கூட்டமாக இருக்கலாம், ஆனால் அதற்குள் ஜீவன் உள்ளது. அது நல்லது. ஜீவனைப் பெற்றிராத எதுவும் மரித்ததே‚ அது விஞ்ஞான பூர்வமாக அறியப்படுகிறது, அது மரித்ததாக உள்ளது. 31ஏழு நாட்கள். மேலும் நினைவில் கொள்ளுங்கள், அந்த ஏழாம் நாளில் தான் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை உணர்ந்து கொண்டார்கள். நாம் லூத்தர், வெஸ்லி, மற்றும் பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், மெத்தோடிஸ்ட் மேலும் அதைப் போன்று, அதன் ஊடாக வந்தோம் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது நாமிருக்கும் இந்த கடைசி காலத்தில் நாம் என்ன செய்தோம் என்று உணர்ந்துகொண்டோம். இப்பொழுது இந்த நாளில் தானே பெந்தெகொஸ்தே சபையானது என்ன செய்தது என்பதை உணர்ந்து கொண்டது என்று நான் விசுவாசிக்கிறேன். பெந்தெகொஸ்தே அசைவினால் உண்மையிலேயே ஆவியினால் நிரம்பின தலைவர்கள் உண்மையிலேயே ஆவியினால் நிரம்பின கிறிஸ்தவர்கள், அவர்கள் ஏதோ காரியம் நடந்தது என்று உணர்ந்து கொண்டார்கள். ஒவ்வொருவரும் தேவன் இல்லாமல் மலையுச்சியில் ஜீவிக்க முயற்சி செய்து குளிர்ந்துபோனார்கள். தேவனிடத்தில் திரும்பி வருவதுதான் இன்றைக்கு நமக்குத் தேவையான காரியமாக இருக்கிறது. அனுபவத்திற்குத் திரும்ப வேண்டும்; திரும்பிவர வேண்டும். அவர்கள் அங்கே கனியற்றவர்களாய் இருந்தது அந்த ஏழாம் மணிவேளையாயிருந்தது என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அன்பு இல்லாமல் 'நீங்கள் ஒருத்துவக்காரர்கள்'', நீங்கள் 'மூன்று தத்துவக்காரர்கள்'', 'நீங்கள் கூட்டு சபையைச் சேர்ந்தவர்கள். நீங்கள், 'நீங்கள் தேவனுடைய சபையை சார்ந்தவர்கள்'', மேலும் நீங்கள் இதுவாகவும், அதுவாகவும் அல்லது மற்றவர்கள் என்று ஒருவருக்கொருவர் சண்டை இடுகிறீர்கள். எங்களுக்கு உங்களிடத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை'', என்கிறீர்கள். ஒருவர் மற்றவரை தவறான பெயரிலே அழைக்கிறீர்கள். மற்றும் ஒருவரை ஒருவர் தவறான பெயரில் அழைக்கிறீர்கள். 32உலகம் அவர்களை திரும்பிப்பார்த்து, இந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது? இந்த சபையில் அவர்கள் இருவரும் அந்நிய பாஷைகளில் பேசுகிறார்கள். தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள். அவ்விதமாகச் செய்கிறார்கள். இந்த சபையில் இங்கே ஒருவர்... அவர்கள் ஒருவருக்கொருவர் கூட மரியாதை செலுத்துவதில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் எந்த கண்ணியத்தையும் கொண்டிருக்கவில்லை என்று சொல்லுவார்கள். ஓ, நமக்கு இன்றைக்கு நமக்குத் தேவையானது என்னவென்றால் ஆவியின் கனிக்கு திரும்ப வேண்டியதே‚ அன்பு, சந்தோஷம், சமாதானம், விசுவாசம், நீடிய பொறுமையே தேவை, தேவன் அவர்களுக்காக ஒரு வரத்தை அனுப்பக்கூடும். அதை அவர்கள் மனோத்தத்துவம் என்றும் அதை பிசாசினால் உண்டானது என்றும், அது ஏதோ ஒருகாரியம் என்றும் அழைக்கிறார்கள். ஒருசபை அதை ஏற்பாடு செய்யும் என்றால் மற்ற சபை அதைக்குறை கூறுகிறது. அது எல்லாம் இப்பொழுது பரவாயில்லை. ஏனென்றால் ஏதோவொன்றை ஒருவர் செய்கிறார். அதுசரி இல்லை என்கிறார்கள். ஓ என்னே‚ என்ன ஒரு பரிதாபமான நிலை. ஆம் ஐயா. அந்த விசுவாசத்தின் கனி, அன்பின் கனி, சந்தோஷம், சமாதானம், விசுவாசம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை... பொறுமையா? ஏன் அவர்களால் ஒரு சில (ஏழு) நாட்களுக்கு ஒருவருக்கொருவர் கடினமாக ஏழுமணி நேரம், ஒரு சில நேரங்களில் ஏழுநிமிடங்களுக்குக் கூட, தாங்க முடியாமல் போகிறது. நீங்கள் அவர்களுடைய சிறிய விருப்பமான கோட்பாட்டுக்குச்சரியாக ஏதோவொன்றை சொல்லவில்லையென்றால், அவர்கள் எகிறிக் குதித்து சபையை விட்டு வெளியே ஓடிவிடுவார்கள். அவர்கள் எழுந்து நின்று அதினிமித்தம் சபையை விட்டு வெளியே ஓடிவிடவேண்டும் என்றிருப்பார்கள். ஓ, அவர்கள் ஒருநிமிடம் கூட உட்கார முடியாது. அவர்கள் எழுந்து வெளியே சென்றே ஆகவேண்டும். ஆம் மேய்ப்பர் இன்னார் இன்னார் அப்படி சொல்லவில்லை. அல்லேலூயா‚' அந்த விதமான கூற்றுக்கு நான் செவி கொடுக்கமாட்டேன்“. வெளியே செல்லுவார். ஓ, நீங்கள் பரிதாபத்துக்குரியவர்கள்... அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். அப்படியே செல்லுங்கள். 33நீங்கள் பாருங்கள் அவைகள் அப்படித்தான் இருக்கிறது. அவர்கள் எல்லா கனிகளையும் இழந்துவிட்டார்கள். அதை நாம் உணர்கிறோம். ஆவியின் கனியானது காய்ந்துவிட்டது. எல்லாமே உச்சத்திலிருந்து விழுந்துபோனது. உதிர்ந்துபோனது. தூளாகி வெடித்து சிதறுவதற்கு தயாரானது. அந்த வித ஒருநிலையில் இருக்கிறது. நம்முடைய பெரிய ஸ்தாபனங்கள்... இப்பொழுது அந்த விதமானது என்பதை நாம் உணர்கிறோம். ஸ்தாபனங்கள் தேவனை அதற்குள் வைத்திருக்கும் வரை அவைகள் ஆவியின் கனியை அதற்குள் பெற்றிருக்கும் வரை, அன்பும் கணிவும் அதற்குள் உள்ள வரை ஐக்கியமுடன் இருந்து, அருகிலுள்ள சகோதரனுக்கு உதவி செய்ய விருப்பமுடன் இருக்கும் வரை அவைகள் சரியாகவே இருக்கின்றன. அவன் என்ன விசுவாசிக்கிறான் என்பது ஒரு பொருட்டல்ல, அவன் ஒரு சகோதரனாக இருப்பான் என்றால், தேவன் பரிசுத்த ஆவியைத்தருகிறார். யார் அவருக்குக் கீழ்படிகிறார்களோ அவர்களுக்கு தேவன் பரிசுத்தஆவியைத் தருகிறார். அது சரியே‚ அப்படியானால், நீங்கள் பரிசுத்தஆவியைப் பெற்றிருப்பீர்கள் என்றால், மெத்தோடிஸ்டுகள் பரிசுத்தஆவியைப் பெற்று இருப்பார்கள் என்றால், மேலும் பிரஸ்பிடேரியன்கள் பரிசுத்தஆவியைப் பெற்று இருப்பார்கள் என்றால், ஒருத்துவக்காரர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று இருப்பார்கள் என்றால் நல்லது, நீங்கள் எதைப்பற்றி சண்டை இடுகிறீர்கள்? இப்பொழுது நாம் ஒன்று சேருவோம். இப்பொழுது முன்னேறிச் செல்வோம். அதுதான் நமக்கு தேவையாக இருக்கிறது. அது ஸ்தாபனம் கிடையாது. அந்த ஸ்தாபனத்திலுள்ள அமைப்புதான் அதை அப்பால் இழுக்கிறது. பிசாசுதான் அதைச் செய்கிறான். 34அதனால் நாம் எல்லோரும் மிகப்பெரிய கட்டிடங்களை கட்ட முயற்சி செய்து பெரிய கட்டிட திட்டங்களையும், அதைப் போன்றவற்றையும் கொண்டிருந்ததைக் காண்கிறோம். இந்த மனிதர்கள் இந்த மலையின் மேலாக ஏறினார்கள், இந்த இராஜாக்கள் அதைப் போன்றவர்கள் மேலேறிச் சென்றார்கள் என்று நான் கற்பனை செய்கிறேன். அவர்களுடைய பெரிய உயர்ந்த கட்டிடதிட்டங்களை பெருக்கிக் கொண்டுபோனபோது அவர்களுடைய கனிகள் மிகக் குறுகிப்போனதை அவர்கள் பார்க்கத் தொடங்கினார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு அங்கே எந்த ஒரு கனியும் இல்லாமல் போய்விட்டது. நாமும் அதைச் செய்தோம் என்று எனக்குத் தெரியும். நம்முடைய காலத்தில் இந்த பெந்தெகொஸ்தே காலத்தின் ஊடாக நாம் அசைந்து சென்றதை நாம் பார்த்தோம், நாம் நாற்பது வருடங்களுக்கு முன்பாக எங்கோ ஒரு மூலையில் அந்த இடத்தில் போவதற்கு எந்த ஒரு இடமும் இல்லாமல், மற்றும் ஒரு சிறு ஓட்டைச் சுவற்றில் எங்கோ ஒரு இடத்தில் இருந்தபோது, ஒரு கூட்ட மக்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை பரிசுத்த உருளைகள் என்று அழைத்தார்கள். ஏன் அவர்கள் இப்பொழுது உள்ளவர்; இவர்களைக் காட்டிலும் அதிகமான ஆவிக்குரியவர்களாக இருந்தார்கள். அது சரியே‚ ஆவிக்குரிய விதத்தில் பேசுவோம் என்றால், இப்பொழுது உள்ள ஒவ்வொரு ஸ்தாபனங்களைக் காட்டிலும் சபையானது அருமையான நிலையில் இருந்தது. ஓ, நிச்சயமாக நாம் லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கிறோம். நல்லது, அது தேவனுக்கு பொருட்டானது அல்ல. ஓ, ஐயா‚ நான் இந்த உலகத்திலுள்ள ஐஸ்வரியங்களைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் நான் ஒரு சிறுதுண்டு உடையையும் உடையவனாக இராமல் (யோவானைப் போல ஒரு ஆட்டுத்தோல் என்னை சுற்றிக் கொண்டிருப்பது) இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டிருப்பதையும், மேலும் என்னுடைய இருதயம் சுத்தமாகவும், தூய்மையாகவும் அவருக்கு முன்பாக இருப்பதையுமே (ஏன் நிச்சயமாக) நான் விரும்புவேன். 35ஆனால் காரியம் என்னவென்றால், சபையானது தேவன் இல்லாமல் வெகுதொலைவில் சென்றுவிட்டது. அவர்கள் வெகு தொலைவில்சென்றுவிட்டார்கள். அவர்களை விட்டு ஆவியின்கனியானது சென்றுவிட்டதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். நீடிய பொறுமையா? ஏன் ஒரு சில பேர் போதுமான கோபத்துடன், ஒரு வண்டு எழுப்புகிற ஒலியைப் போல சண்டையிட்டுக் கொண்டு, அதன்பிறகு... பரிசுத்த ஆவியைக் குறித்து பேசுகிறார்கள், ஏன் ஆவியின் கனியானது அன்பு, சந்தோஷம், நீடிய பொறுமை, பொறுமை ஆமாம், ஆனால் இரண்டு நிமிடங்கள்தான், அவ்வளவுதான். அவைகள் எல்லாம் தூரப்போய்விட்டன. ஆகவே நீடிய பொறுமைபோன்ற கனிகள் எல்லாம் உலர்ந்துபோனது. நம்முடைய பெரிய கட்டிட திட்டங்கள் அதிகரித்துள்ளன. அது சரியே‚ நம்முடைய சிறந்த உயர் கல்வித் திட்டங்கள் அதிகரித்துள்ளன. நம்முடைய மேய்ப்பர்கள் எல்லாம் சிறந்த முறையில் படித்தவர்கள். ஓ, என்னே, என்னே‚ நாம் எல்லா வகையான பட்டங்களையும் பெற்றிருக்கிறோம். அந்த நேரத்தில் அங்கே போகும்போது, கூட்டம் முழுவதுமான அந்த பட்டங்கள் உறைந்த பனிக்குள் போய்விடுகிறது. பூஜ்ஜியத்திற்கும் கீழ் (உறையும் நிலைக்குகீழ்) அது சுமார் நாற்பதுக்கும் கீழே இருக்கும் என்று தெரிகிறது. 36ஆனால் நாம் அவைகள் எல்லாவற்றையும் பெற்றுள்ளோம். அது சரியே‚. நாம் பார்க்கப்போனால், நாம் உயர்ந்துகொண்டே இருக்கிறோம். ஆனால் அனைத்து கனிகளும் மற்றும் எல்லா காரியங்களும் விலகிப்போய்க் கொண்டே இருக்கிறது. எல்லா ஜீவ தண்ணீரும் காய்ந்து போனதாகத் தெரிகிறது. நித்திய ஜீவனே இனி இல்லை. கிட்டத்தட்ட இது இப்படியாக இருக்கிறது... நான் மற்றொரு இரவிலே சொன்னது போல உறுப்பினர்களை மாற்றுவதில் மேய்ப்பர்கள் எல்லோரும் அதிக அலுவலாக இருக்கிறார்கள், மக்கள் எல்லோரும் அலுவலாக இருக்கிறார்கள், அது பிணங்களை ஒரு இடத்திலிருந்த பிணவறையிலிருந்து மற்றொன்றுக்கு மற்றொரு இடத்திற்கு மாற்றுவதுபோல உள்ளது. ஒரு சிலர் வறுக்கப்படுகிறார்கள், மற்றவர்கள் உறைந்து போகிறார்கள். எனவே அது அந்த விதமாகத்தான் இருக்கிறது. நீங்கள், சிறிய கொள்கைகளை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள்; அதன்பிறகு அந்த கொள்கைகள் வேறுவிதமாக மாறியபின் அதற்குள் நாம் செல்கிறோம். எங்கு பார்த்தாலும் ஆவியின் கனிகள் காய்ந்துபோன நிலையில்; சபைகள் அதைத்தான் பெற்றுள்ளன. நாம் அதை எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். அதுதான் உண்மையாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். நாம் வெளியே வந்து அது உண்மையாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அது உண்மையாக இருக்கிறது. 37அவர்கள் அங்கே வனாந்திரத்தில் மரித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் காண்கிறோம். அது அவர்களை தேவன் இல்லாமல் சென்று கொண்டிருக்கும்படி வழி நடத்தினது என்பது, என்ன ஒரு பயங்கரமான நிலையாக இருந்தது. ஓ, திசைகாட்டியைக் கொண்டு அவர்கள் ஏழு நாட்கள் வந்தார்கள். ஓ, நிச்சயமாக அவர்கள் எல்லாம் சரியானது என்று வந்துகொண்டிருந்தார்கள், 'நாங்கள் இன்னார் இன்னார் மேலும் இன்னார் மற்றும் இன்னார்'' என்று அவர்கள் பின்னால் சுட்டிக்காட்டிச் சொன்னார்கள். ஆனால், தேவன் எங்கே இருந்தார்? அதுதான் காரியம் அந்த காரியத்தில் தேவன் எங்கே இருந்தார்? நாங்கள் பெரிய சபைகளை கொண்டிருக்கிறோம், கூரான கூரைகளை அதன் மேலாக வைத்திருக்கிறோம், பெரிய சிலுவைகள், மெத்தென்ற நீண்ட இருக்கைகளை கொண்டிருக்கிறோம், அவர்கள் யாருடனும் எங்களை ஒப்பிடலாம். நாங்கள் பெந்தெகொஸ்தே மக்கள்; முடிந்த அளவு பணத்தை தாராளமாகப் புழங்குகிற, சிறந்த உடை உடுத்தின கூட்டத்தாராக மேலும் சகோதரனே, கடிலாக்கார்கள் எங்கும் சுற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன என்கிறார்கள். ஆனால் தேவன் எங்கே? தேவன் எங்கே? அதன் பிறகு அவர்களுக்கு மத்தியில் அவர் வரும்போது அநேகர்,' ஆவ் இப்பொழுது அதற்கு செவிகொடுக்க வேண்டாம். அது முட்டாள்தனமானது. அதற்கு எந்த ஒரு கவனத்தையும் செலுத்தவேண்டாம்'', என்று சொல்கிறார்கள். பாருங்கள், வெறுமனே மரித்த அடிக்கட்டைகள்; அவ்வளவுதான் அங்கே இருக்கிறது; அதுவே. அது சரியே‚ அநேக நட்களுக்கு முன்பாகவே கனிகள் காய்ந்து போய்விட்டிருந்தன. ஓ, எவ்வளவு பயங்கரமான காலகட்டத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். 38இப்பொழுது இந்த நேரம் வந்தபோது, முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தண்ணீருக்காக ஓடினார்கள். அவர்களுக்கு எந்த தண்ணீரும் இல்லை. அவர்கள் அழத் தொடங்கினபோது, 'ஐயோ'' ஐயோ‚ ஓ, தேவனே, நீர் எங்களுக்கு எவ்வளவு நல்லவராய் இருந்தீர் (இந்த பெரிய கட்டிடங்களை எல்லாம் எங்களுக்குக் கொடுத்தீர்) ஆனால் அவர்களில், 'எங்கே ஜீவத்தண்ணீர் இருக்கிறது?'', என்று அநேகர் அழத் தொடங்கினபோது, கம்யூனிசம் உள்ளே, நகர்ந்து வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள், உலகம் வெறுமனே அதனுடைய முடிவுக்கு வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். முடிவுக்கு நெருங்கி வந்திருப்பதை தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனமாக உரைக்கிறார்கள். அதன் பிறகு, 'எங்கே தண்ணீர் இருக்கிறது? என்ன நடந்தது'', என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். அங்கே ஒருவர் கதறி இருக்க வேண்டும்... அல்லது ஒரு நீதிமான் அங்கே கதறினார், 'எங்கேயாவது தீர்க்கதரிசி ஒருவரை நாம் சென்று பார்க்க முடியாதா? அங்கே எங்கேயாவது ஒரு தீர்க்கதரிசி இல்லையா?'' என்று நீதிமானாகிய யோசபாத் கதறினான், 'அங்கே ஒரு தீர்க்கதரிசியாவது இல்லையா? நாம் ஒரு நெருக்கடி நிலையில் இருக்கிறோமே. இதைக் குறித்து யாராவது ஒருவரிடம் எங்கேயாவது நாம் கலந்து ஆலோசிக்க முடியாதா?'', என்றான். 39நமக்கு விசுவாசம் இல்லை என்று காணப்படும்படி, நமக்குள் ஒருவரிலொருவர் பிரிந்திருக்கும் இடத்திற்கு எளிதாக ஸ்தாபனங்கள் நம்மை கொண்டு வந்துள்ளன. 'எங்கே அந்த தேவ மனிதன்? நமக்குச் சொல்லத்தக்க மனிதன் எங்கே?'' என்று இப்பொழுது நீதிமான்கள் கதறுகிறார்கள். அவர் பரிசுத்த ஆவியானவராகிய நபராய் இன்றிரவு இங்கே இருக்கிறார். அவர் மாத்திரம் தான் நீங்கள் என்னசெய்ய வேண்டும் என்று சொல்ல முடியும். அவர் ஒருவர் மாத்திரமே உங்கள் இருதயங்கள் குத்தப்படச் செய்ய முடியும். அவர் ஒருவர் மாத்திரம் உங்களுடைய பாவங்களை வெளிக்கு கொண்டுவர முடியும், அவர் ஒருவர் மாத்திரம்தான் உங்களுடைய சந்தேகத்தை உங்களிடத்திலிருந்து வெளியே எடுக்க முடியும், மேலும் அவ்விதமே நம்பிக்கையையும், உங்களுக்குள் நீங்கள் அறியும்படி செய்யவும் முடியும். அவர் மாத்திரம் தான் அதைச் செய்ய முடியும். அந்த நபராகிய தேவன் - பரிசுத்த ஆவி என்று அழைக்கப்படுகிறார். அவர்தான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறார். 40இப்பொழுது அவர்கள் எல்லோரும் கதறத் தொடங்கினார்கள் என்று நாம் பார்க்கிறோம். மேலும் கனிகள் எல்லாம் போய்விட்டதைப் பார்க்கிறோம். (அவைகள் உதிர்ந்து போய்விட்டன) அவைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் இருந்தது. நிச்சயமாக நீதிமான், தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவன், 'எங்காவது அங்கே ஒரு தீர்க்கதரிசியுடன் நாம் கலந்து ஆலோசிக்க முடியாதா? இந்த சூழ்நிலையிலிருந்து நம்மை எவ்வாறு வெளியேற்றுவது என்பதை தெரிந்த ஒருவர் இருக்கமுடியுமா, இங்கே நம்முடைய குழப்பத்தில் சேராமல் இருக்கிற யாராவது ஒருவர்? நாம் எல்லோரும் இங்கே இந்த மலையின்மேல் ஒன்றாக கூடிவந்து ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். நாம் போருக்கு போகிறோம், அங்கே போராடுவதற்கு நாம் எதையும் பெற்று இருக்கவில்லை என்று அறிவீர்கள்'' என்று சொன்னான். இன்றைக்கு சபைக்கு அதுதான் காரியமாக இருக்கிறது. நாம் திரளான அங்கத்தினர்களைக் கொண்டிருக்கிறோம். ஆனால் அனைவரும் மரித்தவர்களே‚ நாம் திரளான மிகப் பெரியஸ்தாபனங்களைக் கொண்டிருக்கிறோம். அவைகளும் மரித்தவைகளே‚ நாம் திரளான மனஉற்சாகத்தை பெற்றிருக்கிறோம், ஆனால் அது தவறான வழியில் இருக்கிறது. யார் மிகச் சிறந்த உடையை அணிய முடியும், யார் சிறந்த முன்னேற்றத்தைப் பெற முடியும்? யார் மிகச்சிறந்த பள்ளியைக் கொண்டிருக்கிறோம், அதிகமான பந்து விளையாட்டை வெல்ல முடிந்தவர்கள் அல்லது மிகச்சிறந்த பங்கோ விளையாட்டை விளையாட முடியும் என்பது அல்லது அதைப் போன்ற ஏதோவொன்றை; நமக்குத் தேவை தேவனே‚ மற்ற அந்தக் காரியங்கள் அல்ல. மீண்டுமாய் தேவனிடம் திரும்புவோமாக‚ 41நாம் என்ன செய்யவேண்டும் என்று சொல்லக் கூடிய ஒரு தீர்க்கதரிசி அங்கே எங்காகிலும் இல்லையா? அவர் எங்கே இருக்கிறார்? நாம் விசாரிக்க யாராகிலும் அங்கே இல்லையா? ஓ, எப்பேற்பட்ட ஒரு நிலைமை. அதுதான் நீதிமானுடைய கதறுதலாக இருந்தது. அங்கே அவர்கள் மத்தியில் ஒருவர் மட்டும் தான் இருந்தார். அது யோசபாத்தாக இருந்தது. அவன் ஒரு நல்ல மனிதன். ஆனால் அவன் தவறான கூட்டத்தாரோடு இருந்தான். அதுதான் இந்த இரவின் பொழுதிலே ஒரு காரியமாக இருக்கிறது. நல்ல மனிதர்கள் அனேகர், திரளான நல்ல மனிதர்கள், எல்லா இடத்திலும் எங்கிலும், அருமையான மனிதர்கள். அவர்கள் எல்லோரும் அங்கே ஸ்தாபனங்களிலே இருக்கிறார்கள். நாம் ஒரு உண்மையை சந்திக்கிறோம். கிறிஸ்து சபை கொண்டுள்ள அளவு முகமதியகொள்கை, புத்தகொள்கை மற்ற கொள்கைகள் உளவியலை (Psychology) வெளிப்படுத்த முடியும். நல்லது. நமக்கு என்ன தேவையென்றால் உளவியல் அசைவு கிடையாது. ஒரு வேத சாஸ்திர அசைவு கிடையாது. 'ஒருமுறை ஜீவித்த அந்த தேவன் எங்கே?'' என்று மக்கள்,அழுகிற அளவு ஒரு பரிசுத்தஆவியின் அசைவு தான் சபைக்குத் தேவையாக இருக்கிறது. அந்த பெந்தெகொஸ்தே தேவன் எங்கே இருக்கிறார்? பாவிகளுடைய இருதயங்களை எடுத்து உறைந்த வெண்பனியைப்போல கழுவுகிற அந்த தேவன் எங்கே? ஒரு வேசியை தெருவிலிருந்து எடுத்து ஒரு சீமாட்டியாக மாற்றிக்கொண்டு வருகிற தேவன் எங்கே? ஒரு குடிகாரனை குடிக்கிற அறையிலிருந்து வெளியே கொண்டு வந்து அவனை ஒரு பிரசங்கியாக மாற்றக்கூடிய அந்த தேவன் எங்கே? முடமான கால்கள் உடையவர்களை, எடுத்து கால்களை நேராக மாற்றுகிற அந்த தேவன் எங்கே? குருடர்களை பார்வையடைய செய்யும்படியாகவும், செவிடர்களை கேட்கச் செய்யும்படியாகவும், புற்றுநோயை மறைந்து போகும்படியாய் செய்யும்படியாகவும் ஒரு முறை அப்படியாய் செய்த அந்த தேவன் எங்கே இருக்கிறார்? அவ்விதமானதே அது. 42அங்கே ஏதோ ஒரு காரியம் தவறாக உள்ளது என்பதை நாம் கண்டோம். மற்றொரு இரவிலே வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய செய்தி… என்ற தலைப்பிலே நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது... பழைய யோவான் அவனுடைய கண்களிலே (தீர்க்கதரிசி யோவான்) அந்த வகையாக படமாக்கப்பட்டது. அவன் எலியாவின் ஆவியை உடையவனாக இருந்தான், மேலும் எலியா சூரைச்செடியின் கீழாக இருந்தபொழுது ஒரு சீர்நிலை குலைந்தவனாக இருந்தான். யோவானும் சிறைச்சாலையிலே ஒரு நிலைகுலைவை உடையவனாக இருந்தான். அவன் உரத்த குரலில்பேசக் கூடிய, அவனுடைய நரம்புகள் எல்லாம் நுனியில் நிற்கக்கூடிய ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அதன்பிறகு, அவனுடைய கழுகு கண்ணினால் காட்சியைப் பார்த்தான். 'பாருங்கள் நான் தவறாக இருக்கக்கூடும், அவர்தான் அந்த ஒருவரா அல்லது வேறொருவரை நாங்கள் காண வேண்டுமா'', என்று அவரைக் கேளுங்கள் என்றான். இப்பொழுது இயேசு ஒருபோதும் எந்த ஒரு புத்தகத்தையும் அவனுக்கு அனுப்பவில்லை. 'இப்பொழுது நீங்கள் சிறைச்சாலையில் இருக்கும்பொழுது, எப்படி இங்கே பொறுமையுடன் இருக்கவேண்டும்'', அல்லது அதைப்போன்ற ஒரு புத்தகத்தை அனுப்பவில்லை. அவர் என்ன சொன்னார்?அவனுக்கு அவர் என்ன சொன்னார்?' வெறுமனே தங்கி இந்த மதிய வேளை கூட்டத்தைக் கவனியுங்கள். அதன்பிறகு சென்று முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்வை அடைகிறார்கள் என்று யோவானுக்கு காண்பியுங்கள்..., என்றார். ஒரு மேசியா வந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு தூற்றுக் கூடையை தன்னுடைய கையிலே வைத்துக்கொண்டு தமது களத்தை நன்றாக விளக்கிவிடுவார். நிச்சயமாக பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்று யோவான் ஒரு சுவிசேஷத்தை பிரசங்கம் செய்தான். ஆனால் அவர் வந்தபோது, ஒரு சாந்தகுணமுள்ளவராய் இருந்தார். சாந்தகுணமுள்ளவராய், தாழ்மை உடையவராய் இருந்தார். எப்படி அது இருக்கும் என்று யோவான் நினைத்தானோ அப்படியாக அதை அவன் சந்திக்கவில்லை. ஆனால், 'நீங்கள் சென்று நான் சரியான திட்டமிட்டபடி வந்திருக்கிறேன் என்று யோவானுக்கு சொல்லுங்கள் அது எல்லாம் சரியாக இருக்கிறது; எல்லாக் காரியமும் சரியாக இருக்கிறது“ என்று சொன்னார். 43இந்த இரவின் பொழுதிலேயும் அதே காரியம்தான். சபை உலகத்தின் இந்த மக்கள் மெத்தொடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன்கள் அல்லது சில சபைகள் கிறிஸ்துவை திரும்பிக்கொண்டு வருவதற்காக ஏதோ சில காரியங்களை வைக்கும்படியாய் பார்த்துக் கொண்டிருந்தன. அவர் சரியான நேரத்தில் இருக்கிறார். முடவர்கள் நடந்தார்கள், குருடர்கள் பார்வை அடைந்தார்கள், செவிடர்கள் கேட்டார்கள். மகிமை‚ திட்டமிட்டபடியே அவர் சரியாக இருக்கிறார். ஆமென். அங்கே எந்த தவறும் இல்லை. அவர் சரியாக அசைந்து சென்று கொண்டிருக்கிறார். தேவன் இன்னும் ஜீவிக்கிறார். அவர் இன்னும் தேவனாக இருக்கிறார். 44'ஓ, அங்கே எங்காவது ஒரு தீர்க்கதரிசி நமக்கு இல்லையா?'', என்று இந்த நீதிமான் கதறினார். இப்பொழுது அங்கே அவர்கள் மத்தியில் ஒரு நல்ல சகோதரன் இருந்தார், 'ஆம், ஆம் அப்பேற்பட்ட மனிதனை எனக்குத் தெரியும். அப்பேற்பட்ட மனிதனை எனக்குத் தெரியும் என்று அவன் சொன்னதை என்னால் கேட்க முடிகிறது. அவன் யோராமை நோக்கிப்பார்த்ததை என்னால் இப்பொழுது காணமுடிகிறது. 'இப்பொழுது நீர் அவனை நம்பப்போவதில்லை. இப்பொழுது அதை நான் அறிந்திருக்கிறேன். நீர் இந்த நபரை நம்பப்போவதில்லை. ஏனென்றால் உம்முடைய தகப்பனாரும் அவனை நம்பவில்லை. அவர் நிச்சயமாக அவனை நம்பவில்லை. மேலும் அங்கே ஒரு கூட்ட தீர்க்கதரிசிகளை (அல்லது தங்களை அப்படியாக அழைத்துக்கொண்டவர்களை) உன்னுடைய தகப்பனார் அங்கே அந்த மலையின் மேலாக உள்ள பள்ளியில் கொண்டிருந்தார், அவர்களும் அவனை நம்பவில்லை. ஏன், இந்த மனிதனை எனக்குத் தெரியும். அவனுடைய தகப்பனாருடைய ஆவி அவன் மேலாக இருந்தது. அவனுடைய தகப்பனார் செய்த அதே காரியத்தை இவனும் செய்தான். எலியா செய்த அதே காரியத்தை இவனும் செய்தான். மற்றும் எலியாவின் ஆவி எலிசாவின் மேல் தங்கி இருந்தது. அவனுடைய கூட்டங்களில் நானும் இருந்தேன், அது உண்மை என்று நான் அறிவேன்'', என்று சொன்னான். ஆமென். தேவன் நமக்கு உதவி செய்வாராக. அந்த விதமான கூட்டங்கள் தான் நமக்கு தேவையாய் இருக்கிறது, அங்கே நாம் பார்க்கிறோம், நம்முடைய பிதாவுடைய ஆவி, இயேசு கிறிஸ்து...எலியாவுடைய ஆவியைப் போல அதற்கு ஒத்த ஆவி பாருங்கள். அந்த ஆவி... 'என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற காரியங்களை அவனும் செய்வான்'', ஓ, சகோதரனே‚ அதுதான் அந்த ஒன்று. 45இந்த மனிதன் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். எலியாவினுடைய ஆவி அவர் மேல் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அவன் அவனுடைய கைகளில் தண்ணீர் ஊற்றினான். அவன் அவனோடு ஜீவித்தான். மேலும் எலியாவுடைய ஆவி. எலிசாவின் மேல் தங்கி இருந்தது என்று எனக்குத் தெரியும். யோராமே, 'நீர் அதை நம்பமாட்டீர், அங்கே பின்னாக உள்ள உம்முடைய பள்ளியில் உள்ள எல்லா தீர்க்கதரிசிகளும் கூட நம்பமாட்டார்கள். உம்முடைய வேத சாஸ்திர பாடசாலையும் அதை விசுவாசிக்கமாட்டார்கள். ஏனென்றால்... எதற்காக என்று நான் சொல்கிறேன்'', என்று அந்த நல்ல சகோதரன் சொன்னான்.இதுதான் அந்த காரணம். எலியா எடுக்கப்பட்ட பிறகு, எலிசா திரும்பிவந்தபோது அவன் இரண்டு மடங்காக அதைப் பெற்றுக்கொண்டான் என்று அவர்களிடத்தில் அவன் சொன்னான். ஏன், இந்த மனிதன் தன்னுடைய சிந்தையை இழந்து போனான் என்று அவர்கள் சொன்னார்கள். ஒரு ஐம்பது பேர் தேடுதல் கூட்டத்தை கொண்டு எங்கே அவன் இருக்கிறான்... அவன் ஒருபோதும் எடுத்துக்கொள்ளப்படவில்லை அவன் இன்னுமாய் எங்காவது அங்கே இருப்பான்'', என்றார்கள். நாமும் முயற்சி செய்தோம், நம்முடைய கிறிஸ்தவ உலக அமைப்புகள்... ஓ, நீங்கள் என்னிடத்தில் கோபம் கொள்ளாதீர்கள். ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன், இந்த கிறிஸ்தவ உலக அமைப்புகள் ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் எடுத்துக்கொண்டு ஏறெடுத்துக் கொள்ளப்பட்ட இயேசு கிறிஸ்துவை கல்வி சம்பந்தமான திட்டங்களின் மூலமாக, வேதசாஸ்திரத்தின் மூலமாக சபை ஸ்தாபனங்களின் மூலமாக அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வி அடைந்தார்கள். ஆமென் அவர் மனிதனால் உண்டாக்கப்பட்ட வேத சாஸ்திரத்தின் மூலமாக வரமாட்டார். அவர் ஸ்தாபனத்தின் மூலமாக வரமாட்டார். ஒரு சரணடைந்த, ஒப்புக்கொடுத்த இருதயத்தில், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாகவே வருகிறார். ஆமென். 46நம்முடைய மனிதனால் உண்டாக்கப்பட்ட அமைப்புகள் அவரைக் கண்டுபிடிக்கமுடியாது. ஓ, அவர்கள் விருந்துகளை ஏற்பாடு செய்து வெளியே சென்று அவனைத் தேடினார்கள். ஓ, இல்லை‚ ஆவி ஒருபோதும் அந்த மனிதனை மேலே கொண்டு செல்லவில்லை. இப்பொழுது உணர்வு உள்ளவர்களாக இருங்கள்‚ மனிதர்களே, நாம் எல்லோரும் கலை இலைக்கியப் பட்டம் அது போன்றதைப் பெற்றிருக்கிறோம். அதனால் அந்த விதமான காரியத்தைக் காட்டிலும் நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். அந்த மனிதன் இங்கே உட்கார்ந்து நம்முடன் சோள ரொட்டியை, அதுபோன்றதை சாப்பிட்டான். ஏன், அந்த மனிதன் ஒரு அக்கினிமயமான இரதத்தில் ஏறிச்சென்றிருக்க முடியாது என்று அறிந்திருக்கிறோம் என்றனர். 'இந்த பையன் தான் எல்லா வேலைகளையும் இப்பொழுது செய்து வைத்திருக்கிறான். அங்கேதான் அவன் இருக்கிறான். அவன் ஒரு நிறைய பயித்தியக்காரத்தனத்துடன் திரும்பி வருவான். நாம் அதைவிட அதிகம் நன்றாக அறிந்திருக்கிறோம். அந்த வயதான ஆளை கீழே உட்கார வைப்போம். உங்களுக்குத் தெரியுமா, அவனுடைய வழுக்கை தலைமிகவும் சூடாகிவிட்டது, எனவே அவனுக்கு சிறிது விசிறி வீசுவோம். நீங்கள் எல்லோரும் அங்கே போங்கள், அங்கே என்ன தான் நடக்கிறது என்று கண்டுபிடியுங்கள், தேடுங்கள், ஒரு சிலரை அனுப்புங்கள்...'' போங்கள், ஆனால் நீங்கள் அவனைக்கண்டு பிடிக்க முடியாது. என்னைகேலி செய்கிறீர்கள். நீங்கள் விரும்பினால் என்னை முட்டாள் என்று அழையுங்கள். ஆனால் தேவனிடம்... நீங்கள் ஒருபோதும் அவரை ஸ்தாபனங்களின் அமைப்புகளில் கண்டுபிடிக்க முடியாது. இல்லை, ஐயா. அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் வடிவில் திரும்பி வருவார். அதற்குள்ளாக நீங்கள் மக்களை அதற்காக கல்வி கற்க வைக்க முடியாது. அவர்கள் அற்குள்ளாக பிறந்திருக்க வேண்டும். அது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாக இருக்க வேண்டும், குறைவானது ஒன்றுமில்லை. ஏதோ மனதளவில் யோசித்து உணர்ச்சியைக் காட்டுவதல்ல அல்லது ஏதோ கிறிஸ்துவ உலக அமைப்பு அல்ல. அல்லது அடையாளம் இல்லை; ஆனால் அது ஆவியின் கனிகளான அன்பு, சந்தோஷம், விசுவாசம், நீடிய பொறுமை, நற்குணங்கள், சாந்தகுணம், பொறுமை ஆகியவற்றைகொண்டு வருகிற மெய்யான அசலான பரிசுத்த ஆவியாக இருக்க வேண்டும். அதுவாகத்தான் இருக்கிறது. அதுதான் காரியமாக இருக்கிறது. ஆமாம். 47நிச்சயமாக. யோராம் அதைச் செய்ய முடியவில்லை. அதை அவன் விசுவாசிக்கவில்லை. அவர்களும் அதை விசுவாசிக்க முடியவில்லை, இங்கே, 'இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள். இப்பொழுது இந்த மனிதனுடைய எல்லாவகையான எதிர்ப்பையும் நாம் அறிந்திருக்கிறோம். எனவே நாம் அவனை நம் அருகாமையில் உட்கார வைத்து, நம்முடைய குழுக்களை ஒன்று சேர்த்து, நாம் வெளியே சென்று அவன் எங்கேயாவது இருப்பான்'', அவனை மறுபடியும் பிடித்துவிடுவோம் என்று பள்ளி (தீர்க்கதரிசி பள்ளியில் உள்ளவர்கள்) அதே காரியத்தைத்தான் செய்தீர்கள். அதைத்தான் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக செய்ய முயன்றோம். பெந்தெகொஸ்தே மக்களாகிய நீங்களும் அதே காரியத்தைத்தான் செய்தீர்கள். ஸ்தாபனத்தின் மூலம் அவரைக் கொண்டுவர முயற்சித்தீர்கள். வேறு சகோதரர்களிடமிருந்து உங்களைப் பிரித்துக்கொண்டு அப்படிச் செய்யமுடியாது. நீங்கள் திரும்பி வந்து ஆகவேண்டும். நாம் ஒன்றாக இருக்கவேண்டும். மனிதன் தவறாக இருக்கும் பட்சத்தில் அதைப் பற்றி நான்அக்கறைகொள்வதில்லை. அவன் தவறாக இருந்து அவனுடைய இருதயத்தில் உத்தமமாக இருப்பான் என்றால்; நீங்கள் உங்கள் விசுவாசத்தில் உண்மை உள்ளவர்களாக இருந்து, நீங்கள் நடந்து கொள்கிற வழியில் தவறாக நடந்து கொள்வீர்கள் என்றால்; நான் உங்களுடைய பக்கத்தில் இருப்பதைக் காட்டிலும் அவனுடைய பக்கத்திலேயே இருப்பேன். அது சரியே‚ நான் என்னுடைய உபதேசத்தில் தவறாக இருந்தாலும் என்னுடைய இருதயத்தில் சரியாகவே இருப்பேன். தேவன் அதை அதிகமாகக் கனப்படுத்துவார். ஆகவே, ஒரு மனிதன் தவறாக இருக்கிறான் என்றால் அதனால் என்ன? அவனுக்கு உதவிசெய். அவனுக்கு உதவி தேவை. அவனை நேசி, உன்னை நேசிப்பவர்களிடம் நீ அன்பு காட்டுவதுபோல் உன்னுடைய விரோதிகளிடம் அன்பாக இருக்க இயலவில்லை என்றால் ஆயக்காரர்களை விட நீ நல்லவன் இல்லை; சரியே‚ அதைத்தான் சபைபெற்றிருக்கத் தவறிவிட்டது. இன்றிரவில் நீ அதைப் பெற்றிருக்கிறாய் என நான் நம்புகிறேன். நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்பதை நீ காண்கிறாய் என்று நான் நம்புகிறேன். 48அன்புக்குத் திரும்பி வரவேண்டியதாக அது இருக்கிறது. மீட்டெடுக்கிற அன்பு. மற்ற எல்லா காரியங்களும் அருமையாக இருக்கிறது, ஆனால் நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியமாக இருக்க திரும்பி வந்தே ஆக வேண்டும். மக்கள் நான் ஸ்தாபனங்களுடன் சண்டையிடுகிறேன் என்று சொல்லுகிறார்கள். நான் அப்படிச் செய்யவில்லை. சகோதரத்துவத்தை உடைக்கும் அந்த அமைப்புக்கு எதிராக நான் போராடுகிறேன். நான் எப்பொழுதும் அதை செய்திருக்கிறேன், எப்போதும் செய்வேன். சரி. அந்த காரியம் அது சகோதரத்துவத்தை பிரிக்கும். நான் இந்த பட்டணத்திலுள்ள ஒவ்வொரு சபையும்; இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு சபையும், நாம் மற்றொரு காலை வேளையிலே அந்த ஊழியக்காரர் சிற்றுண்டிக் கூட்டத்தில் கடந்து வந்தது போல (ஒருத்துவக்காரர்கள், இருத்துவக்காரர்கள் திரித்துவக்காரர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, ஒருவர் தோளில் ஒருவர் கைகளைப்போட்டு இருப்பதை நான் பார்த்தேன்) நான் அந்த வயதான சிமியோன் சொன்னதுபோல, 'ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர் உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது'', என்று நான் சொல்வேன். அது சரியாக இருக்கிறது. நீங்கள் உடைந்த ஒரு சிறிய குழுவை சரி செய்து கொண்டு போகமுடியும். அதன்பிறகு முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? பிசாசானவன் திரும்பவும் வந்து அதை மீண்டுமாக உடைத்துப் போடுவான். ஆனால் அதை எல்லாவற்றையும் உங்களால் செய்யமுடியாது. அது மற்றொரு நாளிலே செய்யப்படும். தேவன் ஒரு தண்டனையை அவர்களுக்கு அனுப்புவார். அவர்கள் அதைப் பெறவேண்டியதாகும். 49பேராயர் யோராம், அவனால் அதை நம்ப முடியவில்லை. இப்பொழுது அவன் அதை நம்பமாட்டான் என்பதை அறிந்திருந்தான். ஏனென்றால், அவனுடைய தகப்பனார் அதை நம்பவில்லை. எலியா மேலே எடுத்துக்கொள்ளப்பட்டதை நம்பவில்லை. ஆகவே, அவன் இதை எப்படி நம்பப்போகிறான்? வீணான வேத சாஸ்திரத்தின் மூலமாக அவர்கள் தேடினார்கள், 'இப்பொழுது நாம் தீர்க்கதரிசிகள் கொண்ட ஒரு பள்ளியாக இருக்கிறோம். நாம் அதற்குள்ளாகப் பொருந்தியிருக்கிறோம். அவன் என்ன செய்ய வேண்டும் என்று நாம் இப்பொழுது சரியாக அறிந்திருக்கிறோம். அவன் என்ன செய்யவேண்டும் என்று நாம் அறிந்திருக்கிறோம். அவன் தன்னை எப்படி நடத்திக்கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நமக்கு தெரிந்ததெல்லாம் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், உள்ளே வந்து, நான் விசுவாசிக்கிறேன், நான் கைகளைக் குலுக்குவேன், இந்த வழியாக நாம் தெளிப்போம்; அல்லது இந்த வழியாக ஞானஸ்நானம் கொடுப்போம்; அல்லது இந்த வழியாக பின்புறமாக அல்லது வெளியே அந்த வழியாக அல்லது... (ஓ, என்னே‚) நாம் இதைப் பெற்றிருக்கிறோம்'', இப்பொழுது அந்த வழியாகத்தான் அதை அவன் செய்தான். நீங்கள் முன்னே செல்லுங்கள், நீங்கள் இப்படி ஞானஸ்நானம் கொடுங்கள்; அப்படி ஞானஸ்நானம் கொடுங்கள்; இந்த வழியாகத்தான் தெளியுங்கள், அந்த வழியாகத் தெளியுங்கள்; இராப்போஜனத்தை இவ்விதமாக எடுங்கள்; அந்த விதமாக எடுங்கள்; நீங்கள் இன்னுமாய் கண்டுபிடித்தாலும் நீங்கள் தேவனைப் பெற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் ஒரு சடங்காச்சாரமான ஒரு வடிவத்தைப் பெற்றிருக்கிறீர்கள். அதுதான் எல்லாம். தேவன் ஆவியாக இருக்கிறார். அவரைத் தொழுதுகொள்கிறவர்கள் ஆவியோடும் சத்தியத்துடனும் தொழுதுகொள்ள வேண்டும். ஆமென். தேவன் தன்னுடைய தீர்க்கதரிசிகளை மறுபடியும் அனுப்பி இந்தக் காரியங்களைக் கிழித்தெறிந்து இந்த சத்தியத்தைக் கொண்டுவந்து அதைக் காண்பிக்கச் செய்கிறார். வீணான வேத சாஸ்திரம். ஓ, என்னே‚ 50ஆமாம், இந்த குறிப்பிட்ட நபர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். நாம் கீழே சென்று நல்லது உண்மையில், அவர்களில் சிலர் அதைக் குறித்து வியப்பு அடைந்திருக்கலாம். ஆனால் நீங்கள் இங்கே கவனியுங்கள் அந்த யோசபாத் அந்த உண்மையான தேர்ந்தெடுக்கப்பட்ட தேவனுடைய ஊழியக்காரன், 'கர்த்தருடைய ஆவி அவன் மேல் தங்கியிருக்கிறது'', என்றான் என்பதை இப்பொழுது நாம் காண்கிறோம். ஆம் ஐயா. 'எலிசா எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியும்'', என்று அவன், இந்த நபர் சொன்னான். 'அவர் திஸ்பியனான எலியாவின் கைகளில் தண்ணீரை ஊற்றினான். எலியாவின் ஆவி எலிசாவின் மேலாகத் தங்கி இருந்தது, இப்பொழுது அவன் அதே ஆவியை உடையவனாக இருக்கிறான் என்று நான் அறிவேன்'', என்று சொன்னான். ஆகவே... 51மேலும் எலியாவுடைய ஆவி இன்னொரு மனிதன் மேலாக தங்கியிருக்கிறது, எலியா செய்த அதே காரியத்தை இந்த மனிதனும் செய்கிறான் என்று அந்த தேவமனிதன் கேட்ட உடனேயே அவன் ஒரு அசலான உண்மையான தீர்க்கதரிசி என்று தெரிந்துகொண்டான். உண்மையான எலியாவின் ஆவி இன்னொரு மனிதன் மேலாக இருந்தால் எலியா செய்த அதே காரியத்தை அவனும் செய்வான் என்று அவன் அறிந்துகொண்டான். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய சகோதரர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்னுடைய நண்பர்களே, இயேசு கிறிஸ்துவினுடைய ஆவி சபையின் மேலாக வரும்போது இயேசுகிறிஸ்து செய்த அதே காரியத்தை சபையும் செய்யும். 'நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்“ அதை அவர் நிரூபித்தார். அவர்களும் செய்வார்கள் என்று அவர் சொன்னார். அவர்கள் அதைச் செய்யவில்லை என்றால் அங்கே ஏதோ தவறு இருக்கிறது. அவர்கள் ஒரு விசுவாசி என்று சொல்லி இந்த காரியங்கள் செய்யப்படவில்லை என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் வெறுமனே தேவனைப் பொய் சொன்னவராக்கிவிடுவார்கள். 'எந்த மனுஷனுடைய வார்த்தையும் பொய்யாக இருக்கிறது; அவருடைய வார்த்தையோ மெய்யாக இருக்கிறது”, என்று அவர் சொன்னார். 52'உண்மையான அந்த தீர்க்கதரிசியின் ஆவி அவன் மேலாக தங்கியிருக்கிறது“ என்று இந்த மனிதன் சொன்னான், என்பதை நாம் காண்கிறோம். அதன்பிறகு தெரிந்துகொள்ளப்பட்ட அந்த ஒருவன்; இன்றைக்கு தெரிந்தெடுக்கப்பட்ட சபையின் பிரதிநிதித்துவமாகிய கடைசிகாலத்தில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட... அதன் பிறகு உடனே நாம் சென்று அவனிடம் கேட்போம், ஏனென்றால் கர்த்தருடைய ஆவி அவன் மேலாக தங்கியிருக்கிறது. (ஓ, அதை நான் விரும்புகிறேன்) 'எலியா செய்த அந்த காரியங்கள் இந்த மனிதன் மேலாக தங்கியிருந்ததை நான் பார்க்கிறபடியால் நாம் சென்று அவனிடத்தில் கேட்போம்'' என்று அவன் சொன்னான். 'நல்லது நான் பல இரவுகளில் சென்று அவன் பேசுவதை கேட்டிருக்கிறேன், இதுதான் உண்மையென்று நான் அறிவேன். ஆகவே நாம் இப்பொழுது அங்கே சென்று அவனை நாம் கூப்பிடுவோம் என்று இந்த நல்ல சகோதரன் சொன்னான். 53அவர்கள் தீர்க்கதரிசிக்கு முன்பாக வந்தபோது, ஓ, என்னே‚ என்ன ஒரு வரிசைக்குள்ளாக அவன் சென்றான். அவனுடைய திருப்தியில் இது ஒரு வகையான ஒரு சிறிய பாதிப்பை உண்டுபண்ணியிருக்கும். ஆனால் உண்மையில், அவன் கொதித்துப்போனான், அவன் யோராமிடத்தில், 'நீர் ஏன் உன்னுடைய சொந்த தீர்க்கதரிசிகளிடத்தில் போகவில்லை'' (என்னே‚) உன்னுடைய தாயாருடைய தீர்க்கதரிசியினிடத்தில் ஏன் போகவில்லை? ஏன் உன்னுடைய தகப்பனாருடைய தீர்க்கதரிசியினிடத்தில் போகவில்லை? இப்பொழுது உன்னுடைய சம்பிரதாயங்களின்படி போ, நீ விரும்பினால் அதனுடன் போய் சேர்ந்துகொள். நீ தொல்லையில் இருக்கிறாய், ஏன் அவர்களிடத்தில் நீ போகவில்லை? என்று கேட்டான். 'ஓ, இல்லை, இல்லை'' என்று அவன் சொன்னான். 'ஆனால் கர்த்தர் இங்கே எங்களைக் கொண்டு வந்தார், நாங்கள் மரிக்கப்போகிறோம். நாங்கள் கொல்லப்படப் போகிறோம்'', என்று அவன் சொன்னான். நீங்கள் மரிக்க மாத்திரம் போகிறதில்லை. அவர்கள் ஏற்கனவே மரித்துவிட்டார்கள். எல்லா கனிகளும் காய்ந்து போய்விட்டது. அனைத்தும் சபையை விட்டு வெளியே சென்றுவிட்டது. அது ஏற்கனவே ஒருமத சம்பந்தமான ஸ்தாபனமாக மாறிவிட்டது. இப்பொழுது அது சரியே‚ அங்கே ஏதோ தவறாக இருக்கிறது. நாம் எங்காவது தேவனை திரும்ப சபைக்குக்கொண்டு வரமுடியவில்லை என்றால், நாம் என்ன செய்யப்போகிறோம்? அதன் பிறகு நாம் எல்லோரும் அழிந்துபோகப் போகிறோம். இந்த தீர்க்கதரிசி அவனைத் திட்டித்தீர்த்த பிறகு, 'நான் யோசபாத்தின் முன்னிலையை மதிக்கிறேன் அப்படி (அந்த தெரிந்தெடுக்கப்பட்ட மனிதன்) இல்லையென்றால், நான் உன்னை ஏறெடுத்துக் கூட பார்க்கமாட்டேன்'', என்று சொன்னான். 54அப்படித்தான் தேவன் இன்றிரவு சொல்வார் என்று நான் நினைக்கிறேன். மக்களாகிய நீங்கள் இந்த பலவிதமான ஸ்தாபனங்களிலே கண்டுண்டவர்களாயும்; ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கிறீர்கள். அவரை நேசிக்கிற மக்களுக்காக தேவன் மரியாதை கொடுக்கவில்லையென்றால், அங்கே ஒருபோதும் ஒரு ஓரல் ராபர்ட்ஸ் அல்லது வேறு யாராவதுநாடு முழுவதும் அனுப்பப்பட்டிருக்க மாட்டார்கள். அங்கே ஒருபோதும் அடையாளங்களோ, அற்புதங்களோ இருந்திருக்காது. நம்மை அவர் பார்த்திருக்கக் கூடமாட்டார். நாம் எல்லோரும் குற்றவாளியாக இருக்கிறோம். அது தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் நிமித்தமாக இல்லாதிருந்தால், தேவனை உண்மையாகவே விசுவாசிக்கும் ஒருவருக்காக சபையின் நிமித்தமாக; இல்லாதிருந்தால், அவர் நம்மை பார்க்கக் கூடமாட்டார். அது சரியே‚ ஆனால் அங்கே மக்கள் தேவனை விசுவாசிக்க விரும்புகிற காரணத்தினால், தேவன் அவர்களுக்கு ஒரு செய்தியாளனை வைத்திருக்கிறார். ஆமென். பரிசுத்த ஆவியானவர் துக்கப்பட்டு தூரமாக, நீண்ட நாட்களுக்கு முன்பாகவே சென்றுவிட்டார். 55இந்த வயதான தீர்க்கதரிசி உண்மையிலேயே அவருடைய நீதியான; குற்றம் சாட்டுகிறதினால் கிளரிவிடப்பட்டு அவர்களைக் கத்தி கூச்சலிட்டு வெளியேற்றினார். அவர்கள் பெற்றிருந்த அவர்களுடைய எல்லா கூட்டணிகளையும், ஸ்தாபனங்களையும், குறித்து அவர்களிடத்தில் அவன் சொன்னான். 'இருப்பினும், ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்'', என்றான். ஓ, அவனுடைய கோபத்தை சிறிது இறக்க வேண்டியதாயிருந்தது, உங்களுக்குத் தெரியுமா அவன் எல்லாவற்றையும் குறித்துக் கத்தினான். அதனால் அவன், 'ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்'', என்றான். இப்பொழுது கிறிஸ்துவின் சபை மக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிற சிலராகிய நீங்கள் சபையில் இசைப்பதை விசுவாசிப்பதில்லை என்று சொல்கிற உங்களைக் குறித்து என்ன? அவன் எல்லாவற்றைக் குறித்தும் கோபப்பட்ட பிறகு அவன் மேலாக ஆவியை கொண்டு வருவதற்காக ஒருசிறிய இசை அவனுக்குத் தேவையாக இருந்தது. அது சரியே‚ ஆமாம் ஐயா‚ மேலும் நினைவில்கொள்ளுங்கள், தேவன் மாறுவதில்லை. இப்பொழுது நல்ல இசையானது தீர்க்கதரிசியின்மேல் ஆவியை கொண்டு வரும் என்றால், அதன்பிறகு அது இன்றைக்கும் அதே காரியத்தைத்தான் செய்யும் (அது மிகச் சரியாக இருக்கிறது). ஏனென்றால் தேவன் அதை விரும்புகிறார், நிச்சயமாக. 'ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்'', என்று அவன் சொன்னான். நல்லது, 'ஆமாம் நான் தீர்க்கதரிசி இல்லை'' என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் சுரமண்டல வாத்தியக்காரனுடைய பாகத்தை உடையவராக நீங்கள் இருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். அதைக் குறித்து நீங்கள் ஏதோ காரியத்தைச் செய்யலாம், அவ்வளவே‚ உங்களுக்கு ஒரு சாட்சியைக் கொண்டிருக்கலாம். அல்லது நீங்கள் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்யலாம். 56அவர்கள் சுரமண்டலக்காரனைக் கொண்டுவந்து மற்றும் வாசிப்பதை என்னால்காண முடிகிறது. 'எல்லாக் காரியமும் கைகூடிடும்; வெறுமனே நம்பிடுவாய்''‚ மேலும் மீண்டுமாய் ஆவியானது திரும்பிவரத் தொடங்கினது. ஆவியானது தீர்க்கதரிசியின் மேலாக வருவதற்கு முன், 'நம்பிடுவாய், நம்பிடுவாய், எல்லாக் காரியமும் கைகூடிடும்'', என்று கொஞ்சம் வாசிக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு தீர்க்கதரிசி வந்தபோது, ஆவியானது தீர்க்கதரிசியின் மேலாக வந்ததை அவன் கண்டான். மாறாக அவன் ஒரு தரிசனத்தைக் கண்டான். இப்பொழுது அந்த வழியாகத்தான்... பாருங்கள், அவனால் அதைப் பார்க்கமுடியவில்லை... புத்திகூர்மையுடைய; தெரிந்தெடுக்கப்பட்ட; பெரிய கூட்டமாகிய மேல்தட்டு மக்கள், ராஜாக்கள்; ஆட்சியாளர்களாகிய அறிவு சார்ந்த மக்கள்; கல்விசம்பந்தமான மார்க்கத்தை சார்ந்தவர்களாய், தரிசனத்தைப் பார்க்க முடியவில்லை. அதுசரியே‚ அவர்கள் குருடராக இருந்தார்கள். அதுதான் காரணம்; இன்றிரவு அவர்கள் தேவனுடைய தரிசனத்தை ஒரு மனோ நிலையில் அழைக்க விரும்புகிறார்கள். ஒரு தொலையுணர்வுடைய, பிசாசின்ஆவி அல்லது ஏதோ காரியமாக அழைக்க விரும்புகிறார்கள். அது ஏனென்றால், அவர்கள் அவ்வளவு புத்திகூர்மையுடையவர்களாய் இருந்து தேவனைக் குறித்துஅறியாதவர்களாக இருக்கிறார்கள். அது சரியே‚ அந்த உண்மையைச் சொன்னது தரிசனமாக இருந்தது. அது தேவனுடைய திட்டமாக இருந்தது. அது தேவனுடைய வழியாக இருந்தது, ஏனென்றால் தேவனுடைய ஆவியானது தீர்க்கதரிசியின் இடத்தில் வருகிறது. ஆம் ஐயா‚ அது எப்படி வருகிறது? ஒரு தரிசனத்தின் மூலமாக ஆம், ஐயா. அறிவு கூர்மையினால் அல்ல. அது தோல்வி அடைந்தது. அது ஒரு தரிசனத்தின் மூலமாக வருகிறது. இப்பொழுதும் அதேதான் நடந்தது. 57அவன் நோக்கிப் பார்த்தான். ஒரு தரிசனத்தை அவன் கண்டான். 'நல்லது இப்பொழுது இதுதான் அந்த செய்தியின் ஆவியாக இருக்கிறது'', என்று அவன் நினைத்தான். இப்பொழுது அவன் எதைப் பார்த்தான்? இப்பொழுது 'ஓ யோராமே உனக்கு இன்னொரு பட்டப்படிப்பு தேவை. நான் உனக்கு சொல்கிறேன் யோசபாத்தே, நீங்கள் ஒரு சிறு தொல்லைக்குள்ளாக அகப்பட்டு இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் சென்று சிறிது நேரத்துக்கு தொடர்ந்து படியுங்கள் ஏனென்றால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் இப்பொழுது இந்த காரியங்களை எல்லாம் எப்படிச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது. எப்படி ஒரு இராணுவத்தையோ அல்லது எதையோ ஒன்றை நடத்திச்செல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது'', என்றான். அது அப்படி இல்லை. நீ என்ன செய்ய வேண்டும் நான் உனக்கு சொல்கிறேன். உன்னுடைய மனிதர்களை நீ மெருகேற்ற வேண்டும். அவர்கள் சரியான விதத்தில் சீருடைகளை அணியவில்லை. அதுதான் இதுவாக இருக்கிறது. உன்னுடைய எல்லா மத குருமார்கள் கழுத்து பட்டையின் காலரை திருப்பிவிட்டு அதனால் அவர்கள் பார்ப்பதற்கு ஒரு மதகுருமாராக இருக்கும்படியாக அவர்களைச் செய்ய வேண்டும் என்று அவன் அதைச் செய்யவில்லை. ஓ, சீக்கிரத்தில் அது பெந்தெகொஸ்தே அழகாக இருக்கப்போகிறது. அது சரியாக அதற்குள் விரைவில் இருக்கும். கத்தோலிக்க சபை தான் முதல் பெந்தெகொஸ்தே சபையாக இருந்தது. நினைவில் கொள்ளுங்கள். அது மிகச்சரியாக இருக்கிறது. இப்பொழுது நீங்கள் வரலாற்று ஆசிரியர்களாகிய ஒரு சிலர் அதை மறுதலிக்கிறீர்கள்‚ பெந்தெகொஸ்தினர்களுக்கு இன்னொரு நூற்றிஐம்பது வருடங்களைக் கொடுங்கள், அது இப்பொழுது போய்க்கொண்டிருக்கிற வேகத்தில் அது பெந்தெகொஸ்தே சபையைவிட மிகத் தொலைவில் சென்றுவிடும். ஓ, ஆமாம் பெந்தெகொஸ்தே நாளில் கத்தோலிக்க சபை தொடங்கினது, அவர்கள் அதனை ஸ்தாபித்துக் கொண்டார்கள், பெரிய சமூகங்களை அங்கே வைத்துக்கொண்டு இதை மற்றும் அதைச் செய்ய முயற்சி செய்தார்கள், நிக்கோலாய் மதத்தினர் சபை மக்களை மேற்கொண்டார்கள். அங்கே சபை மக்களிடம் உள்ள அதிகாரத்தை அகற்றிவிட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் அங்கே வரமுடியாமல் போய்விட்டது. சகலமும் இவளிடத்தில் ஒரு நபர் சொல்கிறது எதுவோ, எல்லாமாக இருக்க வேண்டும். அதுவே. பரிசுத்த ஆவி கிறிஸ்துவின் முழுசரீரத்திலும் வாசம் செய்தார்... 58பரிசுத்த ஆவி சபையை நடத்துகிறார். அவர்களுடைய கனிகள் எல்லாம் காய்ந்து போய்விட்டது. அது இப்பொழுது எங்கே இருக்கிறது என்று பார்க்கிறீர்களா‚ நல்லது, பெந்தெகொஸ்தேவும் அதே அடிச்சுவடை சென்றடைந்தது, சரியாக அதே வழியில்; அதனால் அது அங்கே இருக்கிறது. இப்பொழுது, ஆவியானது வந்தபோது, தீர்க்கதரிசிக்கு ஆவியானது என்ன தரிசனத்தைக் கொடுத்தது? அவர் என்ன சொன்னார்? என்பதை நாம் காண்கிறோம். 'இப்பொழுது உங்களுடைய போர் வீரர்களுக்கு கல்வி புகட்டுவதால் அவர்கள் அந்த மலையின் உச்சியின் மேலாக செல்லும்போது அவர்கள் அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்று அதிகமாகத் தெரிந்துகொள்வார்கள். அவர்களுக்கு இன்னும் அதிகமான வேதசாஸ்திரத்தைக் கற்றுக்கொடு. அவர்களை சிறிது மெருகூட்ட வேண்டும். அவர்கள் ஒரு நீளமான கத்தியை சுமக்க வேண்டும் அல்லது அதைப் போன்ற ஒரு காரியத்தை; அவர்கள் வேறுபட்ட ஒரு சீருடையை அணியவேண்டும்“, என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. இல்லை‚ அவர் அந்த விதமாகச் சொல்லவில்லை. அவர், இந்த வனாந்திரத்தில் தோண்டுங்கள் என்று சொன்னார். உன்னுடைய மக்கள் ஒருமுறை இந்த வனாந்திரத்தைக்கடந்து சென்றார்கள், அவர்கள் ஒரு வேதசாஸ்திரத்தை சீனாய் மலையின் மேலாக விரும்பினார்கள் தேவன் அதை அவர்களுக்குக் கொடுத்தார்; கிருபையானது, அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியையும் ஒரு அக்கினி ஸ்தம்பத்தையும் எல்லாவற்றையும் கொடுத்த பிறகு அவர்கள் எதையோ குறித்து வம்பு செய்ய விரும்பினார்கள். அதனால் அவர் அவர்களை வனாந்திரத்திலேயே தங்கவிட்டு; பழைய போராளிகள் எல்லோரும் அங்கே மரிக்கும் வரைக்கும்; அவர்களை விட்டுவிட்டார். 59அவர், 'அவர்கள் ஒருமுறை வெளியே இருந்தார்கள். உங்களைப் போலவே அதே வழியில் அழிந்துபோனார்கள்'', என்றார். இப்பொழுது அங்கே வாய்க்கால்கள் உள்ளன. அந்த கன்மலை இருக்கிற இடத்தில் அங்கே வனாந்திரத்தில் அந்த இடத்தில் அதிகமான வாய்க்கால்கள் இருந்தன. ஆனால் 'நீங்கள் நிறையக் காரியங்களைத் தோண்டி எடுக்க வேண்டியதாயிருக்கிறது'' என்று சொன்னான். அதுதான் இன்றிரவு தரிசனமாக இருக்கிறது. சகோதரனே, 'புதிய ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பியுங்கள்'' என்பது கிடையாது. 'அதற்குள்ளாக என்ன இருக்கிறது என்று தோண்டி எடுக்கவேண்டும்'', அது சரியாக இருக்கிறது. முதல் காரியம் அந்தப் பழைய அழுகின மரக் கட்டையான ஸ்தாபனத்தை வாய்க்காலிருந்து வெளியே தூக்கி எறியவேண்டும். இன்றிரவு தேவனுடைய ஆசீர்வாதங்கள் என்னும் வாய்க்கால்கள் எல்லாம் நின்று போய்விட்டது, ஏனெனில் ஸ்தாபனங்கள் என்கிற மரக்கட்டைகள் அவைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, ''பரிசுத்த ஆவி என்ற ஒருகாரியம் ஒன்றுமில்லை'', என்று அழைக்கப்படுகிற மரக்கட்டை அங்கே வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் தோண்டுவீர்கள் என்றால் அந்த மரக்கட்டையை அடியுங்கள், வெளியே தூக்கி எறியுங்கள். அங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று ஒரு காரியமுமில்லை. பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே உரியது. அது சீஷர்களுக்கு மாத்திரமே உரியது என்பதை தோண்டி வெளியே எடுங்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கும் என்று டாக்டர் சீமோன் பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் சொன்னார். 60சற்று நாட்களுக்கு முன்பாக மிகச்சிறந்த அருமையான பெந்தெகொஸ்தே சகோதரன் என்னிடத்தில், 'நமக்கு இனிமேல் எந்த தெய்வீக சுகமளித்தலும் தேவையில்லை என்றார். நான் அதை என்னுடைய சபையில் பயிற்சி செய்வதை அனுமதிப்பதில்லை என்று அவர் சொன்னார். அருமையான மருத்துவர்களையும், காரியங்களையும் அதற்கு மாறாக நாம் பெற்றிருக்கிறோம் என்று அவர் சொன்னார். என்ன விதமான பழைய ஒரு மரத்துண்டு அங்கே இருக்கிறது என்று பாருங்கள்? அது என்ன செய்கிறது? அது தண்ணீர் பாய்வதை நிறுத்துகிறது. அந்த வனாந்திரத்தில் எலிசாவின் தரிசனம் அவருக்கு அதைக் காண்பித்தது. அங்கே கனிகள் காய்ந்துபோனதை சரியாகக் காண்பித்தது...ஒரு புதிய ஸ்தாபனத்தையோ மற்றொரு மழையையோ அல்லது ஏதோவொன்றையோ; ஆரம்பிக்க வேண்டாம். முதல் மழையானது பாய்வதற்காக வாய்க்கால்களை சுத்தம் செய்யுங்கள். கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அந்த அடிக்கப்பட்ட கன்மலை வனாந்திரத்தில் இருந்தது, இன்றும் அது அங்கேயே இருக்கிறது தேவனுக்கு நன்றி. இயேசு அவர்களுக்காக மீண்டுமாக கல்வாரியிலே சுத்தம் செய்தார். ஆனால் பின்னாக சரியாக சுற்றி வந்து மரக்கட்டைகளை மீண்டுமாக எறிந்து எல்லாவற்றையும் தடை பண்ணினார்கள்... 61ஒரு மரக்கட்டையை வாய்க்காலுக்குள் எறிந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும். அது என்ன செய்யும். நல்லது அதன்பிறகு எல்லாவிதமான அழுக்குகள் எதிரெதிராக சென்று கட்டையின் மீது மோதும், கழுவிவிடும். முதல் காரியம் என்ன உங்களுக்கு தெரியும், நீங்கள் எல்லா தண்ணீரையும் பின்பாக தள்ளி (நீர்நாய்கள் ஒரு அணையை (Dam) கட்டுவதுபோல) அதற்குள்ளாக போவதற்கு உங்களிடத்தில் ஒன்றும் இல்லை. நாம் இன்றைக்கு அதிகமான நீர்நாய் பிரசங்கிமார்களைக் கொண்டிருக்கிறோம். எல்லா தண்ணீரும் மேலே போகும்படியாய் அணையை கட்ட முயற்சிக்கிறோம். இது எங்களுடையது, இது வெறுமனே எங்களிடத்தில் இருக்கிறது. இது எங்களை சார்ந்தது என்று சொல்லுகிறோம். அதற்கு என்ன நடந்தது? அது தேங்கிய நீராக மாறிவிடுகிறது. நம்முடைய அனேக ஸ்தாபனங்கள், உங்களுடைய ஸ்தாபனங்களுக்கு மாத்திரம் தண்ணீரை பின்பாக வைக்க முயற்சிக்கிறார்கள் என்பது தான் இன்றைக்குள்ள காரியமாக இருக்கிறது. அது தேங்கிவிடுகிறதாக இருக்கிறது. தேங்கிய நீரில் வாலை வேகமாக அசைக்கக்கூடிய சிறிய புழுக்கள் அதற்குள்ளாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். அதுதான் இன்றைக்குள்ள சபையில் உள்ள காரியமாக இருக்கிறது. இங்கே ஒரு சிறிய நெளிவுசுழிவு, அங்கே நெளிவுசுழிவு எல்லா காரியமும்; அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்றுவிட்டது. தெய்வீக சுகமளித்தல், போன்ற ஒரு காரியம் இல்லை. ஒரு கூட்டத்தில் ஐந்து நிமிடங்கள் வரை உட்கார முடியாமல், தேங்கி நிற்கிற தண்ணீர்; நீர்நாயின் அணை; அதை ஊதி வெளியே தள்ளுங்கள். ஆமென். இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே, எல்லா பாவிகளும் அவ்வூற்றில் மூழ்கினார்கள். எல்லாப் பாவிகளும் அவ்வூற்றில் மூழ்கினார்கள் அவர்களின் எப்பாவத்தீங்கும் நிவர்த்தியாகுமே 62''அங்கே கீழே இறங்கி மற்றும் எல்லா மரக்கட்டைகளையும் தோண்டி வெளியே எடுங்கள்'', என்று தீர்க்கதரிசி சொன்னார். ''நல்லது, நான் உங்களுக்கு சொல்லுகிறேன், 'தீர்க்கதரிசி, நாம் திரும்பிச் சென்று மேலும் இன்னொரு வலிமையான விரைவான பலத்த காற்றைப் பெற்றுக்கொள்வோமா?“ என்று தீர்க்கதரிசி கூறினார். ''இல்லை'' ''நாம் இன்னொரு பின்மாரியை துவங்கலாமா?'' ''இல்லை‚ இல்லை‚'' வெறுமனே வாய்க்காலை சுத்தப்படுத்துவோம்'' அதைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும். நம்மிடத்தில் மக்கள் இருக்கிறார்கள். வாய்க்கால்களை எடுத்து சுத்தப்படுத்துவோம். அதனால், பரிசுத்த ஆவியானவர் உள்ளே வரமுடியும். உங்களுடைய எல்லா வேடிக்கையான காரியங்கள்,கொள்கைகள், சபைக்குள்ளாக இருக்கிற அந்த எல்லா காரியங்களையும் சுத்தப்படுத்தி வெளியே தள்ளுங்கள். அந்த கன்மலை ஏற்கனவே அடிக்கப்பட்டாயிற்று. தண்ணீர்கள் புத்தம் புதியதாக இருக்கிறது. ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் நம்முடைய கிறிஸ்துவ உலக சபை அமைப்புகள் நீரோடையில் அணைக்கட்டு போட்டுவிட்டனர். 'அந்த காரியங்களை எல்லாம் சுத்தப்படுத்துங்கள். உங்களுக்கு இன்னொரு விரைவான காற்றை பெற்றிருக்க வேண்டாம். நீங்கள் காற்றையும் வேறொரு மழையையும் காணவேண்டும் என்று விரும்பவேண்டாம். ஆனால் இன்னுமாய் அங்கே தண்ணீர் இருக்கும் என்று சொன்னார். ஓ, சகோதரனே ஒரு புதிய அமைப்பு கிடையாது. ஒரு புதிய அமைப்பு நமக்கு தேவை இல்லை; நமக்கு தேவை என்னவென்றால், சுத்தம் செய்யப்பட்ட அமைப்புதான் வேண்டும். இன்னொரு தேவகூட்டு சபையை நாம் உண்டாக்க வேண்டாம். இன்னொரு ஒருத்துவக்காரர்கள், ஆனால் வெறுமனே சுத்தம் செய்யப்பட்ட ஒருத்துவரும், கூட்டு சபைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். எல்லா மரக்கட்டைகளையும் அதிலிருந்து வெளியே எடுத்துவிடுங்கள். எல்லா வேறுபாடுளையும், சண்டைகளையும், குழப்பங்களையும் அதைப் போன்ற மற்ற காரியங்களையும் அவைகளிலிருந்து வெளியே எடுத்துவிடுங்கள். தண்ணீர்கள் திரும்பி மீண்டும் பாய்ந்து செல்லும். அங்கே சந்தோஷம் இருக்கும், சமாதானம் இருக்கும். ஒரு நதியைப் போல பாய்ந்து செல்லும். ஒருவருக்கொருவர் அன்புடன் இருங்கள். 'நாம் பிரிந்திருக்க வேண்டாம். நாம் எல்லோரும் ஒரே சரீரம். ஒரே நம்பிக்கையிலும் உபதேசத்திலும் ஒரே மனப்பாங்கோடு இருக்கவேண்டும்'', அதுதான் அது. 63அந்த வழியாகத்தான் நாம் அதைச் செய்ய வேண்டும். அதுதான் இன்றைய எண்ணமாக இருக்க வேண்டும். அதுதான் இன்றைய தரிசனமாக உள்ளது. அதுதான் தீர்க்கதரிசியின் தரிசனமாக இருந்தது. இன்றைக்கும் அதே தரிசனத்தை உடையவனாக ஒரு உண்மையான தீர்க்கதரிசி இருக்கிறான். ஏதோ ஒரு புதுஸ்தாபனத்தை துவக்கி வைத்து, இன்னொரு குழுவை உண்டாக்குவது இல்லை. நீங்கள் வெறுமனே அதில் வம்பு செய்து, அதை ஸ்தாபித்து; மற்றவர்களைப் போல பெற்றுக்கொண்டு; அதற்குள்ளாக கட்டைகளையும் கூட வீசுவீர்கள். நான் ஊழியத்தை முதலில் துவக்கினபோது அநேகர் என்னிடத்தில் வந்து, 'நல்லது சகோதரன் பிரான்ஹாம் நீங்கள் சிறியதாக ஒரு ஸ்தாபனத்தைத் துவக்கவேண்டியிருக்கும்'' என்று சொன்னார்கள். 'ஸ்தாபனமா? நான் அதற்கு எதிராகவல்லவா இருக்கிறேன்“, என்று நான் சொன்னேன். 'நமக்குத் தேவையானது ஒரு ஸ்தாபனம் அல்ல. நாம் பெற்றுள்ளதை சுத்தம் செய்வதே காரியமாக இருக்கிறது'', என்று நான் சொன்னேன். அதுதான் சரியாக இருக்கிறது. அதை சுத்தம் செய்வதே‚ நமக்கு ஒரு எழுப்புதல் தேவை. நமக்கு ஒரு தோண்டுகிற நேரம் அதுதான் தேவையாக இருக்கிறது. தோண்டுங்கள்‚ தோண்டுங்கள்'' நீங்கள் ஆழமாகத் தோண்டினால் நீங்கள் அதிகமாகத் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளப் போகீறீர்கள். நீங்கள் கீழாகத் தோண்டும்போது, 'நல்லது நான் இப்பொழுதுதான் ஸ்தாபனத்தை விட்டு வெளியே வந்தேன்'', என்று சொல்லுங்கள். நீங்கள் இன்னுமாய் அங்கு பெற்றுக்கொண்ட காரியங்களைப் பாருங்கள்; பகை, சண்டை, மற்றவை எல்லாம். திடமான பாறைக்குச் செல்லும் வரை பள்ளத்தை சுத்தம் செய்யுங்கள். அதுதான் சரி. இம்மானுவேலுடைய இரத்த நாளங்களிலிருந்து உண்மையிலே ஊற்றக் கூடிய தண்ணீர் உள்ள இடத்தில் இறங்குங்கள். நீங்கள் அந்த இடத்திற்கு இறங்கும் வரை காத்திருங்கள். நீரூற்றுபோல கொட்டுகிறதான தண்ணீர் அங்கே இருக்கும். அங்குதான் நான் வருகிறேன். 64இந்த எல்லா பள்ளங்களையும் தோண்டுங்கள். இந்த பள்ளத்தாக்குகளில் இறங்குங்கள், நீங்கள் எல்லோரும் எல்லா நேரத்திலும் வீட்டுமேற் கூரையிலே; அந்த மலையின் மேலாக ஜீவிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறீர்கள். கத்திக்கொண்டும்; எகிறி குதித்துக் கொண்டும்; உறைந்து கொண்டும்; தீய்ந்து போயும்; எல்லாவற்றையும் என்று சொல்கிறீர்கள்... 'நல்லது... அதன் பிறகு...“ அப்படிச் செய்யாதீர்கள். இங்கு கீழே இறங்கி, இந்தப் பள்ளங்களை கீழே தோண்டி எடுத்து சுத்தமான புத்தம் புதிய தண்ணீரைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதுதான் நமக்குத் தேவையாக இருக்கிறது. இங்கே தண்ணீரைப் பெறும்படி கீழே வாருங்கள். இன்றிரவு நமக்குத் தேவையானது தேவனுடைய நீராக இருக்கிறது. தரிசனமானது அந்த மரிக்கிற அழிந்துபோகிற மக்களுக்கு தேவனுடைய முற்றிலுமான சித்தத்தை வியாக்கியானிக்கிறது. தேவனுடைய தரிசனம் இன்றிரவு... இந்த காரியங்களை சுத்தம் செய்து, புதிதாக துவக்குகிறது. சுத்தம் செய்யுங்கள். ஒருபுதிய ஸ்தாபனத்தை துவக்குவது இல்லை. ஸ்தாபனத்தில் ஒரு எழுப்புதலை துவங்குவதல்ல; ஒரு புதிய கூட்டத்தை ஆரம்பிப்பதல்ல.உங்களுடைய குற்றம் கண்டுபிடிக்கிற காரியங்களை; பின்புரளி பேசுகிற காரியங்களை; வணங்காக ழுத்துக்களை; எல்லா இந்த மூடபழக்க வழக்கங்களை; அவிசுவாசம் எல்லாவற்றையும் தோண்டி எடுங்கள். காரியங்களை வெளியே இழுத்துவிடுங்கள். தேவனை உள்ளே வரவிடுங்கள். 'நல்லது, நான் சொல்கிறேன்... ஆனால் சகோதரன் பிரான்ஹாம் அது இதைத்தான் அர்த்தப்படுத்துகிறதா?...'' என்ன அதனுடைய அர்த்தம் என்பது எனக்குக் கவலையில்லை. நீங்கள் தோண்டுங்கள் அல்லது மரியுங்கள். சிக்காக்கோ மெதோடிஸ்டாகிய நீங்கள் எல்லோரும் தோண்டிக்கொண்டிருங்கள். சிக்காக்கோ பாப்டிஸ்டுகளே தோண்டுங்கள், அல்லது அழிந்து போங்கள். சிக்காக்கோ பெந்தெகொஸ்தேயினரே தோண்டிக் கொண்டிருங்கள், அல்லது அழிந்துபோங்கள். காரியத்தை தோண்டி எடுங்கள். வெளியே தூக்கி எறியுங்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அது ''கர்த்தர் உரைக்கிறதாவது'' அங்கேயுள்ள இந்த ஊழலை நீங்கள் தோண்டி எடுக்காவிட்டால், நீங்கள் அழிந்துவிடுவீர்கள். உங்களுடைய கனியும் சபையும் காய்ந்து போய் மரித்துவிடும். அதைத் தோண்டி வெளியே எடுங்கள். நீங்கள் வேறொரு பின்மாரியை அல்லது வேறொரு முன்மாரியை அல்லது எதுவாக இருந்தாலும் கேள்விப்படமாட்டீர்கள். ஆனால் அங்கே ஒவ்வொரு இருதயத்திலும் ஓடுகிற நதிபோல தண்ணீரும் சமாதானமும் இருக்கும்…, ஆம் ஐயா. 65இப்பொழுது ஒரு உண்மையான பெந்தெகொஸ்தேயில் பாய்ந்து கீழே வருவதைப்போல நீங்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் அதிசயங்களையும் தேவனுடைய வல்லமைகள் திரும்பி சபைக்குள்ளாக வருவதையும் நீங்கள் காண்பீர்கள். ஆம் ஐயா‚ ஆம் ஐயா‚ ஆவியின் செய்தியானது, 'தோண்ட தொடங்குங்கள் அல்லது அழியத்தொடங்குங்கள்“ என்பதாக இருந்தது. அவர்கள் ஏற்கனவே அழிந்து போனார்கள், அதனால் அவர்கள் அதைத் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. அதைத் தோண்டி எடுங்கள், சுத்தம் செய்யுங்கள்; நீங்கள் அதிக ஆழமாகத் தோண்ட, நீங்கள் நன்றாக உணர்வீர்கள். கிறிஸ்துவ உலக அமைப்புகள் எல்லா வாய்க்கால்களையும் அடைத்துப்போட்டது. ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டது. நமக்கு தெய்வீக சுகமளித்தல் இன்றைக்கு நமக்குத் தேவையில்லை“, என்கிற அந்த பழைய மரக் கட்டைகளை எடுத்துவிடுங்கள். ஏன் நாம் முன்பு பெற்றிருந்ததைக் காட்டிலும் இன்றைக்கே நமக்கு அதிகமாக தேவையாக இருக்கிறது. 'நாங்கள் சிறந்த மருத்துவர்களை கொண்டிருக்கிறோம். (அது சரி) சிறந்த மருந்துகளை கொண்டிருக்கிறோம். (சரி) சிறந்த மருத்துவமனைகளை கொண்டிருக்கிறோம். (சரி) என்று சொல்கிறீர்கள்''. ஆனால் அதிகமான வியாதிகளையும் பெற்றிருக்கிறோம். சரியே‚ ஏனென்றால் நாம் அதிகமான அவிசுவாசத்தைக் கொண்டிருக்கிறோம். சரியே‚ அது மிகச்சரியாக இருக்கிறது. மக்கள் வெறுமனே பெறாமல்... 66இப்பொழுது அவர் சொன்னதைக் கவனியுங்கள்... இப்பொழுது அடுத்த காலை வேளையில் அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த எபிரேயர்கள் அங்கே சொன்னதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். 'நான் கர்த்தருடைய தரிசனத்தைக் கேட்டேன். தீர்க்கதரிசி உண்மையைக் கூறினார். நான் இந்த காரியத்தை தோண்டி எடுக்கப்போகிறேன். (அங்கே ஒரு பழைய மரக்கட்டையை இடித்தது) என்ன இது? 'என்னுடைய கூலியில் பத்தில் ஒரு பங்கு''... 'நல்லது, நாங்கள் சூப்பை விற்று நம்முடைய பிரசங்கிமார்களுக்கு சம்பளம் கொடுக்கிறவர்களைக் கொண்டிருக்கிறோம். அந்த மரக் கட்டையை அங்கிருந்து தோண்டி வெளியே எடுங்கள். அங்கிருந்து வெளியே அதை எடுங்கள் நீங்கள் தேவனுக்கு பத்தில் ஒன்று கடன்பட்டிருக்கிறீர்கள். அதை தோண்டி வெளியே எடுங்கள். அதை வெளியே எடுத்து ஒரு பக்கத்தில் வை. நேரடியாக மற்றொரு பழைய மரக் கட்டை இடிக்கிறது. என்ன அது? நல்லது, இப்பொழுது நீங்கள் முடிவுவரை ஆழமாக இறங்கவில்லையா?'' அந்த காரியத்தை வெளியே இழுங்கள். அதை வெளியே எறியுங்கள். அதைத்தான் நீங்கள் அந்த ஆழமற்ற பாகத்தில் அதைப் பெற்றுக்கொண்டீர்கள். ஆம் ஐயா. காரியத்தை வெளியே தூக்கி எறியுங்கள். நீங்கள் அதிக ஆழத்தில் தோண்டினால் அதிகமான தண்ணீரைக் கண்டுபிடிப்பீர்கள். தேவனுடைய பண்டக சாலையில் தோண்டிக்கொண்டே இருங்கள். உண்மையான ஜீவதண்ணீரில் அதை நிரப்பும் இடத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வரை மற்ற காரியத்தை வெளியே எறியுங்கள். 67அதன்பிறகு பகல் வெளிச்சத்தில் அவர்கள் கவனிக்க நேர்ந்தபோது தண்ணீர்கள் வந்தது, மேலும் அது எங்கிருந்து வந்தது என்று அவர்களுக்குத் தெரியாது. அது எல்லா நேரத்திலும் அங்கே தான் இருந்தது. அவர்கள் அதை அடைத்துப்போட்டார்கள். அங்கே தான் சபையில் வல்லமை இருக்கிறது, நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நான் எந்த ஒரு ஊழியக்காரனுக்கும் சொல்வேன். அங்கே தேவன் சபைக்கு வியாதியஸ்தர்களை சுகப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், இந்த எல்லா காரியங்களையும் செய்யும்படியாக வல்லமை கொடுத்தார் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க முடியும். எங்கே இயேசு கிறிஸ்து இப்பொழுது நான் அதை சபையைவிட்டு எடுத்துவிடுகிறேன்'', என்று சொன்னார் என்று இப்பொழுது நீங்கள் வந்து உங்கள் விரலை வேதாகமத்தின் மேலாக வைத்துக் காட்டுங்கள். நல்லது அதன்பிறகு என்ன நடந்தது? என்ன காரியமாக இருக்கிறது? நீங்கள் அதை அடைத்துப் போட்டீர்கள். உங்களுடைய சொந்த எண்ணம் அதை அடைத்துப் போடும்படியாகச் செய்தது. இயேசு இந்தக் கடைசி நாளில் எங்கே வாக்குத்தத்தம் செய்தார் என்றும், நீங்கள் பார்க்க நடைபெறும் இந்த அடையாளங்களை அந்த தேவனுடைய ஆவி சபைக்குள்ளாக வந்து தரிசனங்களைக் காண்பித்து அதைப் போன்றவற்றை அவர் செய்கிறபடியே செய்வதை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன் என்று என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும். 68காரியத்தினுடைய காரணம் என்னவென்றால், நீங்கள் எல்லோரும் அதிகமாக உங்களிடத்திலிருந்த கிறிஸ்தவ சபை அமைப்புகளால் அடைத்துப்போட்டீர்கள். அது எல்லாம் அடைபட்டுவிட்டது. காரியத்தை தோண்டி வெளியே எடுங்கள். அதை தூக்கி தூர எறியுங்கள், தண்ணீர்கள் ஓடும்படியாய் விட்டுவிடுங்கள். அது தொடங்கிய நாளில், உதயமான நேரத்தில், ஓ, சகோதரனே, அந்த அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து தண்ணீர்கள் சுதந்திரமாக பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அது இன்னும் அந்த வனாந்திரத்திலே அங்கேயே இருக்கிறது. அவர் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவராக இருக்கிறார். நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியம் இந்த எல்லா பழைய கட்டைகளையும் வழியிலிருந்து எடுத்துப்போட வேண்டும். எல்லா பழைய அவிசுவாசங்களையும் வழியிலிருந்து எடுத்துபோடுங்கள். அந்த அவிசுவாசத்தைப் பிரித்து எடுத்து தூர எறியுங்கள். நல்லது இப்பொழுது கவனியுங்கள் இயேசு அதை வாக்குத்தத்தம் செய்தார். யார் என்ன சொன்னாலும் அக்கறை கொள்ளாதீர்கள், நான் அதை விசுவாசிக்கிறேன் என்று சொல்லுங்கள். அதுதான் சரி. மரக்கட்டையை எடுத்து அதை வெளியே தூக்கி எறியுங்கள். ''தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதை எனக்கு முன்பாக இங்கே சரியாக நான் காண்கிறேன். நான் எப்பொழுதும் அதை கேலி செய்தேன். நான் அதை தவறு என்று நினைத்தேன். ஆனால் இப்பொழுது நான் அதை விசுவாசிக்கப் போகிறேன். அதனால் இந்த பழைய மரக்கட்டையை எடுத்து அதை வெளியே தூக்கி எறியப் போகிறேன்“ என்று சொல்லுங்கள். நீங்கள் அந்த மரக்கட்டையை வழியிலிருந்து வெளியே எடுத்த உடனேயே இனிமையான சமாதான கர்த்தருடைய தண்ணீர்கள் ஒரு நதியைப் போல பாய்ந்துசெல்லும்; உன் மூலமாக பிரவாகித்துச் செல்லும். 69'நல்லது, நான் எப்பொழுதும் ஆச்சரியப்படுவேன்...“ சுகமளித்தல்; இங்கே நான் மக்களிடத்தில் என்ன கண்டு பிடித்தேன் என்றால்... சுகமளித்தலை தேவன் தாமே உங்கள் மத்தியில் சரியாக இங்கே கடந்து வந்து நிரூபிக்கும்போது, அது உங்களுக்கு என்னவென்று தெரியுமா? நீங்கள் விசுவாசத்தை ஒருபகட்டு வண்ண கொத்து மலரோடு பொருத்த முயற்சி செய்கிறீர்கள். விசுவாசம் களைகளினாலும், ஈசோப்பினாலும் செயல்பட்டது. ஈசோப்பு வெறுமனே எளிதாக கிடைக்கக்கூடிய களைகள். நீங்கள் விசுவாசத்தை செயலாக்க முயற்சி செய்கிறீர்கள். உங்களால் விசுவாசத்தைக் கொண்டு செயலாக்க முயற்சிசெய்ய முடியாது. விசுவாசம் மிக சாதாரணமாக இருக்கிறது. நீங்கள் சென்று தண்ணீர் குடிக்க உபயோகிக்கும் விசுவாசம், நீங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு உபயோகிக்கும் விசுவாசம் போன்ற சாதாரண விசுவாசம் அது. ஏன், ஈசோப் அது நிலத்தில் வளருவதை உங்களால் பார்க்கமுடியும். கட்டிட வெடிப்புகளில், எங்கும் வளருவதை உங்களால் காண முடியும். அவர்கள் இரத்தத்தை ஈசோப்பினால் பூசினது போலவே விசுவாசத்தை உபயோகித்தார்கள். 70நீங்கள் சாதாரணமாகவே விசுவாசத்தை உபயோகியுங்கள். இரத்தத்தை சாதாரணமான களையைக் கொண்டு பூசினதுபோல விசுவாசத்தை உபயோகியுங்கள். ஆனால் நீங்கள் சுற்றிலும் பார்க்க விரும்புகிறீர்கள், 'நான் ஒரு பகட்டு வண்ணமலர் கொத்தைக் கண்டுபிடித்து உபயோகிப்பேன் என்றால்... நான் இயேசுவை நம்புகிறேன். நான் எப்பொழுதாவது சென்று ஒரு பகட்டுவண்ண மலர் கொத்தைப் பெறமுடிந்தால்'' என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு ஒரு பகட்டு வண்ண மலர்கொத்து தேவை இல்லை. சரியாக உங்களுக்குப் பக்கத்தில் உள்ள அந்த களைகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிற்குப் போக உபயோகிக்கும் விசுவாசத்தை, எந்த விசுவாசத்தோடு வீட்டிலிருந்து வந்தீர்களோ அந்த விசுவாசத்துடன் இன்றிரவு அதையே உபயோகியுங்கள். என்ன நடக்கும் என்று கவனியுங்கள், ஓ, சகோதரனே‚ அது உண்மையிலே அந்த வகையான இரத்தம் உபயோகப்படும் என்றால், அங்கே ஒருபோதும் ஒரு சந்தேகமும் உங்களுடைய சிந்தையில் இருக்காது. எனக்குக் கவலையில்லை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 'நான் எல்லா பழைய மரக்கட்டையான கிறிஸ்துவ உலக அமைப்புகளையும் என்னுடைய அமைப்புகளிலுள்ள எல்லாக் காரியங்களையும் இன்றிரவு சரியாக இப்பொழுதே வெளியே இழுத்துப் போடுகிறேன். தேவனே கர்த்தாவே, வெறுமனே சாதாரன விசுவாசத்தினால் நான் உம்மை என்னுடைய சொந்த இரட்சகராகவும், நீரே என்னுடைய சுகமளிப்பவராகவும் இருக்கும்படி விசுவாசிக்கிறேன். ஆமென். ஆமென். அதை அந்தவிதமாக விசுவாசியுங்கள். ஒரு நதியைப் போல சமாதானத்தை; ஒருபோதும் வறண்டு போகாத ஏராளமாகப் பொங்கி வழிகிற அந்த நீரூற்றைப்போல உள்ளது. அந்த பழைய கட்டைகளை அகற்றும்போது அந்த நீரூற்று எப்பொழுதும் பொங்கி வழியும். 71வெறுமனே தோண்டிக் கொண்டே இருங்கள். அங்கே ஏதாவது ஒருகாரியத்தில் இடிப்பீர்கள் என்றால் அது உங்களை... நீங்கள் ஏதாவது ஒரு தவறைச் செய்வீர்கள் என்றால்... 'நான் இன்னார், இன்னார், இடத்தில் கொஞ்சம் பணம் கடன்பட்டிருக்கிறேன்“, என்று சொல்வீர்கள் என்றால், போய் அதைச் செலுத்துங்கள். 'என்னால் அதைச் செலுத்த முடியவில்லை” என்றால் நீங்கள் அவரிடத்தில் சென்று அதைப்பற்றிச் சொல்லுங்கள்.கொஞ்சம் காலம் அவகாசம் தாருங்கள்; அதைச் சரி செய்துவிடுகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். அதுதான் சரியாக இருக்கிறது. அதற்காக புதரைச் சுற்றி அடிப்பதுபோல் செய்ய வேண்டாம். பாருங்கள். அதை நேராக்க சரியானதை நான் செய்கிறேன் என்று சொல்லுங்கள். நல்லது என்னவென்று நான் உங்களுக்கு சொல்கிறேன். 'பெந்தெகொஸ்தே மக்கள் என்று அழைக்கப்படுகிறவர்களை நான் வேடிக்கை செய்தேன்''. அதைச் செய்ததற்காக என்னை மன்னியுங்கள் என்று எழும்பிச் சொல்லுங்கள். அதுதான் சரியானது. 'கர்த்தாவே நீர் என்னுடைய இருதயத்தை அறிவீர். மக்களே என்னை நீங்கள் மன்னியுங்கள்“, என்று சொல்லுங்கள். அந்த பழைய மரக்கட்டை வெளியே செல்வதை நீங்கள் உணர்வீர்கள். இன்னும் கொஞ்சம் தண்ணீர் அதற்குள்ளாக செல்லுகிறது. ஓ, என்னே‚ வெறுமனே சுழன்று செல்லுதலே‚ முதலில் நடக்கும் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா... 'அந்த தரிசனங்கள் எல்லாம் பிசாசினால் உண்டானது என்று எப்பொழுதும் நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்பொழுதோ அவைகள் தேவனால் உண்டானது என்று பார்க்கிறேன்'', அதன் பிறகு அந்த பழைய மரக்கட்டை அப்பால் சென்றுவிடும். அதன் பிறகு மீண்டுமாக தண்ணீர்கள் ஊற்றத் தொடங்கும். அதுசரியே. அந்த பள்ளத்திலிருந்து எல்லா காரியமும் வெளியேறிய பிறகு, அங்கே தண்ணீர் இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் என்று வேதாகமம் சொல்கிறது. அதனால் அவர் இன்னுமாக அந்த அடிக்கப்பட்ட கன்மலையாக இருக்கிறார். அவர் இன்னுமாக ஜீவனை உடையவராக இருக்கிறார். இன்னுமாக தண்ணீரைக் கொண்டிருக்கிறார். அவர் சுகமளிக்கும் வல்லமை உடையவராக இருக்கிறார். 'சகோதரன் பிரான்ஹாம் இயேசு என்னை சுகமாக்குவாரா?'' என்று நீங்கள் கேட்கலாம், அவர் அதை ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். அந்த மரக்கட்டைகளை வழியிலிருந்து வெளியே எடுங்கள். 72எல்லா குப்பைகளையும், மேலும் பழைய வாளிகளையும் மேலும் தொட்டிகளையும் எல்லா அந்த பொருட்களையும் வழியிலிருந்து வெளியே எடுங்கள். பழைய மரித்த குதிரைகளை உங்களுடைய வழிகளில் அமைந்திருக்கும், கிறிஸ்துவ உலக அமைப்புக் காரியங்கள் யாவற்றையும் வெளியே தூக்கி எறியுங்கள். அது அந்த விதமாக இருக்கும் வரை தேவன் உள்ளே வரப் போவதில்லை. அது தண்ணீரை மாசுப்படுத்திவிடும். தண்ணீரோ மாசுப்படப்போவதில்லை. உங்களுடைய சொந்த அவிசுவாசமாகிய மாசுப்பாட்டை வெளியே எடுங்கள். தேவன் தண்ணீரை உள்ளே அனுப்புவார். அது ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால் காரணமானதை அகற்றி வெளியேற்ற வேண்டும். சுகப்படுத்துதல் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது. தேவன் ஏற்கனவே உங்களை சுகப்படுத்திவிட்டார். நீங்கள் உங்களுடைய அவிசுவாசத்தை வழியிலிருந்து வெளியேற்ற வேண்டும். அதுதான் தரிசனமாக இருக்கிறது. அந்த நாளிலே எலிசா அதை சொன்னவிதமாக; கர்த்தருடைய நாமத்தினால் நான் சொல்லுகிறேன், கர்த்தர் உரைக்கிறதாவது உங்களுடைய வழியிலிருந்த அவிசுவாசத்தை வெளியேற்றுங்கள்; என்ன நடக்கப்போகிறது என்று கவனியுங்கள். உங்களுடைய அமைப்புகளை வழியிலிருந்து வெளியே எடுங்கள். சிக்காக்கோவில் என்னவிதமான ஒரு எழுப்புதல் உண்டாகும் என்பதைக் கவனியுங்கள். என்னவிதமான ஒரு எழுப்புதல் இந்த உலகத்தில் உண்டாகும் என்பதைக் கவனியுங்கள். நம்முடைய அமைப்புகளை வழியிலிருந்து வெளியே எடுப்போம் என்றால், நம்முடைய சொந்த எண்ணங்களை வழியிலிருந்து வெளியேற்றுவோம் என்றால், மேலும் ஆவியை வரவிடுவோம் என்றால்... அது ஏற்கனவே இங்கே ஆயத்தமாக இருக்கிறது. கன்மலையானது ஏற்கனவே அடிக்கப்பட்டுவிட்டது. அந்தக் காரியங்களை வழியிலிருந்து வெளியே எடுத்து அதைப் பாயவிடுவதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம். மக்கள் சுகமாவதை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? நீங்களும் சுகமாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? வழியிலிருந்து எல்லா சந்தேகங்களையும் வெளியே எடுத்துவிடுங்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள். அது ஒரு நதியைப்போல பாய்ந்தோடும். 73அதன்பிறகு அடுத்த நாள் காலையிலே எதிரியானவன் அதனூடாகப் பார்த்தான். அவன் அதைச் செய்தபோது... அது தண்ணீர்தான், ஆனால் எதிரிக்கோ, அதன் மேலாக சூரியன் பிரகாசித்த விதம் பார்ப்பதற்கு இரத்தத்தைப்போல காட்சி அளித்து, அவனை பயமுறுத்தியது. அது சரியே‚ அது அவனுடைய மனதில் சில சிறிய வேடிக்கையான சிந்தனைகளை உருவாக்கி சரியாக அதில் அவன் சிக்கிக்கொள்ளச் செய்தது. தீர்க்கதரிசி அவர்களிடத்தில் என்ன சொன்னான்? 'ஏன் கர்த்தருக்கு இது ஒரு சிறிய காரியமாக இருக்கிறது என்றான். நீங்கள் எல்லோரும் வெறுமனே எல்லா மரக்கட்டைகளையும் வழியிலிருந்து எடுத்துவிடுவீர்கள் என்றால் மீதம் உள்ளவற்றை தேவன் கவனித்துக்கொள்வார்'', என்று சொன்னான். 74என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? 'ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குத் தேசத்தை கொடுக்கப்போகிறேன். நீங்கள் அதை சுதந்தரித்துக்கொள்ளும்படி செய்வேன்'', என்றார். மேலும் ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்லை எடுத்துக்கொண்டான். அவன் அங்கே போய் சேர்ந்ததும், அங்கே பழைய முறைமையான கிணறுகள் இருந்தது. அவனுக்கு ஒரு அருமையான ''பாறை“ சாட்சி உண்டாயிருந்தது. ஆமென். 'தேவனுக்கு மகிமையுண்டாவதாக'' கர்த்தாவே எனக்கு பரிசுத்த ஆவியைத்தாரும். நான் சீமோனைப் போல இருக்கிறேன். நான் இப்பொழுது பேதுருவாக இருக்கிறேன். ஒரு சிறிய கல்லாக ஆமென். மேலும் ஒவ்வொருவரும் அவனுடைய சொந்த கல்லை அவனுடைய கைகளில் எடுத்துக்கொண்டான். ஒரு உண்மையான சாட்சி; ஒரு உண்மையான அக்கினிமயமான சாட்சி. இயேசு பேதுருவுக்கு முன்பாக வந்தபோது, 'உன்னுடைய பெயர் சீமோன். இனிமேல் நீ பேதுரு என்று அழைக்கப்படுவாய்'' அது 'சிறிய கல்லாக இருக்கிறது என்று சொன்னார். சகோதரனே, அவன் அதை எடுத்துக்கொண்டான். அவர் மேசியாவாக இருந்தார் என்று அவன் தெரிந்துகொண்டான். அவன் தொலைவில் சென்றான். மேலும் அவன் அதைக் கொண்டு முறைமையான கிணறுகளை தடை செய்தான். 75இன்று நமக்குத் தேவையானது, ஓ, இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்கிற அது மாதிரியான சாட்சியைப் பெற்றிருப்பதுதான். அவர்..., 'அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்றுவிட்டது, அங்கே அப்பேற்பட்ட ஒரு காரியமே இல்லை'', என்கிற பழைய சாட்சி கூறும் முறைமைகளை எல்லாம் நிறுத்திவிடும். அவைகள் பழைய வெடிப்புள்ள தொட்டிகள், எப்படியும் அவைகளில் வேகமாக நெளிந்து செல்லுகிறவால்கள் இருக்கும் பூச்சிகளை, அது தடுத்து நிறுத்தும். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்கிற அந்த சாட்சியின் கல்லை நீங்கள் அங்கே எறிந்துவிடுகிறீர்கள். ஆவிக்குள்ளாகுங்கள்‚ நீங்கள் ஆவிக்குள்ளாக பிரவேசித்தே ஆகவேண்டும். நீங்கள் ஒரு நடனத்திற்குச் சென்று, நடனமாடத் துவங்குகிறீர்கள். அவர்கள் எல்லோரும் நடனமாடிக்கொண்டு கைகளைத் தட்டத் துவங்குகிறார்கள். அங்கே நீங்கள் நின்று கொண்டு நீங்கள் ஒரு நடனமாடுபவராக இருக்கமாட்டீர்களா? நிச்சயமாக ஆமாம். நீங்கள் நிச்சயமாக அந்த ஆவிக்குள்ளாகிறீர்கள். ஓ, அவர்கள் அதை உற்சாகப்படுத்தி நடனமாடி, உரக்கக் கத்தி, கூச்சலிடுவார்கள். 76அவ்விதமாகத்தான் ஒரு எழுப்புதலை நீங்கள் பெறுகிறீர்கள். அங்கே தான் நீங்கள் உண்மையிலேயே ஒரு எழுப்புதலின் ஆவிக்குள்ளாக பிரவேசிக்கிறீர்கள். அதை கத்தி கூச்சலிடமாட்டீர்கள். அல்லது ஏதோ ஒன்றை, அங்கே ஒரு எழுப்புதல் உங்களுடைய இருதயத்தில் மோதி அடிக்கும் வரைக்கும் உலக கிறிஸ்துவ அமைப்புகளின் எல்லா மரக்கட்டைகளும், எல்லா கேலிக்குரிய மரக்கட்டைகளும், எல்லா அமைப்புகளின் மரக்கட்டைகளும், எல்லா அவிசுவாசத்தின் மரக்கட்டைகள் யாவும் வெளியே பாய்ந்து செல்லும் வரைக்கும், நீங்கள் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருக்க வேண்டும். அதன் பிறகு தேவனுடைய தண்ணீர்கள் உங்கள் மேலாக வந்துவிழும். அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள். அதன்பிறகு நீங்கள் ஒரு சாட்சியாக இருக்கிறீர்கள். நீங்கள் வீட்டிற்குப் பின்பக்கமாக சிகரெட்டைப் புகைத்துக்கொண்டு; இன்றிரவு இங்கே சபையைச் சுற்றி எகிறி குதித்துக் கொண்டு, நான் பரிசுத்தஆவியைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்லமாட்டீர்கள். நீங்கள் ஓசையுடைய வெண்கலமாகவும்,கைத்தாளமிடுகிற தம்புராவைப் போலவும் இருக்கிறீர்கள். மக்கள் அதை அறிவார்கள். நீங்கள் இங்கிருந்து வெளியே சென்றவுடன் எல்லாவிதமான ஜீவியத்துடன், ஸ்திரீகள் குட்டை தலைமுடியுடனும்; அவர்களுடைய உதடுகளை வர்ணம் தீட்டிக்கொண்டும்; ''நான் ஒரு பெந்தெகொஸ்தே'' என்றும் சொல்கிறீர்கள். ஓ, நீங்கள் பரிதாபத்துக்குரியவர்களாக இருக்கிறீர்கள். 77பிரசங்கிகளாகிய சிலபேர், டீகன்களாக, நீங்கள் உங்கள் சபைகளில் நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு மனைவிகளுடன் மற்றும் அந்தவிதமான காரியங்களுடன் இருந்துகொண்டு, 'நான் ஒரு பெந்தெகொஸ்தேயினன்“ என்று சொல்கிறீர்கள். உலகத்திலுள்ளவர்கள் அதைக் காட்டிலும் உணர்வு உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆம் ஐயா‚ ஓ, என்னே‚ இங்கிருந்து வெளியே சென்று பந்தய குதிரையின் மேலாக பந்தயம் கட்டி; மற்ற எல்லா காரியங்களையும் செய்து; அதன் பிறகு உங்களை அழைக்கிறீர்கள்...உங்களில் அனேகர் ஜெபக்கூட்டத்திற்கு போவதற்கு முன்பாக வீட்டிலேயே தங்கி தொலைக்காட்சியை கவனித்துக்கொண்டு, நான் ஒரு ''பெந்தெகொஸ்தேயினன்'' என்று சொல்கிறீர்கள். நீங்கள் வெறும் பெந்தெகொஸ்தே பெயரை உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் பெந்தெகொஸ்தே அனுபவத்தை பெற்றுக்கொள்ளவில்லை. உங்களுடைய இருதயத்தில் சபைதான் முதல் காரியமாக இருக்கிறது. சகோதரனே, எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருப்பது தேவனே‚ தேவனே‚ நீங்கள் காணுவதும் மற்றும் அறிந்துகொள்வதும் எல்லாம் தேவனாகவே இருப்பதாக. அந்த பெந்தெகொஸ்தே என்று அழைக்கப்படும் குழு, 'இப்பொழுது அந்த காரியங்கள் புத்திகெட்டது. அதை விசுவாசிக்க வேண்டாம்'', என்று சொல்கிறது. ஆனால் தேவனுடைய தரிசனமானது தேவனுடைய வார்த்தையினால் வருகிறது. அதை எல்லாவற்றையும் தோண்டி வெளியே எடுங்கள். எல்லா அவிசுவாசத்தையும் தோண்டிவெளியே எடுங்கள், அப்பொழுது ஜீவ தண்ணீர்கள் சுதந்திரமாகப்பாயும், அற்புதங்களின் நாட்கள் கடந்து சென்றுவிட்டது என்று இங்கே சொல்கிற இந்த எல்லாமும் நின்று போகும். (சபையானது உண்மையில் திரும்பி வரட்டும்) 78பெந்தெகொஸ்தே என்று சொல்வது ஒரு கூட்ட பாவனை விசுவாசம் தவிர வேறு ஒன்றுமில்லை. நீங்கள் கீழே இறங்கி பாறையை இடிக்கும் வரை கீழே தோண்டுங்கள். ஒரு பெந்தெகொஸ்தே அனுபவம் உங்களுக்கு ஏற்படட்டும், என்ன நடக்கிறது என்று பாருங்கள். சகோதரனே, உங்களுடைய ஜீவியத்தில் யாரும் விரலை வைக்கமுடியாது. ஆம் ஐயா‚ நீங்கள் சதுரமான துப்பாக்கி குழல் போல் நேர்மையாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சரியான நற்பண்புகள் கொண்ட மனிதனாக இருக்கிறீர்கள். நீங்கள் அசலான தேவனுடைய மனிதனாக இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையான தேவனுடையபெண்மணியாக இருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்படும் போது முத்திரையானது காகிதத்தில் இரண்டு பக்கமும் உள்ளது. நீங்கள் வருவதையும் போவதையும் அவர்கள் காணலாம். பரிசுத்தஆவியினால் நீங்கள் முத்தரிக்கப்படும்போது நீங்கள் பார்ப்பதற்கு, நடந்துகொள்வதற்கு, பேசுவதற்கு, கூட்டாளிகளோடு சேர்வதற்கு ஒரு கிறிஸ்தவனைப் போல இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். அவர் செய்வதை நாம் அனுமதிக்க தயாராக இருந்தால் தேவன் அதைச் செய்வதற்கு தயாராக இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 79இப்பொழுது அடுத்து என்ன செய்வது. 'பிரசங்கியாரே நீங்கள் வந்து என்னுடைய தலையின் மேல் கைகளை வைப்பதுதான் அடுத்த காரியமா? அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது உங்களை சிறிது தூண்டிவிடும்படி செய்யலாம். ஆனால் அது அப்படியில்லை. சகோதரனே, செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது சத்தியமாக இருக்கிறது. அதை நான் விசுவாசிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். நான் பழைய இரும்புத் துண்டுகளை வைத்திருக்கிறேன் என்னுடைய அவிசுவாசத்தை இங்கே நான் இப்பொழுதே வெளியே எறிந்து விடுகிறேன். நான் தேவனோடு சீர் பொருத்துகிறேன். நான் அதை விசுவாசிக்கப் போகிறேன்'', உங்களுடைய இரட்சிப்புக்காக விசுவாசியுங்கள். இப்பொழுது உங்களுடைய இரட்சிப்பைக் குறித்து என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது. நீங்கள் தான் அதைச் செய்ய வேண்டும். ஆனால் கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார்; ஆளுகை செய்கிறார். இன்றிரவு அவர் இங்கே இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் என்னசெய்ய வேண்டும். ஆவிக்குள்ளாக பிரவேசியுங்கள். நீங்கள் ஆவிக்குள்ளாக பிரவேசிக்கும்போது அதன்பிறகு தரிசனத்தைக் காண்பீர்கள். ஆனால், 'நல்லது கர்த்தாவே ஆசீர்வதியும்; நான் ஒரு மெத்தொடிஸ்ட் நான் அத்தகைய காரியத்தை வைக்கவேண்டியதில்லை என்று நீங்கள் சொல்லும்வரைக்கும்'', ''நான் பாப்டிஸ்டை'' சார்ந்தவன். ''நான் ஐக்கிய சபையை'' சார்ந்தவன். ''நான் ஒருத்துவக்காரரை'' சார்ந்தவன். முன்னே செல்லுங்கள், நீங்கள் ஒருபோதும் தரிசனத்தைக் காணமாட்டீர்கள். ஆனால் அந்தக் காரியத்தை ஒதுக்கித் தள்ளி, மற்றும் தரிசனத்திற்குள்ளாக பிரவேசியுங்கள். பாருங்கள் இயேசு வருகிறார், மேலும் சபை இங்கே அழிந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு தரிசனத்திற்குள்ளாக பிரவேசியுங்கள். மற்றும் சரியாக தோண்டுங்கள். சகோதரனே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அதன் பிறகு உங்களுக்கு ஏதாவது நடக்கும். எழுப்புதலின் ஆவிக்குள்ளாக நீங்கள் பிரவேசிப்பீர்கள். நீங்கள்அதை விசுவாசிக்கிறீர்களா? 80இப்பொழுது எல்லோரும் ஆவிக்குள்ளாக பிரவேசித்து, பிறகு அதை விசுவாசியுங்கள். இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துகிறதான வேளையிலே நாம் அவரிடத்தில் தரிசனத்தை நமக்குத் தரும்படியாக கேட்போம். பரலோகப் பிதாவே, நாங்கள் அழிந்துபோகிற ஒரு மண்ணில் இருக்கிறோம். நாங்கள் அழிந்துபோகிற ஒரு நாட்டில் இருக்கிறோம், நாங்கள் அழிந்துபோகிற ஒரு உலகத்தில் இருக்கிறோம். மேலும் அழிந்துபோகிற மக்களுக்கு பிரசங்கிக்கிறோம். நான் ஒரு சாதாரண மனிதன் இந்த பிரசங்கிமார்களும் மனிதர்களாக இருக்கிறார்கள். ஆனால் நீரோ அழிவில்லாத தேவனாக இருக்கிறீர்…. இந்த இரவின் பொழுதிலே நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே நான் பேசின இந்தச் செய்தி என் பதட்டமான ஆறுமாதங்கள் சென்றது. மேலும் காயத்துடன் நான் அதை சரியாகச் சொல்லியிருக்கமாட்டேன். கர்த்தாவே, ஆனால் நான் செய்யவில்லை என்றால், நீர் பரிசுத்த ஆவியை அனுப்பி அதை மென்மையாக்குவீராக. எல்லா சுருக்கங்களையும் வெளியே எடுத்துவிடுவீராக. நீர் ஆபிரகாமுக்கு செய்தது போல கர்த்தாவே, அவனுடைய ஏமாற்றங்களையும், தடுமாற்றங்களையும், நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் அவனுடைய தெய்வீக வர்ணனையான ஜீவியம் எழுதப்பட்டபோது, ஏன் தேவனுடைய வாக்குத்தத்தத்தை குறித்து அவன் அவிசுவாசமாய் தடுமாறாமல், வல்லவனாகி தேவனைத் துதித்தான், என்றுள்ளது. 81தேவனாகிய கர்த்தாவே, என்னுடைய எல்லா தடுமாற்றங்களையும், தவறாக குறிப்பிடுதலையும், தவறான உச்சரிப்பையும் மற்றும் அதைப் போன்றவற்றையும் இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை சரிபடுத்தி மற்றும் இந்த செய்தியைப் பற்றிய ஒரு உண்மையான தெய்வீக விவரணையை ஏற்படுத்தி இந்த இரவின் பொழுதிலே ஜீவிக்கிற எங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் இந்த செய்தியை வைப்பீராக. இன்னும் தேவனுடைய ஒரு ஊழியக்காரனாக தொடர்ந்து இருக்கிறவர்கள் மீதும், அங்கே தேவனை நேசிக்கிற மக்கள் மீதும் அக்கறை கொண்ட ஒரு தேவன் இருப்பதற்காகவும்; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அடிக்கப்பட்டவராகிய ஒரு மீட்பர், நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டவராக நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை அவர்மேல் கொண்டு வந்து, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்கிற அதே இரட்சகர்,'நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்று சொன்னார். தேவனே, இன்றிரவு ஒவ்வொரு பழைய துண்டுகளும், ஒவ்வொரு பழைய துருபிடித்த வாளியும் மற்றும் மற்ற காரியங்களும் வழியிலிருந்து நகர்த்தப்படட்டும்; ஜீவ தண்ணீரானது சுதந்திரமாகப் பாயட்டும். தேவனே, எனக்குள்ளாக இருக்கிறதை வெளியேற்றி, என்னை கழுவும்; என்னை சுத்தமாக்கும், கர்த்தாவே, இப்பொழுதே என்னை உம்முடைய ஆவியினால் நிரப்பும். மேலும் இங்குள்ள இந்த மக்களை விசுவாசத்தினால் நிரப்பும்; அங்கே எவரேனும் ஒருவர் விசுவாசிக்காதவர் இருப்பார் என்றால், அவர்கள் பார்த்து விசுவாசிக்கட்டும்; ஏனென்றல் நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கேட்கிறோம்; ஆமென். அதன் பிறகு ஒவ்வொருவரும் ஆவிக்குள்ளாக பிரவேசிப்பார்களாக. நாம் எல்லோரும் ஆவியினால் நிரப்பப்பட்டு இருப்போமாக. இன்றிரவு எல்லோரும் சுகமடைந்தும், இரட்சிக்கப்பட்டும் இருப்போமாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். 82இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எல்லாப் பாவிகளும் அவ்வூற்றில் மூழ்கினார்கள் அவர்களின் எப்பாவத்தீங்கும் நிவர்த்தியாகுமே எப்பாவ தீங்கும் அதினால் நிவர்த்தி ஆகுமே (எல்லோரும் கைகளை உயர்த்துங்கள்) அவர்களின் பாவக்கறைகள்... எல்லா பாவிகளும் அவ்வூற்றில் மூழ்கினார்கள் அவர்களின் பாவக்கறைகள் நீங்கினதே‚ இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். 83எங்கள் பிதாவாகிய தேவனே, இப்பொழுது எங்கள் அவிசுவாசத்தினால் நாங்கள் எல்லோரும் மரித்துக் கொண்டிருக்கிறோம்; தோண்டுவதற்கு இப்பொழுது ஒரு வாஞ்சையை எங்களிடத்தில் சிருஷ்டியும். நாங்கள் தோண்டிக் கொண்டிருக்கிறோம், பிதாவே. என்னை ஆராய்ந்து, சோதித்துப்பாரும். என்னில் ஏதாவது அவிசுவாசம் இருக்குமென்றால்; இப்பொழுதே கர்த்தாவே, அங்கே இருக்குமென்றால், வழியிலிருந்து அதை வெளியே தள்ள எனக்கு உதவி செய்யும். தேவனுடைய வல்லமையானது ஊடாகப் பாய்ந்து செல்லஏதுவாக வாய்க்காலை சுத்தமாக வைத்திருக்க உதவி செய்யும். இப்பொழுது இங்குள்ள கூட்டத்தாருக்கு உதவி செய்யும், கர்த்தாவே. நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். ஒவ்வொருவருடைய வாய்க்கால்களையும் சுத்தமாக வைத்திருக்க நீர்; உதவி செய்யவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். பிரதிநிதித்துவமாய் இங்கே வந்திருக்கிற ஒவ்வொரு சபையையும் சுத்தப்படுத்தும். கர்த்தாவே, ஒரு ஸ்தாபனத்திலிருந்து இன்னொருஸ்தாபனமாக, வந்திருக்கிற எல்லோரையும், எல்லா அவிசுவாசத்தையும் வெளியேற்றி, சுத்தப்படுத்துவீராக. உலகமாகிய அமைப்புகளை அவைகளிலிருந்து எடுத்துப்போட்டு சுத்திகரியும். பரிசுத்த ஆவியின் இனிமையான ஐக்கியம் தேவனுடைய வாய்க்கால்களில் வருவதாக. இங்கே இந்த இரவின்பொழுதின் ஊடாக பாய்ந்து புத்தம் புது வெளிப்பாட்டை கொண்டு வருவதாக. இந்த இரவில் வார்த்தையின் ஜீவியம் ஒவ்வொரு ஆத்துமாவிற்குள்ளும் செல்வதாக. 84மேலும் நீர் இங்கே இருக்கிறீர் என்று நான் அறிவேன் கர்த்தாவே‚ உம்முடைய ஞானதிருஷ்டிகாரனாக உம்முடைய விசுவாசியாய், யாரோ ஒருவருக்கு ஒரு உதாரணமாக என்னை அவர்கள் பார்க்கிறார்கள். பிதாவாகிய தேவனே, இந்த இரவின் பொழுதிலே எனக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவர் என் ஆத்துமாவுக்குள்ளாகவும் என்னுடைய இருதயத்திலும், என்னுடைய ஜீவியத்திலும், என்னுடைய கண்களிலும், என்னுடைய யாவற்றிலும் சுதந்திரமாக செயல்படுவாராக. எனக்கு மாத்திரம் அல்ல ஆனால் இங்குள்ள ஒவ்வொருவருக்கும்; அந்த விசுவாசிக்காத நபரும், விசுவாசிக்கிற நபருக்குள்ளாக ஆவியானவர் கிரியை செய்வதைப் பார்ப்பாராக. மேலும், 'அந்த அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து தண்ணீர் அவர்களுக்குள்ளாக பாயும் என்றால், அது எனக்குள்ளாகவும் கூட பாய்ந்து செல்லும் என்பார்களாக. இதை அருளும் பிதாவே‚ “இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். பிதாவே, இங்கே இந்த விலையேப்பெற்ற மனிதர்களை என் பின்னால் உள்ள என்னுடைய சகோதரர்களை, நீர் ஆசீர்வதிக்க வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன். அவர்களில் சிலர் நான் ஒரு பாவியான பையனாக இருந்தபொழுதே சுவிசேஷத்தைப் பிரங்கித்தார்கள். தேவனே, இந்த இரவின் பொழுதிலே இதை அருளும். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சிலர் நீண்ட காலமாக இந்த ஊழியகளத்திலே இருக்கிறார்கள். அவர்கள் போர் வீரர்களாக காய வடுக்களை பெற்றிருக்கிறார்கள். அநேக நேரங்களில் அமைப்புகள் வழிநடத்தின... ஆனால் அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில், கர்த்தாவே, அவர்கள் தேவனுடைய அசைவைக்காண விரும்புகிறார்கள். பிறகு பிசாசானவன் ஒருகாரியத்தைச் செய்யமுடியாவிட்டால், அவன் வேறொரு காரியத்தைச் செய்வான் என்பதை நாங்கள் காண்கிறோம். அதன்பிறகு அவன் எதையாவது குழப்பிவிடுவான், அல்லது வேறொன்றை புரிந்துகொள்ளும்படியாச் செய்வான். அது அவர்களை சற்று சிறிது பின்வாங்கச் செய்துவிடுகிறது. பிதாவே, இன்றிரவு ஒவ்வொரு இருதயமும் உண்மையான நீரூற்றுக்கு திறக்கப்படட்டும். 85இப்பொழுது, கர்த்தாவே, என்னால் பேச முடியும், நான் வெறுமனே ஒரு மனிதன். நான் எந்தவிதமான அறிக்கையையும் செய்யலாம், அது சரியான ஒரு சத்தமாகவும் இருக்கக்கூடும். ஆனாலும் அது நீராக இருக்க முடியாது. உம்மிடமிருந்து வரும் ஒரு வார்த்தை அதை நிரூபிக்கும், கர்த்தாவே. நீர் சொன்னீர், 'உங்களுக்குள்ளே யாராவது ஒரு தீர்க்கதரிசியாகிலும், அல்லது ஆவிக்குரியவனானாகிலும் இருந்தால், கர்த்தராகிய நான் அவனுடன் பேசுவேன், அவனுக்கு தரிசனங்களைக் காண்பிப்பேன், அவனுடன் சொப்பனத்தில் பேசுவேன். அவன் சொன்னது நிறைவேறும் என்றால் அப்பொழுது அவனுக்குச் செவிகொடுங்கள். ஆனால் அது நிறைவேறவில்லை என்றால், அந்த மனிதனுக்குப் பயப்படவேண்டாம். ஏனென்றால் நான் அவனுடன் இல்லை. ஆனால் அது செய்யப்படும் என்றால் அதற்கு செவிகொடுங்கள்“, என்றீர். இப்பொழுது பிதாவாகிய தேவனே, நீர் கிறிஸ்துவாக இருக்கிறீர் என்று இன்றிரவும், ஒவ்வொரு இரவும் வேத வாக்கியங்களைக் கொண்டு நான் நிரூபித்தேன். நீர் தேவனுடைய குமாரனாக இருக்கிறீர், எங்கள் பாவங்களையும், அவிசுவாசத்தையும் நீக்கும்படியாய் நீர் அடிக்கப்பட்டு, உம்முடைய சொந்த ஜீவியம் எங்களில் பாயும்படியாகச் செய்தீர். இந்த இரவிலே உன்னதங்களில் சிங்காசனத்தின் மேல் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறீர் என்றும்; உணர்வுகளின் பலவீனங்களுக்காக தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியராயும் இருக்கிறீர் என்றும் நான் மக்களுக்குச் சொல்லுகிறேன். இதை அருளும், கர்த்தாவே, அவிசுவாசம் பாய்ந்து வெளியே செல்வதால், அங்கே அநேகரான பெரும்பாடுள்ள ஸ்திரீகளுடைய உதிரப்போக்கு இன்றிரவு நின்றுபோகும். இதை கிறிஸ்துவின் நாமத்தினால் கேட்கிறேன். ஆமென். 86கடந்த ஞாயிற்றுகிழமை பிற்பகலுக்கு பிறகு எங்களிடம் ஜெபஅட்டை இருந்ததாக நான் நினைக்கவில்லை. எனக்கு நன்றாக நினைவு தெரிந்தவரை ஒரு ஜெபவரிசையைக் கூட நாங்கள் அழைக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு இரவும் பரிசுத்தஆவியானவர் மக்களிடம் சரியாகக் கடந்துசென்றார். எத்தனை பேர் அது உண்மையாக இருக்கிறது என்று அறிந்திருக்கிறீர்கள்? பத்து, பதினைந்து, ஒரு இரவிலே அதைப்போன்று ஜெப அட்டைகள் இல்லாமலே உள்ள எல்லா மக்களும் அவர்களுக்கு ஜெப அட்டைகள் இல்லையே என்கிற குற்ற உணர்ச்சியை நான் உணர்கிறேன். மேலும் நான் சிறிது காலதாமதமாகிவிட்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் கடந்த இரவு நான் (நான் மறுபடியும் தாமதமாக வந்தேன்) 'நாளை இரவு நாங்கள் சில ஜெப அட்டைகளை கொடுக்க முயற்சிப்போம்“, என்று நான் சொன்னேன். சில ஜெப அட்டைகளை கொடுக்கும்படியாய் சொல்லி பில்லியை இன்றிரவு நான் அனுப்பினேன். அதனால் அவர்களுக்கு அவன் கொடுத்தான். டீ1 - 50... 1லிருந்து 100 வரைக்கும் கொடுத்ததாக பில்லி என்னிடத்தில் சொன்னான். இவ்விதமாக அது அங்கே தொடங்கியது. அன்றொரு நாளில் நாம் எங்கே தொடங்கினோம்? நாம் அந்த நேரத்தில் 1லிருந்து தொடங்கினோம் இல்லையா? ஓ, ஆமாம். நாம் இரண்டு இரவுகளை கொண்டிருந்தோம். என்னை மன்னியுங்கள். அடுத்த முறை நாம் டீயில் துவங்கினோம், நாம் 1லிருந்து 25 வரைக்கும் துவங்கினோம். அதன் பிறகு நாம் 85லிருந்து 100 வரைக்கும். 87நல்லது, இன்றிரவு நடுவிலிருந்து தொடங்குவோம். இப்பொழுது 25லிருந்து 50 வரைக்கும் தொடங்கலாம். அது எப்படி இருக்கும்? யாரிடம் டீ25 இருக்கிறது? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அங்கே ஒரு ஸ்திரீ இருக்கிறாரா? சரியாக இங்கே முன்னே வாருங்கள், சீமாட்டியே. 25, 26. சரி. சீமாட்டியே இங்கே முன்னே வாருங்கள். அவர்கள் கட்டடம் முழுவதும் இருக்கிறார்கள். இப்பொழுது பையன் இந்த அட்டைகளை கொடுக்க வரும்போது அவன் வந்து உங்களுக்கு முன்பாக அட்டைகளைக் கலக்கி அது எங்கிருக்கிறதோ அதிலிருந்து உங்களுக்கு ஒரு அட்டையை அவன் கொடுப்பான். நான் அவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கிருந்து அழைப்போம். இவைகள் எங்கிருந்து தொடங்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. நாங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தொடங்குகிறோம். இப்பொழுது எங்கே 25, 26 யாரிடம் 26 இருக்கிறது? சரி 26 இங்கே சரியாக உள்ளது. 27, யாரிடம் ஜெப அட்டைஎண் 27 உள்ளது? டீ என்பது பாஸ்டனை போல, 27. சரி,28 யாரிடம் 28 உள்ளது? என்னால் கரத்தைக்காண முடியவில்லை. தயவுசெய்து, 29, 30, 31 யாரிடம் 31 உள்ளது? நான் உங்கள் எண்ணை அழைக்கும் வரை நீங்கள் காத்திருக்க விரும்புகிறேன், எனவே நான் உறுதியாக இருக்க முடியும், ஏனென்றால் யாரோ ஒருவர் செவிடராக அல்லது ஏதோ ஒன்றாக இருக்கலாம். நீங்கள் சொல்கிறீர்கள் சகோதரன் பிரான்ஹாம், (அவர்கள் எனக்கு ஒரு அட்டையில் எழுதுகிறார்கள்) என்னுடைய எண் அழைக்கப்பட்டது. ஆனால் நான் செவிடாக இருந்தேன். மேலும் யாரும் எனக்குச் சொல்லவில்லை, 'நான் வெளியே போய்விட்டதாக நீங்கள் நினைத்ததாக அவர்கள் சொன்னார்கள்'', மேலும் 'நான் முடமாக இருந்தேன் என்னுடைய கரத்தை கூட என்னால் உயர்த்த முடியவில்லை, யாரும் என்னை முன்னே அழைத்துச் செல்லவில்லை'', 'எனக்கு ஜெபம் கூட ஏறெடுக்கப்படவில்லை'', தேனே, பிள்ளையே உனக்காக ஜெபம் செய்ய வேண்டுமா, ஒவ்வொரு இரவும் நீ ஜெபித்தாய். இப்பொழுது இயேசு உனக்காக சரியாக மகத்துவமானவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்து பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நீ அவரை விசுவாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். 88சரி, நான் எங்கே இருந்தேன்? 26, 21, 22? நான் எங்கே இருந்தேன் சகோதரனே? 31, 32, 33, சரி, 33, 34, 34. நான் அதைப் பார்க்கவில்லை. 34, ஜெபஅட்டை எண் 34. நீங்கள் ஜெப அட்டையை பெற்றிருந்தால்... யாராவது சுற்றிலும் பாருங்கள். ஒருவேளை யாராவது செவிடாகவோ, ஊமையாகவோ அல்லது எழுந்திருக்க முடியாமல் இருக்கலாம். 34, நான் அதை தவறவிட விரும்பவில்லை. ஒருவேளை அவர்கள் வெளியே போயிருக்கலாம். 34? 35, டீ35, அது சரியே. அங்கே 34, 34, இன்னும் வரவில்லை. 34, டீ34?35 இருக்கிறார். 36 பயப்படாதீர்கள், நீங்கள் பாவம் செய்திருந்தால் அதை அறிக்கை செய்யுங்கள். நீங்கள் தவறு செய்தீர்கள் என்றால் நீங்கள் இங்கே வரும்போது இரத்தமானது அதை மூடிவிடும். நீங்கள் அறிக்கை செய்யப்படாத பாவத்துடன் இங்கே வரும்போது என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? நல்லது, அப்படியானால் அட்டையை எடுக்க வேண்டாம். முதலில் ஜெபியுங்கள், அதன்பிறகு அட்டையை எடுங்கள். சரி, இப்பொழுது ஜெபவரிசையை தொடங்குவோம். இங்கே எத்தனை பேரை நான் அழைத்தேன் என்று எனக்குத் தெரியாது.1, 2, 3, 4, 5, 6, 7, 8, மூன்று என்பது ஒரு சாட்சியாக இருக்கிறது, அது போதுமானதாக இருக்கும். 89ஜெப அட்டையை வைத்திருக்காதவர்களாகிய உங்களைக் குறித்து என்ன? இப்பொழுது உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நான் பார்க்கட்டும். வியாதியாய் இருக்கிற உங்களை தேவன் சுகப்படுத்தவேண்டும் என்று விரும்புகிறவர் கட்டிடத்தில் எங்கிருந்தாலும், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது குறித்து அக்கறை இல்லை. என்ன சொல்கிறீர்கள்? 36, 37, 38, 39, 40. அதிலிருந்து இரண்டு வெளியே வருகிறது. 40 முதல் 50. மூன்று இன்னும் ஒன்று. (ஒருவேளை நான் தவறு செய்யலாம், ஒருவேளை நான் பிரசங்கித்து ஒரு பீட அழைப்பை கொடுக்கலாம்) சரியே. இப்பொழுது ஜெப வரிசையைத் தொடங்கலாம். ஒவ்வொருவரும் நீங்கள் உண்மையிலேயே பயபக்தியாய் இருப்பீர்கள் என்றால்; ஒவ்வொருவரும் நீங்கள் இப்பொழுது முடிந்தவரை பயபக்தியுடன் இருங்கள். இப்பொழுது ஒரு விநாடி நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். (''நம்பிடுவாய்'', உங்களால் முடிந்தால் சகோதரனே) இன்றிரவு ஒரு அருமையான கடினமான செய்தியாக இருந்தது. ஆவியானவர் வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். 90இப்பொழுது அவர்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் நான் இதைக் கேட்கவிரும்புகிறேன். தான் இங்கே இருப்பதை கிறிஸ்து நிரூபிக்க முடிந்தால், எத்தனை பேர் நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் அவரை விசுவாசிப்பீர்கள்? ஒவ்வொரு தடையை வெளியே தூக்கி எறிவீர்களா? அங்கே இதற்கு முன்பாக எனது கூட்டங்கள் ஒன்றில் இல்லாத யாராவது இருக்கிறீர்களா? உங்கள் கையை உயர்த்துங்கள்- என்னுடைய கூட்டங்கள் ஒன்றிலும் இல்லாதவர்கள் (சகோதரன் பிரான்ஹாம் அவருக்கு பின்னால் உள்ள குழுவுடன் பேசுகிறார்) எனக்குப் பின்பாக இந்த குழுவினரிடம் நான் கேட்கிறேன், என்னுடைய சகோதரரே எனக்கு பின்னால் ஜெபித்துக் கொண்டிருக்கும் உண்மையிலேயே அசலான தேவ மனிதர்கள் குழுவை நான் பெறுவேன் என்றால், ஏதோ காரியம் நடந்தாக வேண்டுமே. இப்பொழுது விசுவாசமாக இருங்கள். நல்லது இன்றிரவு காட்சி தொடங்கும் என்று யூகிக்கிறேன்... மக்களாகிய உங்களுக்கு முதலில் நான் சொல்ல விரும்புவது, ஒவ்வொரு இரவும் அவ்வளவு அதிகமாக இருந்தது... கட்டிடம் முழுவதும் குறைந்த பட்சம் எட்டு அல்லது பத்து பதினைந்து திட்டவட்டமான வியாதிபட்டவர்கள் இல்லாமல் எங்களுக்கு ஒரு இரவாவது இருந்தது என்று நான் நம்பவில்லை. அது சரியா? இங்கு வந்த அனைவருமே பார்த்தீர்களா? 91இப்பொழுது, புதிதாக வந்திருக்கிற உங்களுக்கு, நான் ஒரு தெய்வீக சுகமளிப்பவன் என்று என்னை உரிமை கோரவில்லை. அப்பேற்பட்ட ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிறார் என்று நான் நம்புவதில்லை. இயேசு கிறிஸ்துவே சுகமளிப்பவர் என்று நான் விசுவாசிக்கிறேன். உங்களுக்காக அவரால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் அவர் செய்து முடித்துவிட்டார். ஏனென்றால் அவர் அங்கே அடிக்கப்பட்ட கன்மலையானபோது... அவர் தான் அந்த கன்மலையாக இருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர்தான் அக்கினிஸ்தம்பமாக இருந்தார். இருக்கிறவராக இருக்கிறேன். நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால் வழியிலிருந்து தடைகளை எல்லாம் எடுத்துவிட வேண்டும். அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? நல்லது அதன்பிறகு அவர் ஏற்கனவே இங்குள்ள ஒவ்வொரு வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்திவிட்டார். ஒவ்வொரு நபரும் ஏற்கனவே சுகமாகிவிட்டீர்கள். ஒவ்வொரு பாவியும் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள். ஆனால் சகோதரனே, நீங்கள் அதை சரியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்விதமே உங்களுடைய சுகமளித்தலுக்காகவும். 92இப்பொழுது இங்கே பாருங்கள், நம்மிடத்தில் ஒரு பெண் இருந்தாள். மற்றொரு இரவிலே அவள் சாட்சி கொடுத்துக்கொண்டிருந்தாள். சில நாட்களுக்கு முன்பாக அவளை அவர்கள் கூடாரத்திற்கு கொண்டுவந்தார்கள். அந்தப் பெண் வழிவிலகி இவ்விதமாக இருந்தாள். அவள் நடக்கக் கூடமுடியாமல் கட்டியுடன் இருந்தாள். சில மனிதர்கள் அவளைத் தூக்கிக்கொண்டு வந்து படிகளிலே உட்கார வைத்தார்கள். நான் அந்த இரவில் வியாதிபட்டவர்களுக்காக ஜெபிக்கவில்லை. அவள் என்னுடைய கால்சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டு நான் விசுவாசிக்கிறேன் அது இப்படி வெளியே செல்லுகிறது என்றாள். அது 'கர்த்தர் உரைக்கிறதாவது...'' என்கிற விதமாக மாறியது. அந்த பெண் மற்றொரு இரவிலே அவள், சாதாரண பெண்ணாக, சரியாகி இருந்தாள். ஓ, என்னே‚ நான் அந்த காரியங்களை எல்லாம் விளம்பரப்படுத்துவதில்லை. அப்படியே சென்றுகொண்டிருந்தேன். ஏனென்றால் அநேக நேரங்களில்... இயேசு சொன்னார்... இன்றைக்குள்ள காரியம் என்னவென்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நாம் தெய்வீக சுகமளித்தலை மிக அதிகமான ஒரு கவர்ச்சியாக ஆக்குகிறோம். அது ஒரு கவர்ச்சி இல்லை. காரணம் அதுதான் என்று உங்களுக்கு முன்னமே நான் சொன்னேன். கடைசி நாளில் சிக்காக்கோவில் அவர்கள் இதைப் பார்க்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். என் முழு இருதயத்துடன் நான் அதை விசுவாசிக்கிறேன். மற்ற தேசங்களும் கூட அதைப் பார்க்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் விட்டுவிடுகிறேன். அதனால் நான் விசுவாசிக்கிறேன்... அவர் என்ன சொன்னார் என்பதை நினைவில்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு சொன்னதையே அவர் என்னிடம் கூறினார். 93கர்த்தருடைய பெயரில் நான் உங்களிடம் வேறெதுவும் சொல்லவில்லை, ஆனால் அது சொல்லப்பட்டபடியே நடந்தது. நான் உங்களிடம் கேட்பது; இப்பொழுது பார்த்து அதன்பிறகு, நீங்கள் என்னை விசுவாசியுங்கள். கிறிஸ்து உங்களை ஏற்கனவே சுகப்படுத்திவிட்டார். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அவர் எனக்கு கொடுத்த இந்த சூட்டை அணிந்துகொண்டு இங்கே அவர் நின்றுகொண்டிருப்பார் என்றால், நீங்கள் அவரிடத்தில் வருவீர்கள் என்றால், 'கர்த்தாவே என்னை சுகப்படுத்துவீரா?“ என்று கேட்பீர்களானால், 'வழியிலிருக்கிற மரக்கட்டைகளை எடுத்து தூக்கி எறியுங்கள். நான் உங்களிடம் என் வழியை புகுத்த முயற்சிக்கிறேன். ஆனால் உங்களுடைய அவிசுவாசமே உங்களைத் தடுக்கிறது'', என்று அவர் சொல்லுவார். 94இங்கே புதிதாய் வந்திருக்கிற உங்களுக்கு இங்கே ஒரு வேதகாட்சி இருக்கிறது. இயேசு கிறிஸ்து யோவான் நான்காம் அதிகாரத்தில் கிணற்றண்டையில் ஒரு சமாரிய ஸ்திரீ என்று அழைக்கப்பட்ட ஒரு ஸ்திரீயினிடம் வந்தார், நாம் அனைவரும் அந்த கதையை அறிந்திருக்கிறோம். மேசியா என்று தன்னை எப்படி அவளுக்கு வெளிப்படுத்தினார்? அவர் என்ன செய்தார்? ''தாகத்துக்குத் தா“ என்று அவளிடம் கேட்டார். அவர் அவளுடைய ஆவியுடன் தொடர்பு கொண்டார். 'தண்ணீரா..., மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே; கிணறும் ஆழமாயிருக்கிறதே'', என்று அவள் சொன்னாள், (அவர்கள் அதன்பிறகு மதத்தைக்குறித்து பேசினார்கள். அவள் மதத்தை குறித்துபேச விரும்பினாள்) 'நாங்கள் இந்த மலையில் தொழுதுகொள்கிறோம். நீங்கள் எருசலேமில் தொழுதுகொள்ள வேண்டும் என்கிறீர்கள். ஏனென்றால்... நாம் ஒன்றாக இணைந்திருக்கக்கூடாது ஏனென்றால் நீர் ஒரு யூதன். நான் ஒரு சமாரியன், என்று சொன்னாள். 'ஸ்திரீயே நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா'' என்று அவர் சொன்னார். ''எனக்கு எந்த புருஷனும் இல்லை“ என்று அவள் சொன்னாள். 'ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய்'', என்று சொன்னார். 95அந்த நாளைக் குறித்து இப்பொழுது இந்த ஊழியமானது என்ன சொல்லியிருக்கும்? இங்கே உள்ள ஊழியக்காரர்களை குறித்து நான் குறிப்பிடவில்லை. சகோதரர்களாகிய அவர்களுடைய இருதயம் என்னுடைய இருதயத்துடன் ஒத்திருக்கிறது. அதில் ஒன்றும் இல்லை என்று இதை பரிகசிக்கும் ஊழியங்களைக்குறித்து குறிப்பிடுகிறேன். என்னை ஆதரிக்கிற ஸ்தாபனங்களைக்குறித்து நான் சொல்லவில்லை. அவைகளுள் தேவனுடைய அமைப்பை அவை பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த ஸ்தாபனங்கள் எல்லாம் இந்த காரியத்தை மறுதலிப்பதை குறித்துதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அதை மறுதலிக்கின்றன. அதில் எதுவும் இல்லை என்று ஒருவர் கூறுகிறார். அது பிசாசுடைய காரியமாக இருக்கிறது என்கிறார். அங்கே அவர்கள் என்ன செய்தார்களோ அதேவிதமாகத்தான் திரும்பவும் இருக்கிறது. ஆனால் அந்த சிறிய வேசியான பெண், 'ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவோம், அவ்விதம் கற்பிக்கப்பட்டுள்ளோம். அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்“, என்று சொன்னாள். இப்பொழுது அது உண்மை என்று எத்தனைப் பேர் அறிவீர்கள்? சரி. அவர், ''உன்னுடனே பேசுகிற நானே அவர்'', என்றார். 'அப்பொழுது அந்த ஸ்திரீ, ஊருக்குள்ளே ஓடி ஜனங்களை நோக்கி, நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள் அவர் சரியாக மேசியா அல்லவா?“, என்றாள். முழு பட்டணமும் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தது என்று வேதாகமம் சொல்கிறது. (அவர் மறுபடியும் ஒருபோதும் அதை திரும்பச் செய்யவில்லை. அதை அவர் ஒருமுறைதான் செய்தார்) ஏனென்றால் அந்த ஸ்திரீ, அந்த வேசியான ஸ்திரீ அவள் தவறான மனிதனுடன் ஜீவித்துக்கொண்டிருந்தாள் என்று இயேசு சொன்னதை அவர்களிடம் கூறினாள். அவர் மேசியாவாக இருந்தார் என்று அந்த முழு பட்டணமும் அதை விசுவாசித்தது. ஏனெனில் அதுவே மேசியாவின் அடையாளமாக இருந்தது. 96இப்பொழுது வேத சாஸ்திரம் தான் மேசியாவின் அடையாளம் என்று நீங்கள் நினைத்தால் அது நீங்கள் நினைப்பதை விட மிகப் பெரிய அடையாளமாக இருக்கிறது. ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்“, என்று இயேசு சொன்னார். ஆனால் நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதுதான் மிகப்பெரிய வேலை என்று சொல்கிறீர்கள். அதுசரி. அதன் பிறகு நீங்கள் இங்கே வாருங்கள், இந்த குறைவான வேலைகளைச் செய்யுங்கள். இங்கே பிரசங்க மேடை இருக்கிறது. நீங்களாகவே அதைச் செய்யுங்கள். இங்கே முன்னே வந்து இந்த ஜெப வரிசையின் ஊடாகச் செல்லுங்கள். உங்களிடம் உள்ள கூட்டத்தில் பரிசுத்தாவியானவர் இயங்கும்படி விடுங்கள். நீங்கள் செய்யும் கிரியைகளை நான் காணட்டும். அதன்பிறகு சென்று சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். அப்பொழுது நீங்கள் பெரிய காரியங்களைச் செய்வீர்கள். இயேசுவானவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பிரசங்கிக்க முடியவில்லை. ஏனென்றால் அது வரைக்கும் அதுவரவில்லை. அதுவே ஒரு மகத்தான கிரியையாக இருக்கிறது. முழு நிச்சயமாக அது இருக்கிறது. சபைதான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பிரசங்கிக்க வேண்டும். அது வந்து கொண்டிருக்கிறது என்று இயேசு சொன்னார். ஆனால் சபை அதைப் பெற்றுக்கொண்டு, ''நாங்கள் அதைப் பெற்றுக்கொண்டோம் என்கிறது. அது உங்களுக்காக'', ஆகவே அது ஒரு மிகப் பெரியதாக இருந்தது. அது உண்மை. 97''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற காரியங்களை அவனும் செய்வான்'', அவர் செய்த அதே கிரியைகள். இப்பொழுது இங்கே உள்ள ஒரு ஸ்திரீ அவள் எனக்குப் புதியவராக இருக்கிறாள். நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம். அதை அதனால் கூட்டத்தாரால் புரிந்துகொள்ள முடியும். இப்பொழுது இந்த சீமாட்டியை கவனியுங்கள். எனக்கு உன்னைத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியராக இருக்கிறோம். இதுதான் நம்முடைய முதல்முறை சந்திப்பு. அது அப்படி இருக்கும் என்றால் உன்னுடைய கரத்தை உயர்த்து. இப்பொழுது ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் மறுபடியும் சந்திக்கிறார்கள். எனக்கு இந்த ஸ்திரீயை குறித்தும், அல்லது எதற்காக அவள் வந்து இருக்கிறாள் என்பதும் அவளைக் குறித்து ஒன்றும் தெரியாது. அவள் முழுவதும் ஒரு புதியவளாக இருக்கிறாள். இப்பொழுது நான் இங்கே நின்றுகொண்டு மேலும் நம்மிடையே அதிகமான மனோத்தத்துவ ஆட்கள் சொல்லுகிற பிரகாரம் சொல்லுவேனானால். 'யாரோ ஒருவர் ஒரு முதுகு வலியுடன் இருக்கிறார் என்று கர்த்தர் என்னிடத்தில் சொல்லுகிறார்'', என்பேன். நிச்சயமாக அங்கே ஏராளமானோர் முதுகுவலியுடன் இருக்கிறார்கள். நரம்புத்தளர்ச்சியை உடையவர்களாக, என்பேன். நிச்சயமாக, அவர்கள் பெரிய கூட்டமாக இருக்கிறார்கள். அது யார்? அது எங்கே இருக்கிறது? அது எங்கிருந்து வந்திருக்கிறது? எப்படி அது ஏற்பட்டது? அதற்கு என்ன நடக்கப் போகிறது? என்பதுவே அது அடுத்த காரியமாக இருக்கிறது. அதுதான் வித்தியாசம். 98நான் இந்த ஸ்திரீயை இங்கே முன்பாகக் கொண்டு வந்து, 'கர்த்தர் என்னை வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி என்னை அனுப்பினார். இப்பொழுது உன் மேலாக என் கரத்தை வைக்கிறேன். எண்ணெயால் உன்னை அபிஷேகிக்கிறேன். தேவனுக்கு மகிமை. நீ சுகமடையப் போகிறாய்'', என்று சொல்வேன் என்றால் அதை விசுவாசிப்பதற்கு அவளுக்கு உரிமை இருக்கிறது. அது உண்மையாக இருக்கிறது. ஆனால், அவளிடத்தில் நான் உண்மையை சொல்கிறேனா அல்லது இல்லையா என்று என்னுடைய அனுபவத்தை அவள் சந்தேகிக்க முடியும் என்றால் அவள் அதை சந்தேகிக்கக்கூடும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து என்னுடைய உதடுகளின் மூலமாக பேசி மற்றும் ஏதோ ஒன்றை அவள் கொண்டிருக்கிறாள் என்று சொல்லும் போது, அது சரியாக அங்கேயே அந்த சந்தேகத்தை வெளியே எடுத்துவிடுகிறது. ஏனென்றால் அவளை எனக்குத் தெரியாது என்பதை அவள் அறிந்திருக்கிறாள். மேலும் ஒருவரை ஒருவர் எங்களுக்குத் தெரியாது என்று நாங்கள் இருவரும் எங்களுடைய கரத்தை கர்த்தருக்கு முன்பாக உயர்த்துவோம். அங்குதான் சுவிசேஷம் இருக்கிறது. இப்பொழுது அங்கேதான் சுவிசேஷத்தை இயேசு கொண்டிருந்தார்; இல்லையா? அது அப்படி இல்லை என்றால்... 'நல்லது சகோதரன் பிரான்ஹாமே நீர் சொல்லுகிறீர்; உம்மை மேசியா என்று சொல்லுகிறீரா?“, என்று நீங்கள் கேட்பீர்களானால், இப்பொழுது நீங்கள் அப்படி நினைப்பீர்கள் என்றால், அது நீங்கள் ஆவிக்குரிய பகுத்தறிதலைக் கொண்டிருக்கவில்லை என்பதையே காண்பிக்கிறது. நான் எப்படி ஒரு மேசியாவாக இருக்கமுடியும், நான் வில்லியம் பிரன்ஹாமாக இருக்கிறேன். கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவி. இயேசு கிறிஸ்துதான் மேசியாவாக இருக்கிறார். ஆனால் அவருடைய ஆவி நம்மிடத்தில் பரிசுத்த ஆவியாக ஜீவனோடு இருக்கிறது. 99ஒரு சில மக்களாகிய நீங்கள் அதை விசுவாசிக்கமாட்டீர்கள். இந்த காரியம் மக்களை அழவும், கூச்சலிடவும் மேலும்அந்நிய பாஷைகளைப் பேசவும் செய்கிறது. அந்த அதே ஆவிதான்... உங்கள் மத்தியிலே ஒருவர் வந்து, மேலும் நீங்கள் அந்நிய பாஷைகளை பேசுவீர்கள் என்றால், அவர்கள் உங்களை பைத்தியம் பிடித்தவர்கள் என்று சொல்லுவார்கள், என்று பவுல் கூறினான். ஆனால் இப்பொழுது ஒருவர் தீர்க்கதரிசியாக இருந்து இருதயத்திலுள்ள இரகசியங்களை வெளிப்படுத்தினால் அவர்கள் கீழே விழுந்துபணிந்து, தேவன் உங்களுடன் இருக்கிறார் என்று சொல்லுவார்கள். சகோதரரே அது ஒரு பெந்தெகொஸ்தே வரமாக இருக்கிறது. அது ஏதோ சபையில் சேர்க்கப்ட்ட ஒன்றாக இருக்கிறது. பாப்டிஸ்டுகள், மெத்தோடிஸ்டுகளாகிய நீங்கள் சகோதரரே, எவ்வாறு அந்நிய பாஷைகள் பேசுவதின் மேலாக சண்டையிட்டீர்கள்‚ அவர்கள் என்னிடமும் அதே காரியத்தைத்தான் இதன் மேலாகச் செய்கிறார்கள், அதனால்... ஆனால் சத்தியத்திற்காக நில்லுங்கள். தேவன்... ஆசீர்வதிப்பார், அப்படியே போய் கொண்டிருக்கட்டும். 100உங்களை எனக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் இங்கே எதற்காக இருக்கிறீர்கள் என்பதை தேவன் எனக்குச் சொல்வார் என்றால்; ஏதோ காரியத்தை நீங்கள் செய்தீர்கள் என்றும், நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றை அல்லது ஏதோ ஒன்றை, உங்கள் ஜீவியத்தில் உள்ள பாவங்கள் அல்லது சில ஆசீர்வாதங்கள்; உங்கள் ஜீவியத்தில் இது உண்மையா இல்லையா என்று உங்களுக்கு தெரிந்த மற்றொரு காரியம் அதுசரியா‚ இல்லையா‚ என்பது உங்களுக்குத் தெரியும் அது அப்படியாக இருக்கும் என்று நீங்கள் அதை முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்களானால்; அது ஒரு விதமான ஆவிக்குரிய வல்லமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் நம்மை ஒருவருக்கொருவர் தெரியாது. அது மேசியாவாக இருக்கிறது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் இல்லை; ஆனால் அவர் வாக்களித்தது போல அவருடைய ஆவி என் மூலமாகப் பேசிக் கொண்டிருக்கிறது‚ இல்லையா? சபை முழுவதும் ஒருமனப்பட்டு அதை விசுவாசிப்பீர்களா? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். உங்களுக்கு நன்றி. இப்பொழுது நீங்கள் விசுவாசியுங்கள். 101இந்த ஸ்திரீ என்னிடத்திலிருந்து பத்து அல்லது பன்னிரன்டு அடிதூரத்தில் நின்று கொண்டிருக்கிறாள். நான் வெறுமனே அவளை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்து அவளிடம் பேசுகிறேன். ஏனென்றால் பிரசங்கம் செய்த பிறகு, அதைப்போன்று தீர்க்கதரிசி அங்கே செய்ததைப்போல... நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல, ஆனால் தீர்க்கதரிசி அங்கே செய்ததைப் போல... யோராமை அவர் கத்திக் கொண்டிருந்தார். அதனால் இசைத்த பின்பு அவர் பேச வேண்டியதாயிருந்தது. மேலும்... இயேசு ஸ்திரீயிடம் பேசினார். ஆனால் அவர் அபிஷேகத்தைப் பெற்றுகொள்ளும் வரை அவர் அவளுடைய ஆவியைத் தொடர்புகொள்ள வேண்டியதாக இருந்தது. அதற்காகத்தான் நானும் இப்பொழுது காத்துக்கொண்டிருக்கிறேன், வில்லியம் பிரன்ஹாமுடைய மரக்கட்டையை வழியிலிருந்து எடுக்கும்படியாய் காத்துக்கொண்டிருக்கிறேன், என்னுடைய புத்திகூர்மைகள், என்னுடைய ஆவி என்னுடைய புரிந்துகொள்ளுதல், எதுவாக இருந்தாலும் நான் எல்லாவற்றையும் வழியை விட்டுவெளியேற்றுகிறேன். அதனால் அவருடைய மக்களுக்கு முன்பாக தன்னை மகிமைபடுத்துவதற்கு அவர் என்னுடைய கண்களை உபயோகப்படுத்த முடியும், என்னுடைய உதடுகளை உபயோகப்படுத்த முடியும். இந்த விதமாக சமர்பிக்க... இங்கே அந்த காரியத்தை எல்லாம் பேச முடியாது. அது ஒரு ஊமையின் நிலையாகும். அதை பேசச் செய்வதற்கு இங்கே ஏதாவது காரியம் ஜீவனோடு அதில் இருந்தாக வேண்டும். அது தனக்குத்தானே பேசமுடியாது. உங்களைப் பற்றியும் என்னால் எதுவும் சொல்லமுடியாது. அது நித்திய ஜீவனைபெற்றுக்கொண்ட ஒரு காரியத்தால் ஏற்படுகிறது, உங்களைப் பற்றி அறிந்த ஒன்று அதைக் குறித்துப்பேசுகிறது. அது சரியே‚ 102நீங்கள் அதை விசுவாசிக்கவேண்டும். ஒரு காரியத்தில் நீங்கள் தொந்தரவில் இருக்கிறீர்கள். (மக்கள் இன்னும் என்னுடைய குரலை கேட்க முடியுமென்றால்)... என்னால் அந்த ஸ்திரீயைப் பார்க்க முடிகிறது. அவள் நரம்புத் தளர்ச்சியுற்று பதட்டத்துடன் இருக்கிறாள். அவள் ஒரு பதட்டமான நிலையில் அவதிப்படுகிறாள். இப்பொழுது அது சரியாக இருக்கிறது. மிகச்சரியாக இருக்கிறது. அது ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஒரு காரியத்தைச் சொல்வதுண்டு‚ நான் எப்பொழுதும் சொல்லும் விதமாக, நான், ''யூகிக்கிறேன்'' என்று மக்கள் எப்பொழுதும் சொல்கிறார்கள். (நான் அதை உணருகிறேன்) நான் அதை யூகிக்கவில்லை. அதை யூகிக்க எனக்கு வழியே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது அது உண்மையாக இருந்ததா? என்ன சொல்லப்பட்டதோ அது உண்மையாக இருந்தால் இப்பொழுது எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுக்கு நன்றி. இப்பொழுது நீங்கள் பிலிப்பைப் போல... அவன் எங்கே இருந்தான் என்றும்,அவனைக் குறித்து ஏதோ காரியத்தை அவனிடம்அவர் கூறியபோது, 'ரபி நீர் தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் ராஜா'' என்று அவன் கூறினான். 'நீ அதை விசுவாசிப்பதினால், பெரிய காரியங்களை காண்பாய்'', என்று சொன்னார். அது சரியா? 103அது அதே வாக்குத்தத்தமாக இருக்கிறது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது... நான் சொன்னது தவறு, ஆனால் அது எதுவாக இருந்தாலும், உனக்கு உள்ளது சரியான வியாதியாகும். ஆமாம், நான் இதை இப்பொழுது பார்க்கிறேன். ஆமாம் பதட்டம், சிறிது நேரம் அப்படித்தான் இருந்தது. மாதவிடாய் முடிவடையும் காலத்தில் இது தொடங்கினது. அதுதவிர உனக்கு பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனை ஒன்று உன்னை தொந்தரவுபடுத்துகிறது. அது உண்மை... அதன்பிறகு வேறொரு காரியம், உன்னுடைய இருதயத்தில் யாரோ ஒருவருக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறாய். கண்களில் பிரச்சனையுள்ள தாயார். அது சரியே. அவர் இங்கே இல்லை. அதுசரியாக இருக்கிறது. இப்பொழுது நீ விசுவாசிக்கிறாயா? பரிசுத்தஆவி உன் மேலாக இருக்கும்நேரத்திலேயே உன்னுடைய கரத்தில் பிடித்திருக்கிறதான கைக்குட்டையை அவளிடம் அனுப்பு, எல்லாகாரியமும் சரியாகிவிடும். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. 104இப்பொழுது உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் நிச்சயம் விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும். தேவனை நம்புங்கள். நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவைப்பற்றி... உறுதி கொள்கிறீர்களா? இப்பொழுது தயவு செய்து சுற்றிலும் நகர வேண்டாம். தாமதமாகிவிட்டது என்று எனக்குத் தெரியும். நீங்கள் உணரவில்லையா. கர்த்தருடைய தூதனானவர் என்ன சொன்னார்? 'உன்னை மக்கள் விசுவாசிக்கச் செய்ய முடியுமானால்...“ அதன்பிறகு நீ... நான் சொல்கிறேன், 'அப்படியே உட்கார்” மற்றும் அதை நீங்கள் அப்படிச்செய்யவில்லையென்றால், அது என்ன செய்யும்? அது மீண்டும் என் முகத்தில் வீசியெறிகிறது. ''பார் மக்கள் உன்னை விசுவாசிக்கவில்லை'' என்று பிசாசானவன் சொல்லுகிறான். ஒரு சில பேர் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், ஒரு சில பேர் விசுவாசிக்கவில்லை, ஆனால் மற்றவர்களை காயப்படுத்துகிறீர்கள்.இயேசு ஒருமுறை எல்லோரையும் வீட்டைவிட்டு வெளியேறும்படி சொன்னார். பாருங்கள், நான் சுவிசேஷகனாகவும், ஒரு ஞான திருஷ்டிக்காரனாகவும் இரண்டையும் உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன். நீங்கள் அதைச் செய்யமுடியாது. ஒரு ஞானதிருஷ்டிகனாக இருந்து நான் காடுகளுக்குச் சென்று மேலும் உள்ளே வந்து என்னுடைய செய்தியுடன் அடித்து வெளியேசெல்வேன்; அல்லது அதை ஒதுக்கிவைத்துவிட்டு, தேவன் அதை என்னிடத்திலிருந்து தூர எடுத்தபின் நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி செய்து, ஒரு சுவிசேஷகனாக இருக்கும்படிவிடுவார். 105எப்படி இருக்கிறீர்கள் சகோதரியே? எனக்கு உங்களைத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியராக இருக்கிறோம். அது சரியா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம். ஆகவே மக்கள் நாம் அந்நியர்களாக இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும்படி உன் கரத்தை உயர்த்துவாயா? நாம் அந்நியர்கள். நீ இங்கே எதற்காக நின்று கொண்டிருக்கிறாய் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்துவார் என்றால் நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிப்பாயா? இந்த பெண்மணி ஒரு நல்ல ஆவியை உடையவளாகத் தோன்றுகிறது. ஒரு விசுவாசிக்கிற ஆவி. ஆமாம் ஐயா, அதுஇங்கே வருகிறது. அவள் ஒரு இருதய கோளாரினால் அவதியுறுகிறாள். அவளுக்கு ஒரு இருதயப் பிரச்சனை இருக்கிறது. உனக்கு முடக்குவாதமும்கூட இருக்கிறது. நீ ஒரு நரம்புதளர்ச்சியும் உடையவளாக இருக்கிறாய். உன்னுடைய இருதயத்தில் யாரோ ஒருவருக்காக ஜெபித்துக்கொண்டு இருக்கிறாய். அது யார் என்றும் அல்லது அவர்களைப் பற்றி ஏதோ காரியத்தை தேவன் என்னிடத்தில் சொல்வார் என்றால், நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிப்பாயா? அதுஉன்னுடைய குழந்தை, ஒரு மகள் அவள் இங்கு இல்லை. அவள் இங்கிருந்து வெகு தொலைவில் ஜீவிக்கிறாள், அவள் கலிபோர்னியாவில் இருக்கிறாள். அவள் ஒரு நரம்பு தளர்ச்சி முறிவுடன் அவதியுறுகிறாள். அது கர்த்தர் உரைக்கிறதாவது‚ இப்பொழுது உன் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறாயா? நீ கேட்டுக் கொண்டதை விசுவாசித்து சென்று அதைப் பெற்றுக்கொள். அது உனக்கு உண்டாகும். 106ஐயா வாருங்கள், உங்களை எனக்குத் தெரியாது. ஒருமுறை நம்முடைய கர்த்தர்... கடைசியாக இரண்டு அல்லது மூன்றுபேர் கடந்து சென்றது பெண்களாக இருந்தார்கள். இது ஒரு மனிதன் இயேசு ஒரு ஸ்திரீயை சந்தித்தபோது, அந்த ஸ்திரீக்கு இயேசு என்ன செய்தார் என்று நான் சொன்னேன், இப்பொழுது நான் இயேசு ஒரு மனிதனை எங்கே சந்தித்தார் என்று வேதாகமத்தில் தேடி எடுக்கப்போகிறேன், அதனால் ஸ்திரீக்கும் மனிதனுக்கும் அவர்களிடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பார்க்க முடியும். அவர் பேதுருவை சந்தித்தபோது, அவர் சீமோன் பேதுருவை சந்தித்தார். அவனுடைய பெயர் அப்போது சீமோனாக இருந்தது. அவன் யார் என்று அவனிடத்தில் கூறினார். அவர் அவனைப் பற்றியும் அவனிடம் கூறினார். இப்பொழுது உங்களையும் மற்றும் உங்களைக் குறித்தும் அதைப்போன்று, அதே விதமாக தேவன் என்னிடத்தில் சொல்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்களை விசுவாசிக்க வைக்குமா? ஒரு கணம் பொறுங்கள் ஏதோ காரியம் நடக்கிறது. அங்கே ஒரு சீமாட்டி சரியாக இடது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ரணப்பட்ட தொப்புள் உள்ள சகோதரியே கர்த்தர் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்துடன் அதை விசுவாசிப்பீர்கள் என்றால் நீங்கள் எதைக் கேட்டுக்கொள்வீர்களோ அதைப் பெற்றுக்கொள்வீர்கள். 107இரண்டு மனிதர்கள் அங்கே நின்று கொண்டு இருக்கிறார்கள். யாரோ ஒருவர் பிரதான ஆசாரியரைத் தொட்டுக்கொண்டிருக்கிறார், அங்கே உங்கள் மூக்கின் மேல் விரலைவைத்துக் கொண்டிருக்கிறவர், அந்த மனிதனுக்கு இருதயவீக்கமும் தோல் புற்றுநோயும் இருக்கிறது. இயேசு உன்னை சுகமாக்குகிறார் சகோதரனே. உன்னுடைய விசுவாசம் உன்னை முழுவதும் சுகமாக்கினது. அவர் எதைத் தொட்டார்? இந்த மனிதனை காட்டிலும் அவர் வயதானவராக இருக்கிறார். அவர்களிடையே உள்ள வித்தியாசத்தை என்னால் பார்க்க முடிகிறது. இப்பொழுது உன்னுடைய தொல்லை என்னவென்று தேவன் என்னிடத்தில் சொல்வார் என்றால் நான் அவருடைய ஊழியக்காரனாக இருக்கிறேன் என்று நீர் விசுவாசிப்பீரா? ஒரு காரியம், உன்னுடைய பக்கவாட்டில் பிரச்சனை இருக்கிறது. ஒரு வகையான பாதிப்பாக இருக்கிறது. குடல் இறக்கம், பக்கவாட்டில் உள்ளது. அது சரி. இன்னொரு காரியம்; உனக்கு நரம்புத் தளர்ச்சியும் இருக்கிறது. அது உனக்கு வயிற்றுப்பிரச்சனையைக் கொடுக்கிறது. சரி, இப்பொழுது எல்லா மனிதர்களும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீர் பார்ப்பதற்கு நல்ல மனிதனாக இருக்கிறீர். 108இப்பொழுது ஒரு சிறிது நேரத்தை இந்த மனிதனுடன் எடுத்துக்கொள்வோம். தயவு செய்து பயபக்தியுடன் அமைதியாக இருங்கள். அவருடைய இருதயத்தில் ஏதோ காரியம் இருக்கிறது. நீங்கள் தேவனிடத்தில் வேறு ஏதோ காரியத்தை சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அது சரி. ஏனென்றால் அந்த ஏங்குதலை என்னால் சொல்ல முடியும். ஓ, அது ஒரு ஸ்திரீயைப் பற்றியது. அது உன்னுடைய மனைவி. அவளுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் அதிலிருந்து ஒரு வீக்கம் உண்டானது, அது சரியே‚ ஒரு மகளும் கூட இருக்கிறாள். அந்த மகள் ஒருமுறை காச நோயால் அவதியுற்றாள். அவள் தெய்வீக சுகமளித்தலினால் சுகமானாள். இப்பொழுது அவளுக்கு வயிற்றில் நரம்புத்தளர்ச்சி இருக்கிறது. அது உண்மை. அவர்கள் இந்த இரவிலே இங்கே கூட்டத்தில் இருக்கிறார்கள் என்று நான் உணர்கிறேன். அவர்கள் சுகமடைவார்கள். நீங்கள் யார் என்று தேவன் எனக்குச் சொல்ல முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்களுக்கு உதவிசெய்யுமா? சீமோன் பேதுரு யார் என்று அவர் சொல்லக் கூடுமானால்... நீங்கள் ஆர்கன்சாஸ்லிருந்து வருகிறீர்கள். உங்களுடைய பெயர் திருவாளர் பிளேக்வெல். வீட்டிற்குச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். உங்களுடைய வாஞ்சைகள் சந்திக்கப்பட்டது சகோதரனே. 109சீமாட்டியே எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் எத்தியோப்பியராக இருக்கிறீர்கள். நான் ஆங்கிலோ - சாக்ஸன். அது இரண்டு வெவ்வேறான இனமக்கள். வாழ்கையில் முதல் முறையாக சந்திக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். பரிசுத்தஆவியானவர் உன்னுடைய பிரச்சனை என்னவென்று என்னிடத்தில் வெளிப்படுத்துவார் என்றால், பரிசுத்த ஆவியானவருடைய தீர்க்கதரிசிதான் நான் என்று விசுவாசிப்பாயா? விசுவாசம் கொண்டிரு, சந்தேகிக்காதே விசுவாசி. உனக்கு ஒரு மிகப்பெரிய வாஞ்சை இருதயத்தில் இருக்கிறது. நீ உண்மையிலேயே பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்தை தேடிக் கொண்டிருக்கிறாய். அதுசரியே‚ அது தேடுவதற்கு ஒருமிகச் சிறந்த காரியமாக இருக்கிறது. தேவன் ஒரு மனிதனுடைய பெயரை அறிந்திருப்பார் என்றால் அவர் ஒரு ஸ்திரீயுடைய பெயரையும் கூட அறிந்திருக்கிறார். நீ அப்படியாக விசுவாசிக்கவில்லையா? நான் இப்பொழுது பரிசுத்தஆவியினால் நீ யார் என்று சொல்வேன் என்றால், நீ பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளப் போகிறாய் என்பதை விசுவாசிக்கிறாயா? தேவன்உனக்கு உனது வாஞ்சையை கொடுக்கப்போகிறார்...? திருமதி. ஃபிஸ்பட்ரிக், நீ வீட்டுக்குப் போகலாம். இயேசு கிறிஸ்து அந்த ஞானஸ்நானத்தை கொடுக்கப் போகிறார். கடைசி நாட்களிலே... என்று வேதாகமம் சொல்கிறது. ஆபிரகாமின் நாட்களில் கூடாரத்தில் தன் பின்புறத்தைக் காட்டிய மனித மாம்சத்தில் வந்து நின்ற அதே அவர்மேல் நின்ற அதே ஆவியானவர் கடைசி நாட்களில் வந்து இதைச் செய்வார் என்று இயேசு கூறினார். அது சரியாக இருக்கிறதா? 110இங்கே அடுத்த நபர், எனக்குப் பின்புறம் நிற்கிறார். அது ஒரு ஸ்திரீ எனக்கு பின்னால் இருக்கிற உன்னால் கேட்க முடிகிறதா சீமாட்டியே, சரி. அவள் தன்னுடைய தலையை அசைத்தாளா? இங்கே நான் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தர் உன்னுடைய பிரச்சனை என்னவென்று எனக்கு வெளிப்படுத்துவார் என்றால் (இந்த வழியில் பார்க்கிறேன்) அதன்பிறகு அது அதே கர்த்தருடைய தூதன்தான் என்று அறிந்து கொள்வாய், இயேசு சொன்ன அதே வல்லமை இந்த கடைசி நாட்களில் இங்கே இருக்கிறது. நீங்கள் எல்லோரும் அதை விசுவாசிக்கிறீர்களா? உனக்கு ஸ்திரீகளுடைய பிரச்சனை இருக்கிறது. பெண்ணுடைய சிக்கல், பெண்ணுடைய பிரச்சனை. ஸ்திரீகளுடைய பிரச்சனை. வீட்டுக்குச் செல். இயேசு கிறிஸ்து உன்னை முழுவதும் சுகமாக்குகிறார். உன் முழு இருதயத்துடன் விசுவாசி. அங்கே நாற்காலியில் இருதய கோளாருடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களை அவர் சுகமாக்கிவிட்டார் என்று நான் சொன்னேன் என்றால் நீங்கள் விசுவாசிப்பீர்களா? அதன் பிறகு ''கர்த்தாவே உமக்கு நன்றி'', என்று சொல்லி இந்தவிதமாக போய் கொண்டிருக்கத் துவங்குங்கள். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். 111இப்பொழுது அந்த கட்டிக்காக ஒரு அறுவை சிகிச்சைக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். ஆனால் தேவன் உங்களை சுகமாக்கப்போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியே சென்று, 'கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே'' உமக்கு நன்றி என்று சொல்லுங்கள். இப்பொழுது இன்றிரவு உங்களுடைய உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அந்த பழைய வயிற்றுப் பிரச்சனைபோய்விட்டதா? உங்களால் முடியுமா? உங்களுடைய முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்கள் என்றால் முன்னேறிச் சென்று சாப்பிடுங்கள். இரத்தம் மாற்றப்படுவதற்காக என்னுடன் நீங்கள் கல்வாரிக்கு வர விரும்புகிறீர்களா? நீரிழிவு நோயை விட்டொழிக்க விரும்புகிறீர்களா? போய் அதைச் செய்யுங்கள். சரியாக பின்னாடி அங்கே நீரிழிவுடன் உட்கார்ந்துகொண்டிருக்கிற அந்த சீமாட்டி நீங்களும் விசுவாசிப்பீர்கள் என்றால், அதே காரியத்தைச் செய்யமுடியும். சகோதரியே, சென்று உங்கள் முழுஇருதயத்துடன் விசுவாசியுங்கள். சிறிது நேரத்திற்கு முன்பாக உங்களுடைய வயிற்று பிரச்சனை என்று நான் சொன்னபோது, அது உங்களையுமே நீங்கள் கூட சென்று உங்களுடைய உணவை சாப்பிடுங்கள், சுகமடையுங்கள். சரியே‚ பார்ப்பதற்கு மிகப் பெரிய வலுவான அந்த விதமாக இருக்கும் சீமாட்டியே, இன்னும் நரம்புத் தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அது இந்த உலகத்திலே மிக கடினமான காரியமாக இருக்கிறது. இப்பொழுது நீங்கள் விடுபட்டுவிட்டீர்கள். இயேசு கிறஸ்து உங்களை சுகமாக்குகிறார். சென்று முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். 112சிறிய சீமாட்டியே, அந்த ஆஸ்துமா நிலை உன்னைவிட்டு போய்விடும் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீங்கள் நன்றாக இருக்கப்போகிறீர்கள், வீட்டிற்கு சென்று நன்றாக இருங்கள்...அப்படியே நடந்து கொண்டே ''கர்த்தாவே உமக்கு நன்றி'' என்று சொல்லுங்கள். எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் முழு இருயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? உங்களைக் குறித்து என்ன? உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? அப்படியே நடந்து செல்லுங்கள். தேவனை துதித்துக்கொண்டே இருங்கள். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசித்துக் கொண்டிருங்கள். உங்களைக் குறித்து என்ன? இயேசு உங்களை சுகப்படுத்துவார் என்று உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்களா? அப்படியே நடந்துகொண்டே, ''கர்த்தாவே உமக்கு நன்றி“ என்று சொல்லுங்கள். அதை உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். நீங்கள் கூட சரியானீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் மாரடைப்பினால் சாகப்போவதில்லை. நீங்கள் செல்லுங்கள். அதை விசுவாசியுங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். நீங்கள் சுகமாக இருப்பீர்கள். நான் அதை உனக்குச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அதனால், இப்பொழுது அது எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள் சென்று உங்கள் முழுஇருதயத்துடன் விசுவாசியுங்கள். 113எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்கள்? எத்தனை பேர் எல்லா அவிசுவாசத்தையும் தோண்டி எடுத்து எல்லா உலக கிறிஸ்துவ அமைப்பு துண்டுகளையும் வெளியே தள்ளி, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள்? உங்கள் கைகளை ஒருவருக்கொருவர் மேலாக வையுங்கள். இதுதான் உங்களுடைய தீர்மானத்தின் வேளையாக இருக்கிறது. அமைதியாக உட்காருங்கள், ஒவ்வொருவரும் (ஒரு ஸ்திரீ அந்நியபாஷையில் பேசுகிறார், ஒரு மனிதன் அதை வியாக்கியானிக்கிறார்) ஆமென். நான் இதன் ஊடாக உங்களுக்கு என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் என்று பார்க்கிறீர்களா? இந்த ஊழியமானது எலியா மேலே எடுத்துக்கொள்ளப்பட்டு மேலும் எலிசா இரட்டத்தனையான பங்கை பெற்றுக்கொண்டான் என்ற ஒரு மாதிரியாக இருக்கிறது. ஒரு இரட்டத்தனையான பங்கு. இயேசு தாமே தன்னுடைய ஆவியை திரும்பவும் அனுப்பி, ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்'', என்று கூறினார். இந்த ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்களா இல்லையா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. இது மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. அந்நிய பாஷையைப் பேசின ஸ்திரீயே, வியாக்கியானம் செய்த இந்த மனிதனை உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியாது என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். வியாக்கியானம் செய்த அந்த ஒருவர், இந்த ஸ்திரீயைத் தெரியாது என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். (பின்னாடி உள்ள) இல்லை ஐயா. அவர்களில் ஒருவர், ஒருவருக்கொருவர் தெரியாது. 114இங்கே இவர்கள் மிகச் சரியாக செய்தியைக் குறித்தே பேசினார்கள்; உறுதிப்படுத்துதலுக்கு அதை சரியாகக் கொண்டுவந்தார்கள். இங்கே இயேசு இருக்கிறார். இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருக்கிறார். அதைப் போன்ற மற்றொருவரத்தில் இங்கே பேசுகிறார். ஒரு உள்ளுர் வரம். ஒரு தீர்க்கதரிசன வரத்துடன், உள்ளுர் வரத்தின் மூலமாக, அவருடைய வார்த்தையின் மூலமாக பேசுகிறார், அவர் இங்கே இருக்கிறார். ஏன்? என்னே, ஓ, என்னே மகிமை‚ ஒருவர் மேலாக ஒருவர் கரத்தை வையுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான். நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தால் தொடுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுப்பார், ஓ, தேவனே‚ இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால், உங்களுடைய ஆவியினால் இந்த கட்டிடத்தை நனையுங்கள். எல்லா துண்டுகளையும் வெளியே தூக்கி எறியுங்கள். எல்லா பழைய மரக்கட்டைகளையும் வெளியே தூக்கி எறியுங்கள். பரலோகத்தின் தேவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பி மேலும் இந்த சபையை அக்கினியால் எரியச் செய்வீராக. இந்தக்கூட்டத்தில் ஆவிக்குள்ளாகி ஒவ்வொருவரும் நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் சுகம் பெறுவீர்களாக. அல்லேலூயா! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அதைப் பெறுவதற்கு நீங்கள் ஆவிக்குள்ளாக இருக்கிறீர்களா? அது இதுதான். ஒவ்வொரு காரியத்தையும் வழியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதை உங்கள் முழுஇருதயத்துடன் விசுவாசிப்பீர்கள் என்றால் உங்கள் கால்களில் எழுந்து நின்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஏற்றுக்கொள்ளுங்கள். அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள், மகிமை, மகிமை, ஆமென்.